பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 04, 2008

கமல் ரஜினி பேச்சு

கமல், ரஜினி பேச்சு. யார் பேச்சு சூப்பர் என்று பின்னூட்டதில் சொல்லவும்.

ரஜினி பேச்சு
இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன்.


பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்... உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் சொன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.


என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள்.

கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்.கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர் (எதியூரப்பா). ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் வித்த்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி (பாஜக) சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

காரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா...?

எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாம்.

மக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அப்புறம் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அழிந்து போவீர்கள்.


நேற்று கூட மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய தலைவர் என்னிடம் சொன்னார், கலைஞரால்தான் பிரச்சினை இவ்வளவு பெரிதாகிவிட்டது என கிருஷ்ணா கூறி வருவதாக...

நான் கலைஞருக்கும் சரி மற்ற தலைவர்களுக்கும் சரி... ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். அதற்கு இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது. இப்போது அதைச் செய்யத் தவறிவிட்டால் பின்னர் கோடாலி கொண்டு வெட்டினாலும் பிரச்சினை தீராது


இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது மிகச் சாதாரண மக்கள் தான். இதனால் உண்மையைப் பேசுங்கள், அரசியல் லாபத்துக்காக எதையும் பேசாதீர்கள்கமல் பேச்சுஇங்கு கூடியிருக்கும் கலையுலக சகோதரர்களுக்கும்,
பெங்களூரில் எதிர் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சகோதரர்களுக்கும் வணக்கம்.

காவிரி தோன்றுவதற்கு முன்பு தோன்றிய மனிதர்களைப் போல நாம் பேசிக் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட குரங்குகள் உருவில் நாம் எல்லாம் நதிக் கரையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் போன்ற பிரமை எனக்கு.

கடந்து வந்த தண்ணீரை அவர்கள் கேட்கிறார்கள். அதைத் திருப்பி எடுத்துக் கொண்டு போக முடியாது. அவர்களுடைய வாதத்தில் பெரிய அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அதேசமயம் நாம் கோபத்தை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்பது எனது வேண்டுகோள். இது 11 பேர் சேர்ந்து விளையாடும் கிரிக்கெட் ஆட்டம் இல்லை. 100 கோடி மக்கள் சேர்ந்து விளையாடும் சமுதாய விளையாட்டு.


இதில் எனக்கு ரஜினியும் வேண்டும். கும்ப்ளேவும் வேண்டும். நீங்களும் வேண்டும், சத்யராஜும் வேண்டும். வைரமுத்துவும் வேண்டும், குல்ஸாரும் வேண்டும்.

குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறத்தான் செய்வார்கள் என்று நாம் பயப்படத் தேவையில்லை. நாம் எழுந்திரித்தால் அவர்கள் விழுந்து விடுவார்கள். எனவே பயப்பட வேண்டாம.

இங்கு செய்தி சேகரிக்க வந்திருக்கும் உளவுத்துறையினர் சொல்லும் இடத்துக்கு சேதிகளை சரியாக கொண்டு செல்ல வேண்டும். திரித்துக் கூறக் கூடாது என்று வைரமுத்து சொன்னார். அதை நானும் முன்மொழிகிறேன்.

குறிப்பாக கர்நாடகத்திற்குக் கொண்டு செல்லும் சேதிகளை கவனத்துடன் கொண்டு செல்லுங்கள், திரித்துக் கூறாதீர்கள் என்று நானும் கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு பல விஷயங்களில் நம்பிக்கை இல்லை. அதுபோலவே கத்தி எடு, வாள் எடு என்பதிலும் நம்பிக்கை இல்லை.
தாய்மை உணர்வு நமக்கு வேண்டும். பெண்ணுறுப்பு இருந்தால்தான் தாய்மை உணர்வு வரும் என்றில்லை.


தேவன் மகன் படத்தில் ஒரு வசனம் வரும், ஆத்தி, நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா ஓடுதே என்பார் ஒரு தாய். அதுபோன்ற சூழ்நிலை இரு தரப்பிலும் வரக் கூடாது என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்

என் ஓட்டு கமலுக்கு தான்

10 Comments:

Anonymous said...

என்னுடைய ஒட்டு நிச்சயம் ரஜினிக்குதான்... எனக்கு உங்கள் ப்ளாகில் பிடிச்சதே இட்லி வடை லோகோவில் உள்ள ரஜனி பன்ச் தான்.ரஜினியா ,கமலாங்கறது இதுல முக்கியமில்லைன்னு எனக்கு படுது .கிடக்கறது கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனைல வய்யிங்கற மாதிரி இருக்கு உங்க பொழைப்பு..

We The People said...

ரஜினி பேச்சில் இந்த இரண்டு பாரா குறையுதே??!! ஏன்??

//நேற்று கூட மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய தலைவர் என்னிடம் சொன்னார், கலைஞரால்தான் பிரச்சினை இவ்வளவு பெரிதாகிவிட்டது என கிருஷ்ணா கூறி வருவதாக...

நான் கலைஞருக்கும் சரி மற்ற தலைவர்களுக்கும் சரி... ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். அதற்கு இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது. இப்போது அதைச் செய்யத் தவறிவிட்டால் பின்னர் கோடாலி கொண்டு வெட்டினாலும் பிரச்சினை தீராது.//

Ravi said...

Without any iota of doubt, my vote is for Kamalhassan - very cultured and sensible talk.

Anonymous said...

Idly vadai,

your homepage doesn't open for me. it stops with the first line of this post and it keeps waiting. I got the same problem in office and at home as well. kindly look into it.

but if I click on the title it opens the post.

thanks

இரா. வசந்த குமார். said...

Ravi.. still you re telling culture, good tamil people... all these...

we did lot to others... when we turn around...?

Anonymous said...

which speech is good-kamal or rajni?
Is this country going to be a economic super power
haah
haah

வால்பையன் said...

இரண்டு பேருமே இரு துருவங்கள்
கமல் உணர்வு பூர்வமாக எதையும் நெருங்குவதால்
தான் அவரது பேச்சில் முதிர்ச்சி தெரிகிறது.

அதே நேரம் நாம் ரஜினியின் தர்ம சங்கட சூழ்நிலையை மனதில் கொள்ளவேண்டும்.

இரண்டு பேருமே அவர்களது கருத்தில் சரியாக தான் இருக்கிறார்கள்
இருவரும் ஒரே மாதிரி பேசினால் அதன் பெயர் கருத்தல்லா, காப்பி

வால்பையன்

Anonymous said...

கமல் பேசுனத எப்படி ஐயா புரிஞ்சிகிடீங்க. பெரிய ஆளுதான் நீங்க.

VIJI said...
This comment has been removed by the author.
Seetha said...

ஏன் இட்லிவடை ஒரே ஒரு நடிகை கூடவா பேசத்தெரியாதவர்கள்??

ஒருவேளை பெண்கள் பேசியிருந்தால் இவ்வளவு மோசமாக இருந்திருக்காது..