பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 13, 2008

டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் மீண்டும் திறப்ப

அரசு அனுமதியுடன் டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் மீண்டும் திறப்பு

சென்னை கதீட்ரல் சாலை யில் அரசுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலம் தோட்ட கலை சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. அரசு இடத் தின் எதிர்புறத்தில் டிரைவ் இன் உட்ண்ட்ஸ் ஓட்டல் செயல் பட்டு வந்தது. காரில் இருந்த படியே சாப்பிடக்கூடிய வசதி இந்த ஓட்டலில் மட்டுமே முதன் முதலில் அறி முகம் செய்யப்பட்டது.

வசதி படைத்தவர்கள், சினிமா துறையை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் இயக்குனர்கள், தொழில் அதிபர்கள், காதலர் கள் இங்கு வருவார்கள்.

பலமணி நேரம் காத்திருந்து காருக்குள் சொகுசாக இருந்தவாறு சாப்பிட வசதி உள்ள இந்த ஓட்டல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்ட்டது. சென்னை பிரமுகர்களை மட்டு மல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களும் இந்த டிரைவ் இன் ஓட்டலுக்கு விரும்பி செல்வது வழக்கம்.

அரசுக்கு சொந்தமான ரூ.1500 கோடி மதிப்புள்ள இந்த இடத்தை தோட்டக் கலை சங்கம் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தோட் டக்கலைத்துறைக்கு சொந்த மான அந்த இடத்தின் இரு வழிகளும் நேற்று முன்தினம் மூடப்பட்டன. இதனால் நேற்று ஓட்டலுக்கு கார்கள், இருசக்கர வாக னங்கள் செல்ல முடிய வில்லை.

இதனால் டிரைவ் இன் சர்வீஸ் நேற்று செயல்படவில்லை. அந்த ஓட்டல் மூடப்படும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை டிரைவ்-இன் ஓட் டல் செயல்படுவதாக அறிவிப்பு வைக்கப்பட்டு இருந்தது. நுழைவு வாசல் மற்றும் வெளியே செல்லும் வாசல் கதவுகள் திறக்கப்பட்டு இருந் தன. உள்ளே கார்களில் இருந்தவாறு உணவு சாப் பிட்டு கொண்டு இருந்த னர். வழக்கம் போல பொது மக்கள் ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டனர்.

இது பற்றி டிரைவ்-இன் உட்லட்ண்ஸ் ஓட்டல் பொது மேலாளர் சர்மா கூறியதா வது:-

அரசின் நடவடிக்கையால் நேற்று ஒரு நாள் மட்டும் ஓட் டல் செயல்படவில்லை. நுழைவு வாசல் அடைக்கப் பட்டு இருந்தன. தற்போது அரசிடம் அனுமதி பெற்று உள்ளோம். இதனால் இன்று முதல் வழக்கம் போல் ஓட் டல் செயல்படும்.

1962-ம் ஆண்டு முதல் இந்த ஓட்டல் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஆதரவுடன் தொடர்ந்து செயல்பட அதற்கான அனு மதியை அரசிடம் பெற்றுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உரிமையாளர் முரளிராவ் இன்று காலை ஓட்டலுக்கு வந்து சில அறிவுரைகளை ஊழியர்களுக்கு வழங்கி சென்றார். கர்நாடக மாநி லத்தை சேர்ந்த இவர் நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலையும் நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் இன்று தோட்டக்கலை வாசலில் அரசு சார்பில் புதிய போர்டு வைக்கப்பட்டுள்ளது. தோட் டக்கலைத்துறைக்கு இந்த இடம் சொந்தமானதுஎன்று அதில் எழுதப்பட்டு இருந்தது
( மாலைமலர் )

0 Comments: