பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 09, 2008

அதிகாரம் தப்பு செய்தால் அதிகாரிக்கும் பங்குண்டு

சட்டவிரோதமான முறையில் குவிக்கப்ப்ட்ட சொத்தில் பயணடைந்த அரசு அதிகாரிகளின் துணைகளும் சமமாக குற்றம் புரிந்தவர்கள் என்று மும்பை நீதிமன்றம் புதன்கிழமை அன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


மும்பை நீதிமன்றத்தில் நீதிபதி வி.ஆர். கிங்கோங்கர் வழங்கிய தீர்ப்பில் வருவாய்க்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கில் அரசதிகாரியின் மனைவியும் குற்றவாளியாக சேர்ககப்பட்டார்.

மங்களாபாய், தன் கணவர் தன் பெயரில் சொத்துகள் வாங்க அனுமதித்ததற்காக அவரை குற்றவாளியாக கருதப்பட்டார். கீழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பை மாற்றி மங்களாபாய் அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் மூன்று வருடம் கடுங்காவல் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மகாராஸ்டிர அரசில் நீர் பாசனத்துறை அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர் வாஹ், சட்டவிரோதமான முறையில் 1984 முதல் 1989 வரை சொத்துகள்
குவித்துள்ளார். துலே விசாரனை நீதிமன்றம் பாஸ்கர் மற்றும் மங்களாபாய் ஆகியோரை சொத்து குவிப்பு தடுப்பு சட்டம் மூலமாக குற்றவாளியாக கருதியது, ஆனால்
இச்சட்டம் தொடக்கத்தில் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தான் பொருந்தியது.
உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டி, அரசு பணியில் இல்லாதோரையும் இச்சட்டத்தில் விசாரிக்கலாம் என்று கூறினார். மும்பை நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அப்படி பார்த்தால் ராஜிவ் காந்தி ஃபோபர்ஸ் ஊழலில் சோனியாவையும் சேர்க்க வேண்டும். :-)

11 Comments:

ILA(a)இளா said...

அப்போ தினகரன் & Co?
சசிகலா &Co?

ILA(a)இளா said...

அப்போ தினகரன் & Co?
சசிகலா &Co?

Kamal said...

//அப்படி பார்த்தால் ராஜிவ் காந்தி ஃபோபர்ஸ் ஊழலில் சோனியாவையும் சேர்க்க வேண்டும். :-)//
இது தான்யா இட்லி வடை குசும்பு!!!! :)))

ஜயராமன் said...

/// அப்படி பார்த்தால் ராஜிவ் காந்தி ஃபோபர்ஸ் ஊழலில் சோனியாவையும் சேர்க்க வேண்டும். :-) ///

ஏதேது, இட்லிவடைக்கு இப்போதெல்லாம் மீசை முளைக்க ஆரம்பித்து விட்டது போலிருக்கே!

ஜயராமன்

bala said...

இட்லி வடை அய்யா,

அடப் பாவி.இந்த லாஜிக் படி பாத்தாக்க 10 ஜன்பத் குடும்பத்தினருக்கு 5 ஆண்டு காலம் தண்டனைனாக்க, நம்ம ஊர் சர்க்காரியா கமிஷன் புகழ், ஊழல் நாயகன் குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனையே கொடுக்கணுமேடா?என்ன கொடுமை இது?

பாலா

சங்கு மாமா said...

மொத தமிழ் நாட்டு அரசியல் வாதிகள், அவர்களின் குடும்பம் எல்லாம் உள்ளே போக வேண்டியது தான்.. பிரெஷ் ஆக ஒரு கட்சி, ஆட்சி அமையுமோ ?

ச்சீ ... சங்கு நாயே ! எழுந்திரு....சும்மா கனவு காணுறதே...வேலையா போச்சு.... மனசுல என்ன ஏ.பி.ஜெ...ன்னு நெனப்பா ?

Anonymous said...

Vijayakanth-MGR photo morphed

Chennai, April 9: MGR’s foster son-in-law K.Vijayakumar (also known as Vijayan) on Wednesday alleged that DMDK chief and film actor Vijayakanth had morphed a photograph to claim proximity to late AIADMK leader MGR. The photograph showing Vijayakanth in close conversation with MGR had formed the backdrop for an interview the star-politician recently gave to Tamil magazine Kumudham.

Mr Vijayan also produced the ‘original’ photograph which showed MGR leaning to have a word with Congress leader late Indira Gandhi. In what appears to be a cutting and pasting job, Vijayakanth has a morphed photograph, that has Ms Indira Gandhi talking to him, in his office. “The photograph was originally taken on January 9, 1981, when MGR had a meeting with the then Prime Minister Indira Gandhi. Mr Vijayakanth, who is a votary of clean politics, has superimposed his own image in the place of Ms Indira Gandhi,” said Mr Vijayan adding, “His claims of providing a corruption-free government if voted to power will not stand public scrutiny if his credentials are questionable.”

Mr Vijayan, a member of the AIADMK and married to one of the foster daughters of the late leader MGR, Ms Sudha, has been taking on the DMDK chief on various issues.
In fact, he was in the forefront of AIADMK’s attack on the DMDK chief’s claim to MGR legacy. He has also questioned Mr Vijayakanth’s claim on owning the late leader’s propaganda van.

However, the DMDK pooh-poohed the charges. L.K.Sudheesh, youth wing secretary of the DMDK, said, “People crossing over to our party from the AIADMK create images of the ‘Captain’ being close to MGR out of love for our leader. They see another MGR in our leader. There are several AIADMK cadres who have joined our party and presented the ‘Captain’ with such images. We keep those pictures in our party office. Nobody has the right to question our right to keep the presents.” Mr Vijayakanth, gearing up for the protest demanding implementation of the Hogenakkal integrated water supply scheme near Dharmapuri collectorate on Thursday, was not available for comments.

http://www.deccan.com/chennaichronicle/home/homedetails.asp

Anonymous said...

மனைவிக்கு மட்டும் தான் தண்டனையா? துணைவிக்கும் தண்டனை உண்டா?

யாத்திரீகன் said...

thats a good move.. indha theerpai vilambara paduthinaalavadhu konjam bayam varuma ?!?!?!

ஜயராமன் said...

/// மனைவிக்கு மட்டும் தான் தண்டனையா? துணைவிக்கும் தண்டனை உண்டா? ////

ஆதியிலே வந்தது, இடையிலே ஏற்பட்டது, இக்கட்டாகி கொண்டாந்தது, மறந்துபோய் ஒத்துகிட்டது என்ற எல்லா வித துணைவிக்கும் உண்டு...

Anonymous said...

உடன் பிறவா சகோதரி / உற்ற துணைவிக்கும் தண்டனை உண்டா?