பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 13, 2008

சாய்பாபாவி‌டம் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு ஆசி பெற்றார்

புட்டபர்த்தில் சாய்பாபாவி‌டம் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு ஆசி பெற்றார்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபாவிடம் நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு ஆசி பெற்றார்.

இன்று காலை 7.30 மணியளவில் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்துக்கு வந்த ரஜினி 8.30 மணி வரை குல்வந்த் ஹாலில் காத்திருந்தார். சாய்பாபா வந்ததும் அவரிடம் ரஜினி தமிழ் புத்தாண்டு ஆசி பெற்றார். அதைத்தொடர்ந்து ஆரத்தி நிழ்ச்சியை காண்பதற்காக பக்தர்களோடு பக்தராக ரஜினியும் காத்திருந்தார். காலை 9.30 மணியளவில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. சமீபத்தில் ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக சென்னையில் தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற ரஜினிகாந்த், தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தமிழனுக்கு பிரச்னை என்றால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்று கூறினார். இதைத்தொடர்ந்து அவர் புது கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் சாய்பாபாவை சந்தித்து ஆசி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது."சிலபேருக்கு கடவுளை பிடிக்காது; ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்" சிவாஜி 175 நாள் விழாவில் ரஜினி பேச்சு ( சும்மா ஒரு Referenceக்கு இங்கே )


"சாய்பாபாவை நேரில் பார்க்க, நான் நான்கு முறை முயற்சி செய்தேன். பெங்களூரில் இரண்டு தடவை. புட்டபர்த்தியில் ஒரு தடவை. இங்கே சென்னையில் ஒரு தடவை. இங்கே வந்தபோது, அவரை நான் சந்தித்தேன். வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுங்க, வருவார் என்று சொன்னார்கள். நானும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன். அவர், பெருந்தலைவர் காமராஜர் `டயலாக்’க்கை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால், அதே சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்தார். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும்."

4 Comments:

சங்கு மாமா said...

பிச்சைக்காரன் வேசத்துல போயியா ??

சம்பந்தியும் சம்பந்தியும் ஒன்று
கொட்டு மேளக்காரன் தனி !

யாரு சம்பந்தி...யாரு மேளக்காரன் ?நல்லா யோசிங்க...புரியும்..

Anonymous said...

Yen vazhi thanee vazhi
enbadai ippadi chutti
kattugiraara?

Sangu mama solradhu puriyudhu;
Nayi vesham pottu kuraikka chonna
thanakku ennannu theriyum ippo,
kuraichavangalukku.

Anonymous said...

சரி . சாய்பாபாவுக்கு கருணாநிதியிடம்
என்ன வேலை ஆகவேண்டி இருக்கு ?
எதுக்கு இவ்வளோ பெரிய மகான்
கடவுள் பக்தி இல்லாத
அந்த ஆளை வீட்ல போய் பாக்கணும்?

வால்பையன் said...

//இவ்வளோ பெரிய மகான்//

எவ்வளோ பெரிய மகான் இங்கே பாருங்கள் தெரியும்!
உங்கள் அடி பத்திரம்

வால்பையன்