பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 10, 2008

கர்நாடகாவிலும் 'கலைஞர்' டிவி

வாக்காளர்களை கவர்வதற்காக, தி.மு.க.,வை போன்று கர்நாடக காங்., கட்சியும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், பொது மக்களுக்கு இலவச கலர் “டிவி,’ கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும் என்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.


கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், இழந்த ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று காங்., தீவிரமாக உள்ளது. தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பச்சை நிற ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு இலவச கலர் “டிவி’ வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதை காங்., கட்சியின் தேர்தல் வாக்குறுதி கமிட்டி தலைவர் ஜாபர் ஷெரீப் தெரிவித்தார்.

அதே போல், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் கிலோ இரண்டு ரூபாய்க்கு 25 கிலோ அரிசியும், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ரூ. ஆயிரத்து 200 உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் தி.மு.க., கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஏழைகளுக்கு இலவச “டிவி’ மற்றும் கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது, அக்கட்சியின் வெற்றிக்கு பெரிதும் துணை புரிந்தது.

4 Comments:

Anonymous said...

ஐடியா மட்டும் எங்க கோபாலபுரத்திலிருந்து வேணும்.

தண்ணி கேட்டா திறந்துவிட மாட்டானுக. ஒக்கேனக்கல் என்னுதுன்னு வந்து வந்து பிலிம் காட்றாங்கப்பா

இலவச டி.வி, நிலம் ஐடியாவை காப்பி அடிச்சதுக்காகவாவது ஏதாவது ராயல்டி தருமா கர்நாடகா?

இட்லி வடை தலைமையில் ஒரு போராட்டம் அறிவிக்கப் போறேன்

natwasteraj said...

கற்றுக் கொடுக்கும் இனம் தமிழ் இனம் ------வீர பாண்டிய கட்டபொம்மன்

சங்கு மாமா said...

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.

யாரு மங்கா ? யாரு தேங்கா ன்னு புரியுதா ?

Anonymous said...

the same type of freebees offered by congress in guj election but failed to gain any advantage like that in karnataka too con going to get the same type of treatment. ALL CAN FOOL ONLY TAMILIANS BECAUSE THEY ARE TOO EAGAR FOR OC'S AND NOT AWARE OF HIS MONEY PURSE BEING PICKPOCKETED IN THE PROCESS