பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 16, 2008

'வணக்கம்மா' பட பூஜைக்கு போலீஸ் தடை

இந்து கடவுளை அவமதித்ததாக புகார்; நடிகர் சரவணன் பட பூஜைக்கு போலீஸ் தடை


'வணக்கம்மா' என்ற பெயரில் புது படம் தயாராகிறது. சரவணன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மதன்பாப், தியாகு, விஷ்ணுப்பிரியன் ஆகியோர் நடிக்கின்றனர். சுவாதி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்துக்காக ராமன், அனுமன் வேடத்தில் அச்சிடப்பட்டிருந்த அழைப் பிதழ்களும் போஸ்டர்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்துக்கடவுள்களை அவ மதிப்பதாக இந்து முன் னணியினர் எதிர்ப்பு தெரி வித்தனர்.

இந்த படத்தின் தொடக்க விழா பூஜைக்கு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இன்று காலை ஏற்பாடுகள் நடந்தன. அங்கு பேனர், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. கொடி, தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன. விழா வில் பங்கேற்க சினிமா பிரபலங்கள் குவிந்தனர்.

இவ்விழாவை கண்டித்து இந்து முன்னணியினரும் அங்கு திரண்டார்கள். இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்ததும் போலீ சார் விரைந்து சென்று வணக்கம்மா பட பூஜைக்கு தடை வித்தனர். இதை யடுத்து பட விழா ரத்து செய்யப்பட்டது.

படத்துக்காக அச்சிடப் பட்டிருந்த போஸ்டர்களை போலீசார் பறிமுதல் செய் தனர். சில இடங்களில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களும் கிழிக்கப்பட் டன.

இதுகுறித்து "வணக் கம்மா'' பட இயக்குனர் எஸ்.என்.அரிராம் :


"உயிரோசை'' என்ற பெயரில் ஏற்கனவே படம் எடுத்து சிறந்த கதைக்காக அசரிடம் இருந்து விருது பெற்றேன். அப்படிப்பட்ட நான் பிறர் மனதை புண் படுத்தும்படி படம் எடுக்க மாட்டேன்.

"வணக்கம்மா'' படத் தில் சரவணனும், விஷ்ணுப் பிரியனும் மற்றவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ராமன், அனுமான் வேஷம் போடுகின்றனர். கடவுள்கள் பற்றி எந்த விமர்சனமும் படத்தில் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகளும் இல்லை. போலீஸ் கேட்டுக் கொண்டதால் பிரச்சினை வேண்டாம் என்று பட பூஜையை ரத்து செய்து விட்டோம். இன்னொரு நாள் விழா நடைபெறும்.
படமே கடவுள் மறுப்பு என்று வந்த பிறகு இந்த படத்துக்கு எதுக்கு பூஜை ? படத்தின் இயக்குனர் பெயர் - அரிராம் :-)17-4-08 அப்டேட்
இது குறித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சினிமாத்துறையில் ஒரு சிலரின் இந்து மத விரோத செயலின் தொடர்ச்சியாக இந்துக்கள் புனிதமாக போற்றி வணங்கும் ஸ்ரீராமர், ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் தெருவோரத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சியுடன் அச்சிடப்பட்டு `வணக்கம்மா` என்ற திரைப்படத்தின் தொடக்க விழா நடைபெறுவதாக உள்ளது.

திரைப்பட துறையில் காமெடி என்ற பெயரில் இந்துக்கடவுள்களை மட்டும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். அந்த அழைப்பிதழை வெளியிட்டதற்காக தயாரிப்பாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8 Comments:

ஜயராமன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
IdlyVadai said...

This comment has been removed by the author.

ஜடாயு said...
This comment has been removed by a blog administrator.
ஜடாயு said...

எந்தக் கலை நயமும் இன்றி, படைப்புத் திறன் வெளிப்பாட்டிற்கான தேவையும் இன்றி, இந்து தெய்வ அவதாரங்களை ஏளனம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உருவாக்கப் பட்டிருந்தன அந்த பேனர்கள்.

காவல் துறை உடனடியாக செயலில் இறங்கி தடுத்து பாராட்டுக்குரியது.

படவிழா நடக்கும் இடத்திற்கே சென்று முற்றுகையிட்ட இந்து முன்னணியினரின் செயல்திறன் வாழ்க! தமிழ்நாட்டில் இன்னும் மானமுள்ள இந்துக்கள் இருக்கிறார்கள் என்று நிரூபித்திருக்கின்றனர் இ.மு தொண்டர்கள்.

தங்கள் பதிவின் மூலம் இணையத்தில் இது பற்றிய செய்திகளைத் தந்ததற்கு நன்றி.
( edited )

ஜயராமன் said...

இது எதிர்பார்த்ததுதான். இவ்வளவு அருவருப்பான ஒரு பொருள் இறை-மறுப்பாளர்களுக்கு கூட ஏற்கமுடியாததாக இருக்கும் என்பது உண்மை.

இந்த பட தயாரிப்பாளருக்கே இந்த திரைப்படத்தை இவ்வடிவத்தில் செய்ய முடியாது என்பது தெரிந்திருக்கும். ஒரு மலிவான ஈன ஆசையின் விளைவாக செய்யப்பட்ட ஒரு வக்கிர நடவடிக்கை இது.

இட்லிவடையின் குமுறல் இணையத்தில் எழுந்து பிறகு நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைத்து சந்தோசப்படலாம்.
(edited)
நன்றி

ஜயராமன்

IdlyVadai said...

சில பின்னூட்டங்கள் அனுமார் வால் போல் வளரும் என்று டெலீட் செய்திருக்கிறேன்.
புரிந்துக்கொண்டதற்கு நன்றி
இட்லிவடை

IdlyVadai said...

இது குறித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சினிமாத்துறையில் ஒரு சிலரின் இந்து மத விரோத செயலின் தொடர்ச்சியாக இந்துக்கள் புனிதமாக போற்றி வணங்கும் ஸ்ரீராமர், ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் தெருவோரத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சியுடன் அச்சிடப்பட்டு `வணக்கம்மா` என்ற திரைப்படத்தின் தொடக்க விழா நடைபெறுவதாக உள்ளது.

திரைப்பட துறையில் காமெடி என்ற பெயரில் இந்துக்கடவுள்களை மட்டும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். அந்த அழைப்பிதழை வெளியிட்டதற்காக தயாரிப்பாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.