பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 21, 2008

ரஜினிக்கு சத்தியராஜ் தந்த பித்தம்

கமல் பற்றி ஒரு செய்தி( கமலுக்கு கருணாநிதி தந்த முத்தம்) என்றால் ரஜினி பற்றி ஒரு செய்தி போடுவது தான் மரபு :-)சத்தியராஜ் பேச்சு சில பகுதிகள்

அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.
என் பொண்டாட்டி கூட நான் படுக்குறேன் உனக்கு ஏண்டா வலிக்குது. உன் பொண்டாட்டி கூடவா படுகிறேன்.
நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.


ரஜினி பேச்சு சில பகுதிகள்

.....நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் சொன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.
என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள். கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்......குமுதம் ரிப்போட்டர் கட்டுரை
ஒகேனக்கல் பிரச்னைக்காக சென்னையில் சினிமா நட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரதத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய பேச்சை யார் மறந்தாலும், வாட்டாள் நாகராஜ் மறந்திருக்கவே மாட்டார். இந்த நிலையில், ‘ரஜினிக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர் யார் தெரியுமா? வாட்டாள் நாகராஜ்தான்’ என்று நம்மிடம் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார், பெங்களூரு வாசகர் ஒருவர். இவர் சின்ன வயதில் இருந்தே ரஜினி ரசிகராம்.

நமது திகைப்பைப் புரிந்து கொண்ட அவர், ‘‘ரஜினி ஃபேன்ஸ் டாட் காம் (rajinifans. com) என்ற வெப்சைட்டுக்குப் போய் அதில் இடம்பெற்றுள்ள ரஜினியின் ப்ரொஃபைலை (profile) கொஞ்சம் பாருங்கள்’’ என்றார். அடுத்த நிமிடமே நாம் அந்த, வெப்சைட்டில் நுழைந்து, ரஜினியின் ப்ரொஃபைலைத் தேடினோம். ‘ரஜினி ஏ டு இசட்’ என்ற தலைப்பில் ரஜினியின் பிறந்த நாள், கல்யாண நாள், வீடு மற்றும் ராகவேந்திரா கல்யாண மண்டபத் தொலைபேசி எண்களுடன், பிடித்த நடிகர் கமல்ஹாசன், பிடித்த இயக்குநர் கே.பாலசந்தர் என்ற ரீதியில் பல தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

‘ரஜினிக்குப் பிடித்த பேச்சாளர் யார்?’ என்பதை ஆவலுடன் பார்த்தோம். என்ன ஆச்சரியம்? அங்கே ‘வாட்டாள் நாகராஜ்’ என்றுதான் இடம்பெற்றிருந்தது. அந்த வெப்சைட்டில் இடம்பெற்றிருந்த ரஜினியின் வீட்டு போன் நம்பர், அவர் நடித்த படங்கள், வெளிவந்த தேதி போன்றவை மிகத் துல்லியமாக, இருந்ததால், இந்தத் தகவல்கள் அனைத்தும் ரஜினி தரப்பிலிருந்தே வழங்கப்பட்டிருக்கும் என்று நமக்குத் தோன்றியது.

நமக்காக லைனில் காத்திருந்த அந்த வாசகர், ‘என்ன நான் சொன்னதை கன்ஃபார்ம் பண்ணிவிட்டீர்களா? நடிகர் சத்யராஜ், உண்ணாவிரத மேடையில், ‘இங்கே உள்ள ஒரு நடிகர் வாட்டாள் நாகராஜை சிறந்த பேச்சாளர் என்று பெருமையாகப் பேசி வருகிறார்’ என்று ரஜினியை மறைமுகமாகச் சாடினார் இல்லையா? சத்யராஜ் அப்படிப் பேசக் காரணமாக இருந்ததும் இந்த வெப்சைட்தான். உண்மையில் ரஜினிக்குப் பிடித்த பேச்சாளர் வாட்டாள்தானா? நீங்கள் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்’’ என்று கூறி போன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.

உண்ணாவிரதத்தின்போது பலர், வாட்டாள் நாகராஜ் மீது வசைமாரி பொழிந்த போது, ‘‘வாட்டாள் நாகராஜ் சின்ன ஆள். அதற்கு மேலே பேசுவோம்’’ என்று ரஜினி தன் பேச்சைத் தொடங்கியது எல்லோருக்கும் தெரியும். அப்படிப் பேசிய ரஜினி அவருக்குப் பிடித்த பேச்சாளர் என்று வாட்டாள் நாகராஜைக் குறிப்பிட்டிருப்பாரா என்ற சந்தேகம் நம்மை அழுத்த, அண்ணாநகரில் கம்ப்யூட்டர் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் ரஜினிஃபேன்ஸ் டாட் காமின் தமிழக நிருபர் (கரஸ்பாண்டன்ட்) சுந்தரைச் சந்தித்தோம்.

‘‘முதலில் அந்த வெப்சைட் பற்றியும், ரஜினி சார் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டும்’’ என்று தொடங்கிய அவர்,

‘‘இந்த வெப்சைட், ‘படையப்பா’ படம் ரிலீஸ் ஆனபோது உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை இணைப்பதற்காக ஷாஜகான், நடராஜ், ராம்கி, சீனிவாசன் ஆகிய நான்கு பேரால், அவர்களது சொந்தச் செலவில் தொடங்கப்பட்டது. ரஜினி சார் தரப்பில் இருந்து எந்த நிதியுதவியும் வாங்காமல் இந்த வெப்சைட் நடத்தப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் பன்னிரண்டாயிரம் ரஜினி ரசிகர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். அது மட்டுமல்ல, நெட் உலகத்தில் ரசிகர்கள் நடத்தும் மிகப்பெரிய வெப்சைட் இதுதான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சிஃபி டாட் காம் நடத்திய போட்டியில் ரசிகர்கள் நடத்தும் மிகச் சிறந்த வெப்சைட்டாக ரஜினிஃபேன்ஸ் டாட் காம் தேர்வாகியிருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ரஜினி சாரின் உதவியாளர் சத்யநாராயணாவிடம் எங்கள் வெப்சைட்டை காட்டினோம். ‘வெறும் ரஜினி புகழ் பாடாமல் சமுதாயத்துக்கு ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கள். அதைத்தான் தலைவரும் (ரஜினி) எதிர்பார்க்கிறார்’ என்று அவர் அன்புக் கட்டளையிட்டார். அதன்படியே, ரஜினி பிறந்த நாள், திருமண நாளில் இணைய தள ரசிகர்களை இணைத்து ரத்த தானம், அன்னதானம் போன்றவற்றை நடத்துகிறோம். சுனாமி நிவாரணத்துக்காக சத்யநாராயணாவிடம் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினோம்’’ என்றவர், ஒகேனக்கல் பிரச்னைக்கு வந்தார்.

‘‘தமிழகத்துக்குப் பிரச்னைகள் வரும்போது தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி எப்போதும் குரல் கொடுக்கத் தயங்காதவர். ஆனால் இங்குள்ள சிலர் வேண்டுமென்றே ரஜினியை தமிழர்களுக்கு எதிரி என்பது போல சித்திரிக்கிறார்கள். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காக நடந்த உண்ணாவிரதத்தில் ரஜினியைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார் சத்யராஜ். அவருக்கு மேடையிலேயே ரஜினி சாரால் பதிலளித்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் உடனே ரஜினி _ சத்யராஜ் மோதல் என்று செய்தி வெளிவந்திருக்கும். அதைத் தவிர்க்கவே ரஜினி சார் அமைதியாக இருந்துவிட்டார். சத்யராஜ் அவரது பேச்சின்போது, ‘ராகவேந்திரா மற்றும் பாபாஜி போன்ற கடவுள்கள் தமிழர்களுக்கு எதற்கு?’ என்று கேட்டார். இந்த ராகவேந்திரா சாமிகள் புவனகிரியிலும், பாபாஜி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலும் பிறந்தவர்கள் என்பது சத்யராஜுக்குத் தெரியவில்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், எங்கள் ரஜினி சார் நடித்த ராகவேந்திரா படத்தில் சத்யராஜும் நடித்திருக்கிறார்’’ என்றவர், அடுத்ததாக ‘வாட்டாள்தான் தனக்குப் பிடித்த பேச்சாளர்’ என்று ரஜினி கூறியுள்ளாரா?’ என்ற பிரச்னைக்கு வந்தார்.

‘‘ரஜினி சார் பல்வேறு கால கட்டங்களில் அளித்த பத்திரிகை பேட்டிகள், மேடைப் பேச்சு ஆகியவற்றைத் தொகுத்துத்தான் அவரது ப்ரொஃபைலைத் தயாரித்தோம். ரஜினி சார் நடிக்க வந்த புதிதில் பத்திரிகை பேட்டி ஒன்றில் தனக்குப் பிடித்த பேச்சாளர் வாட்டாள் நாகராஜ் என்று கூறியிருந்தார். அதைத்தான் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அதைப் பார்த்து விட்டுத்தான் சத்யராஜ் கிண்டல் செய்துள்ளார்.

உண்ணாவிரத மேடையில் சத்யராஜ் சுயமாகப் பேசவில்லை. யாரோ தூண்டிவிட்டதால் ரஜினிக்கு எதிராகப் பேசியுள்ளார். ‘மன்னன்’ படத்தில் வில்லனைப் பார்த்து ‘வயிற்றெரிச்சல்’ என்று ரஜினி சார் சொல்வார். திரை உலகத்தினர்களில் பெரும்பாலானோர் ரஜினி சாரின் செல்வாக்கையும் புகழையும் பார்த்துப் வயிற்றெரிச்சலில் இருஸ்கிறார்கள். அதனால் அவருக்கு எதிராகப் பேசுகிறார்கள். இருப்பினும் ரஜினி சாரோ அல்லது அவரது தரப்பில் வேறு யாராவது கேட்டுக் கொண்டாலோ வெப்சைட்டில் உள்ள அந்த சர்ச்சைக்குரிய வாட்டாள் நாகராஜ் பெயரை நீக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்று முடித்துக் கொண்டார் சுந்தர்.

வெப்சைட் சர்ச்சை குறித்து ரஜினியின் உதவியாளர் சத்யநாராயணாவிடம் பேசினோம்.

‘‘அந்த வெப்சைட்டை சிலர் சொந்த விருப்பத்தின் பேரில் நடத்துகிறார்கள். ரசிகர் மன்ற நிர்வாகத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அவர்களே தொகுத்துத் தருவதுதான். தனக்குப் பிடித்த பேச்சாளர் வாட்டாள் நாகராஜ் என்று அவர் (ரஜினி) எப்போதாவது கூறியிருக்கலாம். அப்படியே இருந்தாலும் இப்போது அதை வெப்சைட்டில் இடம்பெறச் செய்திருப்பது, ரசிகர்கள் இடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். அந்த வெப்சைட்டை நடத்துபவர்களிடம் பேசி, நீங்கள் கூறிய தகவலை உறுதி செய்தபின்பு உரிய நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்தோம் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்’’ என்றவர், நம் செல்போன் எண்ணைக்குறித்துக் கொண்டார்.

அறிவிப்பளவில் நின்று போய்விட்ட ரஜினியின் ‘ஜக்குபாய்’ பட விளம்பரத்தில் ‘இறைவா... நண்பர்களிடம் இருந்து என்னைக்் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இப்போது ரஜினியை ரஜினி ரசிகர்களிடமிருந்தே காப்பாற்றும் நேரம் போலிருக்கிறது.ரஜினி ரசிகர்களின் வளைத்தலத்தில் இது(மஞ்சள் கலரில் இருப்பது) மட்டும் இப்ப காணவில்லை :-)
Favourite Musician Illayaraja
Favourite Speaker Vattal Nagaraj
Favourite Songs Songs sung by Chandrababu

எதற்கு இந்த தகவலை மட்டும் இப்ப (http://www.rajinifans.com/others/a_z.php) இப்ப எடுக்கணும் ? ரஜினி ரசிகர்கள் பயந்துவிட்டார்களா ?ரஜினி ரசிகர்களின் பதிலடி (http://www.rajinifans.com )
மறுபடியும் ரஜினி ரசிகர்களோடு மோத வந்திருக்கிறது குமுதம். பெங்களுரு வாசகர்(!) போன் செய்ததால் கீழ்ப்பாக்கம் (இருக்க வேண்டிய இடம்தான்!) அலுவலகத்திலிருந்து அண்ணாநகருக்கு அரக்கப் பரக்க ஓடிவந்திருக்க வேண்டிய அவசியமேயில்லை.

குமுதம் அலுவலகத்திலேயே யாரும் கேட்பாரின்றி கிடக்கும் லைப்ரரிக்குள் நுழைந்திருக்கலாம். அங்கே 1979 வருஷம் குமுதம் வெளியிட்ட ரஜினி ஸ்பெஷலை எடுத்து புரட்டியிருக்கலாம்.

பிடித்த பேச்சாளர் வாட்டாள் நாகராஜ். அவர் பேசுதை ரசித்துக்கேட்பேன். அதற்கு மேல் யோசிக்க மாட்டேன் என்று ரஜினி சொன்னதாக குமுதம் சொல்லியிருப்பது அந்த குமுதம் ஸ்பெஷலில்தான்.

ஒரு நடிகருக்காக முதல்முதலாக ஸ்பெஷல் தயார் செய்து அதிலும் ஏகப்பட்ட காசு பார்த்து கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொண்டதை குமுதம் இன்னும் மறந்துவிடக்கூடாது.

ரஜினி எந்த சந்தர்ப்பத்தில், எங்கே, யாரிடம் அவ்வாறு சொன்னார் என்பதை குமுதம் வெளியிடுமா?

அதே பேட்டியைத் தொகுத்து 'ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த்' என்னும் பெயரில் மணிமேகலைப் பிரசுரம் வெளியிடுவதற்கு குமுதம் எப்படி அனுமதித்தது?

மணிமேகலைப் பிரசுரத்துடன் தொடர்புடைய லேனா தமிழ்வாணன்தான் குமுதத்தின் உதவி ஆசிரியர், அவரிடமும் கேட்டு விளக்கத்தை வெளியிடுமா?

இதற்கு பதிலளிக்க வேண்டியது குமுதத்தின் தார்மிக கடமை.

ரஜினி நடிக்க வந்த புதிதில் அவர் கொடுத்ததாக சொல்லப்படும் பேட்டி அது. இன்று வை,கோவின் பேச்சைக் கேட்டு விசிலடிக்குமளவுக்கு ரஜினி பல பேச்சாளர்களின் பேச்சை ரசித்துக் கேட்கும்போது இப்படியோரு தகவல் உண்மைதானா, இப்படியொரு ஸ்டோரி தேவைதானா என்று குமுதம் எடிட்டோரியல் சிந்திக்காததுதான் ஆச்சர்யம்.

தளபதி சத்யநாராயணா, எங்களது சக நண்பர் சுந்தர் ஆகியோரின் எடிட் செய்யப்படாத பேட்டியை வெளியிட்டு நடந்த சம்பவத்துக்கு குமுதம் ரிப்போர்ட்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் குமுதத்தை சட்ட ரீதியாக அணுகுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

பின்குறிப்பு - இதுவரை ரஜினியையும் ரஜினி ரசிகர்களையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த பத்திரிக்கைகளின் அசிங்கமான முகங்கள் அம்பலமாகி வருகின்றன. 1978 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் குமுதம், ரஜினி விஷயத்தில் நடந்து கொண்டது பற்றி ஒரு தொடராக வெளியிட இருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை 'குமுதத்தின் கோலம்' என்ற பெயரில் வெளியாக இருக்கும் செய்தியையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


இந்த வாரம் குமுததில் சில பகுதிகள்
அரசு பதில்கள்
இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?
கண்டிப்பாக. ஏனென்றால், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.


சுஜாதாவின் வீடு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...

இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக் கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள், வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்துவிட்டார்கள். பத்திரிகைகளில் கைக்குட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.


படம்: ரஜினி - நிழலும்-நிஜமும் ( படம் தில்லுமுல்லு :-)

5 Comments:

கிரி said...

ரஜினியின் பெயரை வைத்து இந்த குமுதம் விகடன் சம்பாதித்தது மட்டும் லட்சகணக்கில் இருக்கும். ரஜினி பெயரை போட்டாலே இந்த வார பத்திரிக்கை விற்பனை உயரும் என்று மாதம் இரண்டு முறையாவது குறைந்தது போட்டு காசு பார்த்து வரும் இவர்கள், ரஜினியை பற்றி கூற எந்த ஒரு அருகதையும் கிடையாது. பெங்களூர் ரசிகர் வந்து கூறினாராம்.. உடனே இவங்க ஆச்சர்யம் அடைந்து விட்டாங்களாம் அடடா! பாவம் இவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது பாருங்க...

தமிழ்நெஞ்சம் said...


See more Vattaal's Picture Here...
வாட்டாள் நாகராஜ்'s புகைப்படத் தொகுப்புகள்

Anonymous said...

காலம் மாற மாற பிடித்தவைகளும் பிடிக்காதவைகளும் மாறிப்போய்விடுகின்றன.
மனம் பக்குவப்பட ஆரம்பித்து விடுகிறது. ஒரு காலத்தில் தினத்தந்தியில் கன்னித்தீவு படக்கதையை படிப்பதற்கு ஒருவரோடு ஒருவர் அடித்து கொள்வோம். இப்பொழுது தினத்தந்தியே பிடிக்கவில்லை. ஒரு காலத்தில் தமிழகத்தில் அடுக்கு மொழி பேச்சாளர்களை பிடித்தவர்களுக்கு இப்பொழுது அவர்களை பிடிப்பதில்லை. ஆகவே இளமைப்பருவத்தில் ரஜினிக்கு பிடித்திருந்த பேச்சாளர் இப்பொழுதும் பிடித்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. 28 ஆண்டுகளுக்கு பின் இதை எடுத்து போட்டு துவைத்திருக்க வேண்டியதில்லை. குமுதம் ,சத்தியராஜ் இருவருக்கும் தான் சொல்கிறேன்.

Ravi said...

Many consider our CM Karunanidhi as their fav orator but we know how, many times, his speech was in utter bad taste. But still his oratory skills are appreciated though his fans do not concur with many of his opinions. I think Rajinikanth similarly has every right to mention his favourite orator. Who is Sathyaraj or Kumudam to comment upon that? I think it was a useless effort by Kumudam to dig into this. What is Kumudam proving by doing so? I think as you and other bloggers mentioned, another cheap attempt to boost thier magazine's sale.

rasu said...

http://www.rajinikanth.com/bio-data.htm

you can find vattal name here...