பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 05, 2008

ஒகேனக்கல் - கலைஞர், கிருஷ்ணா - தேர்தல் அரசியல்

கலைஞர் - ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பிரச்சனை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு, கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடியும் வரை தற்காலிக அமைதி காப்போம்

எஸ்.எம்.கிருஷ்ணா - ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக திமுக அதிருப்தி அடைந்திருப்பது குறித்து எங்களுக்குக் கவலை. இந்த விவகாரத்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டாலும் அதுகுறித்து நாங்கள் கவலைப்பட மாட்டோம்கலைஞர் அறிக்கை
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பிரச்சனை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு, கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடியும் வரை தற்காலிக அமைதி காப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். அதன் பிறகும் இதே நிலை நீடித்தால் தமிழர்கள் உயிர்களை இழந்தாலும், உரிமைகளை இழக்கும் சுயமரியாதை அற்றவர்களாக இருக்க மாட்டார்கள் என்று உலகுக்கு உணர்த்துவோம் என அவர் கூறியுள்ளார்.
.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல்லிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர் வழங்குவதற்காக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, 1334 கோடி ரூபாய்க்கான அத்திட்டத்துக்கு ஜப்பான் நாட்டு வங்கியின் நிதி உதவியும் பெற்று, முறைப்படி பெற வேண்டிய தடையிலா சான்றுகள் மற்றும் அனுமதிகளையெல்லாம் படிப்படியாகப் பெற்று இரு மாவட்டங்களில் உள்ள சுமார் 30 லட்சம் மக்களின் குடி தண்ணீர் தேவையை நிறைவு செய்ய தொடக்கப் பணிகளை கடந்த 26.2.2008 ஆம் தேதியன்று மேற்கொண்ட பிறகு, அறிவிக்கப்பட்ட கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, அந்த மாநிலத்து பிஜேபி போன்ற சில கட்சிகளும், எப்போதுமே தமிழ், தமிழர் நலன்களுக்கு விரோதமாகச் செயல்படும் சமூக விரோதிகளும் ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு என்று குரல் எழுப்பி அதையொட்டி வன்முறைச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கியதை நான் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு தெரிவித்தது மட்டுமல்லாமல், கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சிகளும், அரசும், இத்திட்டம் நிறைவேறுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்று தனிப்பட்ட முறையிலும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தது பயனில்லாமல் போய் கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கும் அளவுக்கும், போக்குவரத்து வாகனங்களுக்கு, உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற அளவுக்கும் வன்முறைச் சேட்டைகளைத் தொடர தொடங்கியதால் அதன் எதிரொலியாக தமிழகத்திலும் எதிர்ப்பு நிலை தவிர்க்க முடியாததாகி சில விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

இரு மாநில மக்களும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டுமென்று நான் பல காலமாகத் தொடர்ந்து கூறி வருகிற வேண்டுகோள் புறக்கணிக்கப்படுகிறதே என்ற எனது வேதனைக்கு மருந்தாகவும், தமிழகத்தின் தாங்கும் சக்தி தளர்ந்து போய்விடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இங்குள்ள கட்சிகள் பலவும், கட்சித் தலைவர்களும் களமிறங்கியும், குறிப்பாகவும், சிறப்பாகவும் தமிழ்த் திரை உலகத்துக் கலைஞர் பெருமக்கள் அணி திரண்டு அமைதியான முறையில் அற வழியில் ஒரு பிரம்மாண்டமான உண்ணா நோன்பை மேற்கொண்டு அகில இந்தியாவிலும் நமது அரசும் மக்களும் எடுத்துரைக்கும் நியாயத்தை சுட்டிக் காட்டும் வகையில் பல்லாயிரவர் கூடி மெய்ப்பித்துக் காட்டிய தமிழ் உணர்வையும் போற்றுவதுடன் இதயமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எழுந்துள்ள கோபமும் கொந்தளிப்பும் மேலும் தொடர்ந்து சகோதர மாநிலங்களான தமிழகம், கர்நாடகத்திற்கிடையே நிரந்தரப் பகை மூள்வதை இந்திய ஒருமைப் பாட்டிலும் இறையாண்மையிலும், ஒற்றுமையிலும் நம்பிக்கையுள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே கர்நாடகத்தில் தேர்தல் ஜூரமும் விரைவில் வந்துவிட இருக்கும்போது, இந்த விரும்பத் தகாத வன்முறைகள் அதன் விளைவாகவும் இரு தரப்பினரிடையே இடம் பெறக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக கூற விரும்புகிறேன்.

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருப்பதற்கு நாம் தான் நம்மை முன்னிருத்தி அமைதி அணி வகுப்பை நடத்திட வேண்டும். கர்நாடகத்தில் இன்று நடந்திடும் கவர்னர் ஆட்சி முடிவுற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலருவதற்கு இடையேயுள்ள சில நாட்கள் மட்டுமே அவசியம் கருதி பொறுத்திருப்போம்.

அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு, அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்றும், 1998ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இத்திட்டம் நடக்குமென்றும், நடப்பதற்கு வலியுறுத்துவோம் என்றும், அதற்கு நியாயம் கிடைக்குமென்றும் அசையாத நம்பிக்கையோடு இப்போது தற்காலிகமாக இந்தப் பிரச்சனையில் அமைதி காப்போம்.

அதன் பிறகும் இதே நிலை நீடிக்குமென்றால், தமிழர்கள் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் இழந்தாலும் கூட உரிமைகளையும் இழந்திட முன்வரும் சுயமரியாதை அற்றவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.

அந்த தன்மானக் கூட்டத்தின் ஒரு குரலாக இப்போது என் குரலை உயர்த்தி, இதுவரை நடந்தது இனியும் தொடராமல் இன்றுடன் நிறுத்தி பொறுத்திருந்து கர்நாடகத்தில் வரவிருக்கின்ற புதிய ஆட்சியாளரின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்க மாட்டோம் என்று கூறப் போகிற ஆட்சியா கர்நாடகத்தில் வந்து விடப் போகிறது? பயிர் வாழத் தான் தண்ணீர் இல்லை என்றார்கள். உயிர் வாழ வரும் தண்ணீரையுமா தடுப்பார்கள்? நியாயம் வெல்லும்; நிச்சயம் வெல்லும்.
இடையில் உரிமைக்காக தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை உலகிற்கே நிலை நாட்டிக் காட்டிய திரையுலக கலைஞர் பெருமக்கள், கட்சித் தலைவர்கள், பல்வேறு துறையில் பாடுபடும் பெருமக்கள் அனைவருக்கும் அவர்தம் நல் உள்ளத்துக்கும் ஊக்கமளிக்கும் வகையில் என்றும் மறவாத நன்றியையும் மனந்திறந்த பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும் பின்னர் நாம் கலந்து பேசி; தேவைப்பட்டால் களம் காண்போம். அதற்குத் தேவையில்லாமலே போய், தேசத்தின் ஒற்றுமை காக்கப்படும் என்று நம்புவோம்
எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி:

ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். அதில் தவறு இல்லை. நமது பிரச்சினைக்கு உரிய தீர்வு வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தைத்தான் நாட முடியும். அதுதான் சரியான இடம்.

இந்த விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மட்டுமே நாங்கள் கவலைப்படுகிறோம். மற்றவர்கள் குறித்து எங்களுக்குக் கவலையில்லை.

இதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படுமோ அல்லது திமுக அதிருப்தி அடையுமோ என்று நாங்கள் கவலைப்பட முடியாது. திமுக கூட்டணியிலிருந்து விலகினாலும் அதுகுறித்து கர்நாடகம் கவலைப்பட முடியாது என்றார் கிருஷ்ணா.

உச்சநீதிமன்றம்தான் சரியான தீர்வுக்கு உரிய இடம் என்று கூறும் இதே எஸ்.எம்.கிருஷ்ணாதான், முன்பு முதல்வராக இருந்தபோது, உச்சநீதிமன்ற் காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மறுத்து, உச்சநீதிமன்றத்தால் மிகக் கடுமையாக கண்டிக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.

தமிழர்களுக்கு எதிராக அப்போது மூண்ட மோதலைத் தடுக்க முடியாவிட்டால், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாவிட்டால் எதற்காக முதல்வர் பதவியில் இருக்கிறீர்கள், பதவியை விட்டு போய் விடுங்கள் என்றும் உச்சநீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yellow
Green
Blue
Light Green

3 Comments:

Anonymous said...

Two alliance parties (DMK and Congress) decide to co-ordinate the karnataka election using (Tamil) people. Congress got maximum publicity in the process. Thanks for people who participated in this here and everywhere.

S.M. Krishna resigned as governor to lead congress in Karnataka
Rahul Gandhi Visit
(Ediyurappa acted first knowing this well)
Karunanithi Statement on Cauvery
S.M Krishna Statements
One Day fast
Karunanithi Statement - (latest)

Watch the next move by Congress in Karnataka.

Idlyvadai... I want Kavundamani to comment here.

அரவிந்தன் said...

அய்யா கலைஞர் அவர்களே!!!

இந்த ஒகனேக்கல் குடிநீர் திட்டத்திற்க்கு சென்ற மாதம் நீங்கள் அடிக்கல் நாட்டும் போது கர்நாடகாவில் என்ன ஜனநாயக ஆட்சியா நடந்து கொண்டிருந்து.

இப்போது மட்டும் என்ன மாற்றம் .மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி வரட்டும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்று திடீர் பல்டி..?

எதன் அடிப்படையில் "நீங்கள் பேச்சு வார்த்தை" நடத்த போறிங்க சொல்லுங்க

முதன் முறையாக தமிழக மக்கள் ஒருமித்த முறையில் கன்னட வெறியர்களுக்கு எதிரிப்பு தெரிவித்தனர்.

இடையில் எட்டப்பராக நீங்கள் திட்டத்தை கிடப்பில் போட வேண்டிய அவசியமென்ன.?

அன்று காவேரி பிரச்சினையில் தமிழகத்தில் எதிர்ப்பு கூர்மைப்பட்டு வரும்வேளையில் ரஜினி தனித்து உண்ணாவிரதமிருந்து போராட்டத்தின் கூர்மையை மழங்கடித்தார்.

இன்று நீங்களும் அதைத்தான் செய்திருக்கிறீர்கள்.

அந்த ரஜினி கூட இந்த விஷயத்தில் தமிழகத்தின் பக்கமுள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டார்.

ஆனால் ஆறுகோடி மக்களின் பிரதிநிதியான நீங்கள் "பேசிப்ப்பார்க்கலாம்" என்று சொல்லி ஜகா வாங்கிவிட்டீர்கள்.

இப்பிரச்சினையின் ஆரம்பித்தில் வாய்மூடி மெளனம் காத்த செயலலிதா கூட தங்களை தாக்கி பேச வாய்பளித்துள்ளீர்கள்.

என்ன சப்பைகட்டு கட்டப்போகிறீர்கள்.? கர்நாடகத்தமிழர்களின் பாதுகாப்பு கருதி கிடப்பில் போட்டேன் என்று நீலிகண்ணீர் வடிக்காதீர்கள்

எங்கள் நலன் என்ற பெயரில் உங்கள் மக்களை தவிக்க வைக்காதீர்கள்.

வேண்டாம் எங்களை நாங்களே பார்த்துகொள்கிறோம்.எங்களின் தவித்த வாய்க்கு இந்த கர்னாடக அரசு தராளமாகவே தண்ணீர் தருகிறது.


அரவிந்தன்
கர்னாடக தமிழன்

அரவிந்தன் said...

அய்யா கலைஞர் அவர்களே!!!

இந்த ஒகனேக்கல் குடிநீர் திட்டத்திற்க்கு சென்ற மாதம் நீங்கள் அடிக்கல் நாட்டும் போது கர்நாடகாவில் என்ன ஜனநாயக ஆட்சியா நடந்து கொண்டிருந்து.

இப்போது மட்டும் என்ன மாற்றம் .மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி வரட்டும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்று திடீர் பல்டி..?

எதன் அடிப்படையில் "நீங்கள் பேச்சு வார்த்தை" நடத்த போறிங்க சொல்லுங்க

முதன் முறையாக தமிழக மக்கள் ஒருமித்த முறையில் கன்னட வெறியர்களுக்கு எதிரிப்பு தெரிவித்தனர்.

இடையில் எட்டப்பராக நீங்கள் திட்டத்தை கிடப்பில் போட வேண்டிய அவசியமென்ன.?

அன்று காவேரி பிரச்சினையில் தமிழகத்தில் எதிர்ப்பு கூர்மைப்பட்டு வரும்வேளையில் ரஜினி தனித்து உண்ணாவிரதமிருந்து போராட்டத்தின் கூர்மையை மழங்கடித்தார்.

இன்று நீங்களும் அதைத்தான் செய்திருக்கிறீர்கள்.

அந்த ரஜினி கூட இந்த விஷயத்தில் தமிழகத்தின் பக்கமுள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டார்.

ஆனால் ஆறுகோடி மக்களின் பிரதிநிதியான நீங்கள் "பேசிப்ப்பார்க்கலாம்" என்று சொல்லி ஜகா வாங்கிவிட்டீர்கள்.

இப்பிரச்சினையின் ஆரம்பித்தில் வாய்மூடி மெளனம் காத்த செயலலிதா கூட தங்களை தாக்கி பேச வாய்பளித்துள்ளீர்கள்.

என்ன சப்பைகட்டு கட்டப்போகிறீர்கள்.? கர்நாடகத்தமிழர்களின் பாதுகாப்பு கருதி கிடப்பில் போட்டேன் என்று நீலிகண்ணீர் வடிக்காதீர்கள்

எங்கள் நலன் என்ற பெயரில் உங்கள் மக்களை தவிக்க வைக்காதீர்கள்.

வேண்டாம் எங்களை நாங்களே பார்த்துகொள்கிறோம்.எங்களின் தவித்த வாய்க்கு இந்த கர்னாடக அரசு தராளமாகவே தண்ணீர் தருகிறது.


அரவிந்தன்
கர்னாடக தமிழன்