பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 21, 2008

லாஜிக் உள்ள மேஜிக்!


கலைஞர் டிவி ஆரம்பித்த புதிதில் எல்லா நிகழ்ச்சிகளையும் சன் டிவியிலிருந்து அப்பட்டமாக காப்பி அடித்தார்கள். ஆனால் சன் டிவி கலைஞர் டிவியிலிருந்து ஒன்றை காப்பி அடித்தது என்றால் அது 'லாஜிக் உள்ள மேஜிக்!' என்ற நிகழ்ச்சி.

லாஜிக் இல்லா மேஜிக் எஸ்.ஏ.சி. வஸந்தின் பேட்டி ( நன்றி: தினமணி கதிர் )


வித்தை: லாஜிக் உள்ள மேஜிக்!
(தமிழ்மகன்)

""இந்தியாதான் மேஜிக் சுவாரஸ்யத்தின் பூர்வீகம். இன்னமும்கூட மோடி மஸ்தான் வித்தை என்று அழைக்கப்படும் மகுடி இசைக்கு ஏற்ப மேலே உயரும் கயிறு மேஜிக் பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது'' என்று பிரமிக்கிறார் லாஜிக் இல்லா மேஜிக் எஸ்.ஏ.சி. வஸந்த்.

கலைஞர் டி.வி.யில் முதன் முதலில் மேஜிக் தொடரை நிகழ்த்தி மக்களைப் பரவசப்படுத்தியவர் வஸந்த். கோவையில் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் அவரை, இந்த வார நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காகச் சென்னை வந்த போது சந்தித்தோம்.

நடுத் தெருவில் பல நூறு பேருக்கிடையில் நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள். ஒருவரின் கையில் உள்ள கைகடிகாரத்தை எல்லோர் கண்ணுக்கும் பூச்சாண்டி காட்டிவிட்டு உங்கள் கைக்குக் கொண்டு வந்துவிடுகிறீர்கள். சொதப்பிவிடப் போகிறோம் என்ற அச்சம் இருந்திருக்கிறதா?

கற்கும் நேரத்தில் அந்தப் பயம் எல்லாம் இருந்தது. சொதப்ப மாட்டோம் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் நிகழ்ச்சியை நடத்த வந்தேன்.

இருந்தாலும் மேஜிக் நிகழ்ச்சியைத் தெருவில் வைத்து நடத்துவது சவாலான விஷயம்தான். மேடைகளில் தேவையான வெளிச்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு செய்வதில் மக்களுக்கும் கொஞ்சம் நம்பகத்தன்மை குறைவாகத்தான் இருக்கும். நம் பாரம்பர்ய ஸ்ட்ரீட் மேஜிக்கான ரோப் ட்ரிக் இன்றும்கூட பல உலக புகழ் பெற்ற மேஜிக் நிபுணர்களுக்குச் சவாலாகத்தான் இருக்கிறது. டேவிட் காப்பர் ஃபீல்ட் போன்றவர்களே இதைச் சொல்லியிருக்கிறார்கள். சுருட்டி வைக்கப்பட்ட கயிறு மகுடி இசைக்கு ஏற்ப மேலே உயர்கிறது. அந்தக் கயிறைப் பிடித்துக் கொண்டு ஒரு சிறுவன் மேலே ஏறுகிறான் என்றால் அதுதான் மேஜிக் நிபுணர்களுக்கு உண்மையான சவால்.

ஏன் நீங்கள் அதைப் பயில முடியவில்லையா?

மேடையில் சிறிய அளவில் செய்திருக்கிறேன். இன்னும் சில உத்திகள் சேர்த்து பிரம்மாண்டமாக அதை அரங்கேற்றுவேன்.

மேஜிக் உலகில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. பல லட்சம் பேர் முன்னிலையில் தாஜ்மகாலை மறைத்தார், ரயிலை மறைத்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவை சாத்தியமா? உண்மையா?

நிறைய சொல்கிறார்கள். அவர் செய்ததை இவர் செய்தார் என்றும் இவர் செய்ததை அவர் செய்தார் என்றும் நிறைய குழப்படிகள் அதில் இருக்கின்றன. ஒரிஜினில் பி.சி. சர்க்கார் பல சாதனைகள் செய்திருக்கிறார். சில மேஜிக்குகள் மிகைப்படுத்தியும் சொல்லப்படுகின்றன. ஜப்பானில் ஒரு நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்ததாகவும் எல்லோரும் இந்தியர்களின் நேரம் தவறாமையைக் கிண்டல் செய்தபோது பி.சி. சர்கார் ஒரு மேஜிக் செய்து அரங்கில் இருந்த அத்தனை பேர் கை கடிகாரத்திலும் சரியான நேரம் இருப்பதுபோல் செய்தார் என்பார்கள். அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் அதே போன்றதொரு மேஜிக்கை நான் செய்தேன். ஒருவருடைய கைகடிகாரத்தை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டு, இன்னொருவரின் வாட்சில் அதே நேரத்தை உருவாக்கிக் காட்டினேன். நடிகர் கரண் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் இருந்து வாங்கிய ரூபாய் நோட்டில் சிகரெட் கங்கால் ஓட்டை போட்டு காட்டி மீண்டும் அதே நோட்டை நல்ல நோட்டாக மாற்றிக் காண்பித்தேன். மிகவும் ஆச்சர்யப்பட்டார். கார் ஒன்றை மறைப்பது போல் நிகழ்ச்சி ஒன்றை விரைவில் செய்து காட்ட இருக்கிறேன்.

உங்களுக்கே மிகவும் சவாலாக இருந்த நிகழ்ச்சி எது என்று சொல்ல முடியுமா?

நிகழ்ச்சி என்று எடுத்துக் கொண்டால் எல்லாமே சவால்தான். ஒருமுறை காவல்துறையைச் சேர்ந்த பெண்மணி ஒருவரை நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்தேன். மக்கள் முன்னிலையில் அவர் தேர்ந்தெடுத்த சீட்டுக்கட்டு கார்டை காட்டச் சொன்னேன். மீண்டும் அதை எண்ணிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். பிறகு அவருடைய ஷூவைக் கழற்றச் சொன்னேன். அவருடைய ஸôக்ஸýக்குக் கீழே அது ஒட்டிக் கொண்டிருந்தது. அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

டேவிட் காப்பர் ஃபீல்டு போன்றவர்கள் தொலைக்காட்சி மூலமாகவே மேஜிக் நிகழ்த்தி நம் வீட்டில் இருக்கும் ஸ்பூனை வளைப்பது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அது எப்படிச் சாத்தியம்?

தொழில் ரகசியம் சார். நான் கூட இந்தத் தொலைக் காட்சியின் முடிவில் டெலி மேஜிக் என்ற பிரிவில் மேஜிக் நிகழ்ச்சி செய்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் அருகில் இருப்பவர்களைப் பார்த்தபோது முகம் நெளிந்து தோன்றுவது போல் செய்தேன். இல்யூஷன் வகை மேஜிக் இது. பார்வையைக் குழப்பிவிடுவதுதான் இதன் அடிப்படை. நிகழ்ச்சியின் பெயர்தான் லாஜிக் இல்லா மேஜிக். ஆனால் எல்லா மேஜிக்குக்கும் லாஜிக் உண்டு.

இந்தக் கலையை எங்கு படித்தீர்கள்?

9 ஆண்டுகளாகப் பயின்று வருகிறேன். இன்னமும் நான் மாணவன்தான். பயின்றபடிதான் இருக்கிறேன்.

அடுத்த கட்ட முயற்சிகள் பற்றி...?

பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்தார் இந்த வாரம் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். விரைவில் பி.பி.சி.யில் என்னுடைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. வெப் டி.வி. மூலமாக நேரடியாக நிகழ்ச்சியை ஒளிபரப்பும் நிகழ்ச்சி இது. மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சியாக இது அமையும்.

இந்த மாதிரி மேஜிக் எப்படி செய்கிறர்கள் என்று யாருக்காவது தெரியுமா ?

4 Comments:

Kumaran said...

சிறிய சிறிய மேஜிக் களை அவரே ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியின் முடிவில் கற்று தருகிறார்..

Anonymous said...

ஒரு கொசுறு செய்தி !
ஜேம்ஸ் வசந்தன் ஒரு மேஜிக நிபுணர் என்று தான் பல பேருக்கு தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த பாடகர் என்பதை அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொண்டேன்.

Anonymous said...

அனானி! இது S.C.A வசந்த் ஜேம்ஸ் வசந்த் இல்லை.

யோசிப்பவர் said...

He has started doing programs in Pothigai First, Then only came to Kalaingar TV