பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 24, 2008

நளினி-பிரியங்கா சந்திப்பு - சோ கருத்து

கேள்வி : சமீபத்தில் (மார்ச் 19) தமிழகத்திற்கு ரகசியமாக வந்து சென்ற பிரியங்கா, வேலூர் சிறைச்சாலைக்குச் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நளினியைச் சந்தித்துச் சென்றதாக வரும் செய்தி பற்றி? ...


பதில் : இது தொடர்பான செய்திகளை அவரே உறுதி செய்துவிட்டார்.

சிறைச்சாலை விதிகள் பல மீறப்பட்டு, இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது; இதற்கு அரசும் துணை போயிருக்கிறது என்பது கவலைக்குரியது. அரசின் பொறுப்பற்றத் தன்மையைக் காட்டுவது இது. இது இருக்கட்டும்.

ராஜீவ் காந்தி கொலை என்பது, பிரியங்காவை மட்டும் பாதிக்கிற விஷயமல்ல.
இந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அதற்கு உதவுகிற வகையில் தமிழகத்தின் நிலை அப்போது இருந்ததும், இப்போதும் கூட அந்த கொலைகாரக் கூட்டத்தினர் தமிழகத்தில் உலவி வருவதும், அவர்களுக்குப் பலர் ஆதரவு தெரிவிப்பதும் – பொதுப்பிரச்சனைகள்.
ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் போலவும், அதில் ஓரிருவர், "பெருந்தன்மை'யைக் காட்டினால், குற்றமே அழிக்கப்பட்டது போலவும் தோற்றம் ஏற்படுவது சரியல்ல.

ஆகையால், பிரியங்கா தனிப்பட்ட முறையில் நடத்தின சந்திப்பாக இதை வர்ணிப்பது, ஏற்புக்குரியதல்ல. நாட்டின் சட்டத்தினால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர், சோனியா காந்தியின் "கருணை'யினால், காப்பாற்றப்பட்டார்; அது தாய் காட்டிய "கருணை' என்றால், இப்போது மகள் காட்டிய "மனிதாபிமானம்', கொலைக்குற்றம் செய்தவருக்கு ஒரு அந்தஸ்தைப் பெற்றுத் தருகிறது. விரும்பத்தகாத இந்த "கருணை'யும், "மனிதாபிமானமும்', பல கேள்விகளுக்கு இடம் தரக்கூடியவை. அதுவுமின்றி, நளினி கூட்டத்தாரால் உயிரிழந்தது ராஜீவ் காந்தி மட்டுமல்ல; அவரைத் தவிர சில போலீஸ்காரர்கள்; ஒரு சிறுமி உட்பட 15 பேர் கொலையுண்ட சம்பவம் அது. இவர்கள் சார்பாக "கருணை' காட்ட, சோனியா காந்திக்கு என்ன உரிமை இருக்கிறது – என்ற கேள்வியை அப்போதே நாம் எழுப்பினோம். இப்போது மகள் பொழிகிற மனிதாபிமானமும், பெருந்தன்மைத் தென்றலும், அந்த 15 பேர் கொலையையும் மன்னித்துவிடுகிறதா? இவர் என்ன நீதி தேவதையா?

இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது திடீரென உண்மையைத் தேடி, குற்றவாளியிடம் போக வேண்டிய அவசியம், ஏன் பிரியங்காவுக்கு வந்தது? மனிதாபிமானம் என்பது ஒரு போர்வையாகத் தெரிகிறதே தவிர, உண்மை காரணமாகத் தெரியவில்லை. நளினியின் கணவர் முருகன், ராஜீவ் கொலை தொடர்பாக ஒரு புத்தகம் எழுதுவதாகவும், அது பிரசுரமானால் சிலர், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் வரும் – என்ற செய்தி வேறு வருகிறது.

3 Comments:

raam said...

கருணை மனிதாபிமானம் இதெல்லாம் புசுக் புசுகேன்று தோன்றுகிறது? சோ சொல்வது சரி தான்.. ராஜீவ் காந்தி செத்தாலும் சாவுதான் ரமேஷ் செத்தாலும் சாவு தான்.. இவங்க மன்னிச்சால்?சரியாயிடுமா? அரசியல் ..இவ்ளோ நாள் தேவதை எங்க இருந்தாங்க? ..

Anonymous said...

I do not agree with cho's view on this.

mani

Anonymous said...

சோ சொல்வது முற்றிலும் சரி