பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 29, 2008

மன்மோகன் சிங் இது நியாயமா ?

டி.ஆர். பாலு நிறுவனத்துக்கு எரிவாயு ஒதுக்கக் கோரும் கடிதம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டதை காங்கிரஸ் கட்சி நியாயப்படுத்தி உள்ளது. இதைவிட கேவலமாக பிரதமர் அலுவலகம் செயல் பட முடியாது. இருக்கும் நல்ல கொஞ்சம் நல்ல பெயரை முழுவதும் கெடுத்துக்கொண்டு தான் போவேன் என்று சபதம் போட்டிருக்கும் பிரதமரை நாம் என்ன செய்ய முடியும் ? ..

ஒரு கடிதம் நமக்கு வருகிறது என்றால் உடனே அதை படித்துக்கூட பார்க்காமல் "பார்வர்டு" செய்வோமா ? முட்டாள்கள் தான் இந்த மாதிரி செய்வார்கள். பிரதமர் அலுவலகம் "பார்வர்டு" செய்தால் அது சிபாரிசு என்று தானே அர்த்தம். சம்பந்தபட்ட துறைக்கு கடிதத்தை அனுப்பியதாலேயே கடிதத்தில் பாலு எழுதியவற்றுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துவிட்டதாக அர்த்தம் கிடையாது என்றார் சிங்கவி. நல்ல ஜல்லி.

உதாரணத்துக்கு எனக்கு ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினால் உடனே அதை சம்பந்தபட்ட துறைக்கு "பார்வர்டு" செய்வார்களா ?

எரிவாயு ஒதுக்கீடு செய்வதில் பிரதமர் அலுவலகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பொதுவாழ்க்கையில் நேர்மை என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்று சிங்வி கூறினார். என்ன காமெடி பார்த்தீர்களா ?

தனது மகன் நிறுவனத்துக்கு எரிவாயு ஒதுக்குமாறு டி.ஆர். பாலு எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகம் வழியாக எரிவாயு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து 8 நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே இது குறித்து பிரதமர் விளக்கம் அளிப்பது மன்மோகன் சிங் கடமையாகும். பார்க்கலாம்.

நேற்று ஒரே ராக்கெட் மூலம் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது 'இஸ்ரோ'. அடுத்த முறை இது போன்று எல்லா எம்.பிக்களையும் ஒரே ராக்கெட்டில் விண்ணில் செலுத்தினால் அது இந்தியாவிற்கு நல்லது.

15 Comments:

Anonymous said...

Prime minister office can forward anything to anywhere, but it doesnt mean that PM office approves or recommends the information it forwards. It is sole responsibility of the forwarded department to review it. However i am not justifying what TR Balu did, but your comments about PM office is not right.

IdlyVadai said...

அனானி,
சரி.
பிரதமர் அலுவலகத்திலிருந்து 8 நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதற்கும் இதே விளக்கம் தானா ?

பிரதமர் உடனே பதில் சொல்ல முடியவில்லை என்பதிலிருந்தேன் தெரியவில்லையா அவர் செய்தது தப்பு என்று ?

Sethuraman said...

Ido not agreewith anonymous's comment. The PMO incidentally is governing the country, and if they are so stupid what can you expect?
If the PMO is real good administrator it should have returned the request from Baalu to him and asked him to approach the Petroleum Ministry direct without seeking any recommendations!! Baalu has proved he is no saint and we do not know whatother benefits he and his family will inherit from the sethu project!!

Anonymous said...

Ok, i tend to agree with you here, but the follow up can be done by any T.R.Balu's connection at the PM office. I dont think PM practically has no time to do these things.

Anonymous said...

It means that pm post is just like a office boy.

Anonymous said...

PMO, normally, forwards any representation/petition/grievance received by it from public/VIPs to the concerned Ministry for comments and appropriate action. If the matter is of utmost importance and if the reference is made by a high dignitary/MPs personally addressed to him, PM himself, if he deems necessary, through demi-official letter forwards the reference to the concerned Ministry for appropriate action. But, it is not always necessary that requests forwarded by PMO receive favourable consideration.

But, in this instance, why the PMO has kept mum for a good ten days to react, if the reference received from Baalu was indeed forwarded in routine manner. If what has been reported is right, meetings had been arranged by Petroleum Minister with GAIL etc. and the proceedings were on record and eventually the firm in which Mr. Baalu has stakes had been favoured.

Anonymous said...

PMO, normally, forwards any representation/petition/grievance received by it from public/VIPs to the concerned Ministry for comments and appropriate action. If the matter is of utmost importance and if the reference is made by a high dignitary/MPs personally addressed to him, PM himself, if he deems necessary, through demi-official letter forwards the reference to the concerned Ministry for appropriate action. But, it is not always necessary that requests forwarded by PMO receive favourable consideration.

But, in this instance, why the PMO has kept mum for a good ten days to react, if the reference received from Baalu was indeed forwarded in routine manner. If what has been reported is right, meetings had been arranged by Petroleum Minister with GAIL etc. and the proceedings were on record and eventually the firm in which Mr. Baalu has stakes had been favoured.

Anonymous said...

திரு. வாஜ்பாய் அவர்களின் ஆட்சியின் பொழுது பீகாரில் ஒரு engineer தங்க நாற்காலி திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார். அதை அப்படியே ஊழல் செய்தவர்களுக்கே அனுப்பி அவரை படுகொலை செய்ததில் திரு. வாஜ்பாய் அவர்களுக்கு பங்கு உண்டா??

Tharuthalai said...

சிங்கப்பூரில் தொகுதி எம்.பி-ஐ நேரில் பார்த்து மனு கொடுக்கலாம். தொடக்கப்பள்ளியில் இடம் கேட்பதிலிருந்து நிரந்தரகுடியிருப்புக்கான பரிந்துரை வரை எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதை அந்த எம்.பி அந்தந்த துறைகளுக்கு தனது முத்திரையுடன் அனுப்பி வைப்பார். சம்மந்தப்பட்ட துறைதான் ஆய்ந்து அதில் முடிவெடுக்கும். துறை எடுக்கும் முடிவுகளில் யாரும் கேள்வி கேட்க முடியாது. வேன்டுமென்றால் மீண்டும் மீண்டும் கடிதம் கொடுக்கலாம் அதையும் அந்த எம்.பி அனுப்பி வைத்துக்கொண்டே இருபார். துறை சம்மந்த்ப்பட்டவர்களிடம் எம்.பி கடிதம் வந்ததா என்று விசாரித்தால் அனைத்து மனுவும் கிடைத்தன, உங்கள் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என்ற பதில் வரும்.

இது சிங்கப்பூரில் மட்டுமல்ல, பெரும்பாலான நாடுகளில் உள்ள நடைமுறை.

இது ப்ஆலுவுக்கு ஆதாரவான பதில் அல்ல. ஆனால் பிரதமர் செய்ததது தவறு என்று சித்தரிக்கும் மனப்பான்மை - ஒன்று கிணற்றுத் தவளையாக இருக்க வேண்டும் அல்லது சோமறித்தனமாக இருக்க வேண்டும்.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

வால்பையன் said...

இது வெளிய தெரிஞ்சுருக்கு, இது மாதிரி இன்னும் எத்தனை சலுகை தி.மு.க கம்பெனிக்கு போச்சோ!

தி.மு.காவுக்கு போட்டைன்னா ஒட்டு
உனக்கு நீயே வச்சுக்கிட்ட வேட்டு

வால்பையன்

Anonymous said...

No one questions about PMO forwarding the references received by it to the concerned departments. As a matter of fact, they should do that and in fact the practice being followed by many countries including India, not just in Singapore. Here, conflict of interest is involved. The firm in which Mr. Baalu and his kins is having stakes is involved.

VIJI said...

@வால்பையன்

///தி.மு.காவுக்கு போட்டைன்னா ஒட்டு
உனக்கு நீயே வச்சுக்கிட்ட வேட்டு //

u r right :)

Anonymous said...

அட அறிவு கெட்ட அநாநியே பொது மக்களின் குறைகள் சார்பாக பொது நல மனுக்களை பி எம் ஆபீஸ் எத்தனை முறை வேண்டுமானாலும் சிபாரிசு செய்து அனுப்பலாம் ஆனால் இங்கு சிபார்சி கேட்ப்பது பாலு அவனது சொந்த கம்பெனிக்கு அதில் நிறுவனர்களும் பங்குதாரர்களும் அவனும் அவனது பொண்டாட்டியும் அவனது வைப்பாட்டியும் அவனது பிள்ளை குட்டிகளும். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கம்பெனி. அத்தனையும் இவனது கட்சி பதவி, மந்திரி பதவியின் பவர் வைத்துப் பெற்றது. அதிகாரத் துஷ்பிரயோகத்தால் சேர்த்த சொத்து. இப்பொழுது இவனது அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு மன்மோகனும் உடந்தை என்பது உறுதியாகி விட்டது இரண்டு பேரையும் சிறையில் தள்ள வேண்டும் இருவருக்கும் ஓட்டுப் போடும் மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்

Anonymous said...

//இது ப்ஆலுவுக்கு ஆதாரவான பதில் அல்ல. ஆனால் பிரதமர் செய்ததது தவறு என்று சித்தரிக்கும் மனப்பான்மை - ஒன்று கிணற்றுத் தவளையாக இருக்க வேண்டும் அல்லது சோமறித்தனமாக இருக்க வேண்டும்
//

"நாம எவ்வளவு ஊழல் பண்ணாலும் நமக்கு ஆதரவவே இருகானுகளே ....இவனுக ரொம்ப நல்லவனுகட !!" please read it in Vadivelu accent :)))"

TR பாலு ஒண்ணும் ஒரு போடுனல்லன் சம்மந்த பட்ட கம்பெனி இக்கு மனு கொடுகிள்ள...அவரோட சொந்த கம்பெனி இக்கு தான் கொடுதுஇருகறு..

அதோட உங்க கூற்று படியே பாத்தாலும் அந்த மனு முரளி தேவர இக்கு போனுமே ஒழிய ONGC போகக்கூடாது ! புரியுதா ?

அதோட சலுகை விலைஇல்ல ஆயில் சப்ளை பண்ண சொல்லி நிற்பந்திக முடியாது


-Subbu

Anonymous said...

இது மாதிரி இன்னும் எத்தனை சலுகை தி.மு.க கம்பெனிக்கு போச்சோ!

Some of the visible ones to the DMK company apart from TRBaaDu episode are: MP post and Minister berth for Dayanidhi MORON, MP post for Ka(e)n(e)iMuzhi, etc etc...