பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 21, 2008

துக்ளக் எச்சரிக்கை பகுதி

இந்த பதிவுகளுக்கு தொடர்புடைய துக்ளக் எச்சரிக்கை பகுதி
கலைஞரே இது நியாயமா ?
மொய்லி இது நியாயமா ?

"காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சொல்லித்தான், தமிழக முதல்வர், ஹொகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒத்தி வைத்தார்' என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி சொல்லிவிட, கலைஞருக்கு தர்மசங்கடம் ஏற்பட, அடுத்த தினமே வீரப்ப மொய்லி, பல நிருபர்கள்
முன்னிலையில் தான் சொன்னதை, இல்லை என்று கூறிவிட்டார். சரி, ஏதோ ஒரு சமாளிப்பு. இருக்கட்டும்.

ஆனால், வீரப்ப மொய்லிக்கும் முன்பாக, மற்றொரு கர்நாடக காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா இதையே சொன்னாரே?

"நான் டெல்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன்..... இதைத் தொடர்ந்து பிரதமரும், சோனியா காந்தியும் கருணாநிதியுடன் பேசி, இப்போது அத்திட்டத்தை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்'

இது கிருஷ்ணா 5.4.2008 அன்று கூறியது; தினமணியில் 6.4.2008 அன்று இது வெளியானது; அதற்கு முன்பாகவே சில டெலிவிஷன் சேனல்களிலும் அவரே நேரில் இதைக் கூறியதைப் பார்க்கவும் முடிந்தது.

அவர் தனது பேச்சை மாற்றவில்லையே? காங்கிரஸ் தலைமையும், பிரதமரும் கூறித்தான், கலைஞர் ஹொகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்பதைப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்த கிருஷ்ணாவின் சாட்சியம் அப்படியே இருக்கிறதே? மன்றாடிக் கேட்டும், மறுப்பு வெளியிட அவர் மறுத்துவிட்டாரோ

1 Comment:

Anonymous said...

தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவைகளுக்கு ஒரு பிரச்சினையில் ஒரே கொள்கை தான் இருக்க வேண்டும். அந்த கட்சிகளின் மாநிலப்பிரிவுகள் ஒரு மாநிலத்தில் ஒரு கொள்கையும் வேறு மாநிலத்தில் வேறு கொள்கையும் என்று ஒரே பிரச்சினையில் வெவ்வேறு கொள்கைகளை கடைப்பிடிப்பது மக்களை ஏமாற்றுவதாகும். பாஜகவுக்கு வக்காலத்து வாங்கும் துக்ளக் மேற் கூறிய ஏமாற்று வேலைக்கு என்ன பதில் சொல்கிறது?