பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 15, 2008

பிரியங்கா வேலூர் சென்ற போது நளினியை சந்தித்தார்

எந்தவித பரபரப்போ, பலத்த பாதுகாப்போ இன்றி ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா சென்னை வழியாக வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று திரும்பினார் என்பது பழைய செய்தி. ( கோவிலுக்கு செல்லும் வழியில் ஸ்ரீபெரும் புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். )

ராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான நளினியை அவர் சிறைச்சாலையில் பார்த்து பேசியுள்ளார்.

என் அப்பாவை ஏன் கொலை செய்தீர்கள் ? என்று கேட்டுள்ளார்.


Did Priyanka Vadra recently meet Nalini Sriharan, one of those involved in the assassination of her father Rajiv Gandhi?

A city lawyer filed an application under the Right to Information Act (RTI) last week seeking information on a purported meeting on March 19 between Priyanka and Nalini at the special prison for women in Vellore. On March 19, Priyanka was, indeed, in Vellore to pay obeisance at the Sripuram temple there.

The RTI applicant, D Raj Kumar, has sought the prison superintendent’s response to a number of queries: Under which legal provision was Priyanka permitted to meet Nalini, who accompanied her, how long did the meeting last, and what did they talk about?

Nalini, who is 43 now, was given the death sentence by a special court for being involved in Rajiv Gandhi's assassination on May 21, 1991, in Sriperumbudur.

She was 26 at the time of his death and 33 when sentenced.

The sentence was later commuted to life imprisonment after Sonia Gandhi pleaded for clemency for the sake of Nalini’s five-year-old daughter.

Priyanka's purported meeting now would add another chapter to an amazing story of how the Gandhi family has tried so bravely to come to terms with the tragedy of Rajiv's death.

In itself, an RTI application is no proof of such a meeting having taken place. The Times of India , therefore, sought to verify it and reached the superintendent of the special jail where Nalini is lodged. The official refused to discuss the matter. However, Nalini's mother, who is now in Coimbatore, confirmed the meeting.

So did Nalini's two lawyers, S Duraisamy and Elangovan, who claimed that Nalini has briefed them extensively on the meeting.

They described the meeting as "very cordial" and spoke well of Priyanka's genuine desire to know why her father, a "good person", was killed.

The lawyers claimed that the meeting lasted for about an hour. They said Priyanka's visit to the prison coincided with her visit to the temple. Preparations for getting the two together had started long before the purported meeting, they added.

They said on March 11 a central intelligence official met Nalini, ostensibly in connection with her pending representations for an early release.

However, during the meeting, the official showed Nalini a photograph of Priyanka and said, "She wants to meet you. Are you willing?" Nalini said yes. On March 18, another officer, who identified himself as Pankaj Kumar, met Nalini and told her that Priyanka would meet her the next day.

Nalini appeared excited about the meeting. She had brought with her some South Indian sweets that she had prepared in prison for Priyanka. She was, however, denied permission to take the sweets inside the interview room where Priyanka was already waiting.

Once Nalini entered the room, Pankaj Kumar was asked to leave the two alone.

According to what Nalini told her lawyers, a visibly emotional Priyanka made Nalini sit next to her and asked several short questions related to the assassination. Why had it happened? For what purpose? What was Nalini's involvement?

Nalini replied, "I didn't know anything till the end. But it is true that I went to the spot." Nalini is the sole survivor of the five-member assassination squad.

Priyanka is quoted by the lawyers as saying, "My father was a good person. It could have been resolved through talks. Had you known about my father's good nature, you would not have done this." Nalini apparently kept quiet. Then Priyanka asked, "When did you see my father last?" Nalini said, "When he got out of his car."

Who masterminded Rajiv's killing? asked Priyanka

Priyanka wanted to know if Nalini had seen her father when the blast took place, to which Nalini answered in the negative. Nalini explained that she was standing a long distance away and there was a big crowd obstructing her vision.

Priyanka then put a direct question to Nalini: who was behind the blast? Nalini said Dhanu, the human bomb who killed Rajiv, was the only person who would have known about the mastermind behind the blast. "Was the LTTE involved in it?" asked Priyanka. Nalini said she wasn't sure. Only Dhanu knew. Nalini said she still does not know from whom Dhanu took orders.

So, why did she get involved with the killers, Priyanka is said to have asked Nalini. Nalini said she had a neglected childhood. Her family didn't care for her. She apparently told Priyanka, "I would be attracted to those who showed me affection. I didn't know what was good and what was bad. Sivarasan and the others would come to my house during weekends. That was how I got close to Murugan (one of those sentenced to death in the assassination case)."

Priyanka wanted to know whether Murugan was a member of the LTTE. Nalini insisted that Murugan was similarly in the dark. "He did not know that Sivarasan, Dhanu and Subha would be involved in the assassination plan," she is said to have told Priyanka.

So, why did Priyanka want to meet Nalini? Priyanka clarified to Nalini that she was not sent by anyone, and that the decision to meet Nalini was her own.

Nalini believes that her regular letters to Sonia - wishing her a quick recovery when she was in hospital, for instance - may have generated some goodwill for her among the Gandhi family.

Nalini claimed that Priyanka inquired about her daughter, mother and brother. She also claimed that Priyanka told her about her own family and her children. She apparently mentioned to Nalini that she preferred to personally take her children to school every day.

Nalini has told her lawyers that Priyanka came in a green sari, and she was "very simple and loveable". "Both of us were happy about the meeting," she told her lawyers.
( Source: Economic Times, Times of India )
அப்டேட் ( மாலைமலர் செய்தி )
சோனியா காந்தியின் மகள் பிரியங்கா கடந்த மாதம் 19-ந் தேதி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் வேலூ ருக்கு வந்து சென்றார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்து சென்ற அவரது பயணம் தமிழக போலீ சாருக்கே தெரியாத படி மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பிரியங்கா தனியாக வந்தாரா? எதற் காக வந்தார் என்ப தெல்லாம் மர்மமாக இருந்தது.

உளவுத் துறையினரிடம் இது குறித்து கேட்ட போது வேலூர் அருகில் உள்ள ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு பிரியங்கா வந்து சென்ற தாக தெரிவித்தனர். ஆனால் ஸ்ரீபுரம் கோவில் நிர்வாகத்தினர், "பிரியங்கா தங்க கோவிலுக்கு வர வில்லை'' என்று மறுத்தனர். இதனால் பிரியங்காவின் வேலூர் வருகையில் உண்மை நிலை தெரியாமல் தொடர்ந்து குழப்பம் நிலவி யது.

இந்த நிலையில் வேலூ ருக்கு ரகசியமாக வந்த பிரியங்கா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை யில் குற்றம் சாட்டப்பட்ட நளினியை சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் பரவியது. இது உண்மை தானா என்பதை அறிய சென்னையை சேர்ந்த வக்கீல் டி.ராஜ்குமார் என் பவர் வேலூர் ஜெயில் சூப்பிரண்டிடம் தகவல் அறியும் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் ஒரு விண் ணப்பம் அளித்தார்.

அதில், அவர் "பிரியங்கா சிறையில் உள்ள நளி னியை சந்தித்தாரா? இந்த சந்திப்புக்கு எந்த சட்டப்பிரிவின் கீழ் அனுமதி கொடுக்கப்பட்டது? பிரியங்காவுடன் வேறு யார்-யாரெல்லாம் வந் திருந்தார்கள்? அவர் கள் எத்தனை மணி நேரம் பேசினார்கள்? அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள்? என்று பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தார். இதற்கு வேலூர் ஜெயில் சூப்பி ரண்டு எந்த பதிலும் அளிக்க வில்லை.

சிறைத்துறை அதிகாரி களிடம் கேட்ட போது இது பற்றி விவாதிக்க மறுத்து விட்டனர். தமிழக சிறைத் துறை டி.ஐ.ஜி. செந்தூர் பாண்டியனிடம் "மாலைமலர்'' நிருபர் கேட்ட போது, "அப்படி எந்த சந்திப்பும் நடக்க வில்லை. நான் யாருக்கும் அனுமதியும் கொடுக்க வில்லை'' என்றார். வேலூர் போலீசாரும் இது தொடர் பாக விரிவாக பேச
மறுத்தனர்.

இந்த நிலையில் நளினி யின் தாய் நர்சு பத்மா, வேலூர் சிறையில் பிரி யங்கா-நளினி சந்திப்பு நடந்தது உண்மை தான் என்று கூறினார். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த நர்ஸ் பத்மா, சில ஆண்டு களுக்கு முன்பு கோவை சென்று குடியேறினார். அடிக்கடி அவர் வேலூர் வந்து சிறையில் இருக்கும் மகளை பார்த்து செல்கிறார்.

இதற்கிடையே நளினி யின் வக்கீல் துரைசாமியும், பிரியங்கா-நளினி சந் திப்பை உறுதிப்படுத்தி உள் ளார். இது தொடர்பாக அவர் "மாலைமலர்'' நிருபரிடம் கூறியதாவது:-

ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சிவராசன், தனு, சுபா, ஹரிபாபு, நளினி அறிவிக் கப்பட்டனர். இதில் நளினி தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டனர். நளினி மட்டும் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

1991ம் ஆண்டு ஜூன் மாதம் நளினி கைதா னார். அவருக்கு தனிக் கோர்ட்டு மரண தண்டனை வழங்கியது. அவர் மீது இரக்கப்பட்டு சோனியா காந்தி கேட் டுக் கொண்டதின் பேரில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனை யாக குறைக்கப்பட்டது.

நளினி கைது செய்யப் பட்ட போது அவருக்கு 26 வயது. தற்போது அவருக்கு 43 வயதாகிறது. நளினியை சந்தித்து பேச வேண்டும் என்று நீண்ட நாட்களாக பிரியங்கா மிகவும் ஆர்வ மாக இருந்தார்.

கடந்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் வேலூர் மத்திய சிறைக்கு சென்று நளினியை சந்தித் துப் பேசினார். நளினியை விரைவில் விடுவிக்க ஏற் பாடு செய்வதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் நளினி யிடம் பிரியாங்காவின் போட்டோவை காட்டி, "இவர் உங்களை சந்தித்துப் பேச விரும்புகிறார். உங்க ளுக்கு சம்மதமா?'' என்று கேட்டார். நளினி உடனே சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து பிரி யாங்கா-நளினி சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடந்தன. கடந்த மாதம் 18-ந்ங தேதி உளவுத்துறை அதிகாரி பங்கஜ்குமார் என்பவர் நளினியை சந்தித்து, "நாளை உங்களை பிரியங்கா சந் திக்க வருகிறார்'' என்று தகவல் தெரிவித்தார். அப்போது அவர் நளினியை சந்திக்க பிரியாங்கா ஒரு வாரத்துக்கு முன்பே உரிய அனுமதி பெற்று விட்டதாகவும் கூறினார்.

இதனால் நளினி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிரியாங் காவுக்கு கொடுப் பதற்காக வேலூர் சிறைக் குள்ளேயே தன் கைப்பட இனிப்பு வகைகளை தயார் செய்தார். தென் இந்திய இனிப்பு வகைகளை அவர் செய்திருந்தார்.

மறுநாள் (19-ந் தேதி) பிரியாங்கா வேலூர் சிறைக்கு வந்தார். அங் குள்ள "இண்டர்வியூ அறை'' யில் நளினியை சந்தித்துப் பேசினார். மதியம் 12.30 மணியில் இருந்து சுமார் 1 மணி நேரம் இந்த சந் திப்பு நடந்தது. மிகவும் சுமூகமான முறையில் உணர்ச்சிமயமாக இந்த சந்திப்பு இருந்தது. ஆனால் நளினி தயாரித்திருந்த இனிப்பு வகைகளை அதி காரிகள் இண்டர்வியூ அறைக்குள் கொண்டு செல்ல மறுத்து விட்டனர்.

அந்த அறையில் முதலில் பிரியங்காவுடன் உளவுத் துறை பங்கஜ் குமாரும் இருந்தார். பிரியாங்கா கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் அந்த அறை யில் இருந்து வெளியேறி விட்டார். உணர்ச்சிமயமாக இருந்த பிரியங்கா, நளினி அருகில் அமர்ந்து, முதலில் குடும்பத்தை பற்றி விசாரித்தார். பிறகு, சின்ன, சின்னதாக ராஜீவ் கொலை பற்றி நிறைய கேள்விகளை மனம் விட்டு பேசி கேட்டுள்ளார்.

"என் தந்தை (ராஜீவ் காந்தி) மிகவும் நல்லவர் தானே? அவரை ஏன் படுகொலை செய்தார்கள்ப என்ன நோக்கத்துக்காக இந்த படுகொலை நடத்தப்பட்டது? என் தந்தையின் நல்ல உள்ளம் பற்றி நீங் கள் முழுமையாக அறிந்து இருந்தால் அவரை நிச்ச யம் கொன்று இருக்க மாட் டீர்கள். என்ன பிரச்சினை இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாமேப'' என்றார். பிரியாங்காவின் உணர்ச்சி கொந்தளிப்பான இந்த கேள்விகளைக் கேட்டதும் நளினிக்கும் துக்கமாகி விட்டது. அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

பிறகு பிரியங்கா, "என் தந்தையை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?'' என்றார். அதற்கு நளினி, ''ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்ட மேடைக்கு வந்த அவர் காரில் இருந்து இறங்கும் போது பார்த் தேன்'' என்றார். உடனே பிரியங்கா, "என் தந்தை குண்டு வெடிப்பில் சிக்கி பலியானதைப் நேரில் பார்த்தீர்களா?'' என்றார். அதற்கு நளினி, "இல்லை. தூரத்தில் நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். ராஜீவ்வை சுற்றி நிறைய பேர் நின்று கொண்டிருந்த தால் எனக்கு அது எப்படி நடந்தது என்றே தெரியாது'' என்றார்.

இதையடுத்து பிரியங்கா, நளினியைப்பார்த்து, "இந்த குண்டு வெடிப்பு சதியில் பின்னணியில் இருந்தது யார்?'' என்றார். அதற்கு பதில் அளித்த நளினி, "ராஜீவை கொல்ல மனித வெடி குண்டாக வந்து பலி யான தனுவுக்கு மட்டும் தான் இது பற்றி தெரியும்'' என்றார்.

உடனே பிரியங்கா, "விடுதலைப்புலிகளுக்கு இதில் தொடர்பு உண்டா?'' என்றார். அதற்கு நளினி, "எனக்குத் தெரியவில்லை. தனுவுக்கு மட்டும் தான் தெரியும். அவரை அனுப் பியது யார்? உத்தரவிட்டது யார்? என்பதெல்லாம் இன்று வரை எனக்கு தெரி யாது. ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டத்துக்கு அவர்களுடன் நான் சென் றது மட்டும் தான் உண்மை'' என்றார்.

"கொலையாளிகளுடன் நீங்கள் எப்படி தொடர்பு வைத்திருந்தீர்கள்? ஏன் பழகினீர்கள்?'' என்று பிரி யங்கா அடுத்த கேள்வியைக் கேட்டார். அதற்கு நளினி, "சிறு வயதிலேயே என்னை என் வீட்டில் புறக்கணித் தனர். யாரும் என் மீது பாசம் காட்டுவது இல்லை. அந்த வயதில் யாராவது என்னிடம் பாசம் காட்டி னால் அவர்களிடம் நான் நெருங்கிப் பழகி விடுவேன். நல்லது எது- கெட்டது எது என்பதை அறிய முடியாத பருவம் அது.

அந்த காலக் கட்டங்களில் வார கடைசி நாட்களில் சிவராசன் என் வீட்டுக்கு வருவார். அவருடன் வந்த முருகனிடம் நான் மனதை பறி கொடுத்து திருமணம் செய்து கொண்டேன்'' என்றார்.

உடனே குறுக்கிட்டு பிரியங்கா, "முருகன் விடு தலைப்புலியாப'' என்றார். அதற்கு நளினி, "அவரும் என்னைப் போல அப்பாவி தான். சிவராசன், தனு, சுபாவின் கொலை திட்டம் பற்றி அவருக்கும் கடைசி வரை தெரியாது'' என்றார்.

அதன் பிறகு பிரியங்கா வும் நளினியும் பரஸ்பரம் தங்கள் குடும்பம் பற்றி பேசினார்கள்.

நளினியின் குழந்தை பற்றி பிரியங்கா பரிவு டன் விசாரித்தார். அது போல நளினியும் பிரி யங் காவிடம் நலம் விசா ரித்தார். அப்போது பிரி யங்கா, "தினமும் என் குழந் தைகளை நானே பள்ளிக்கு அழைத்து செல்கிறேன்'' என்று கூறி உள்ளார்.

பிரியங்கா பச்சை கல ரில் சேலை அணிந்து வந்த தாக நளினி கூறினார். அவர் மிக, மிக அன்புடன் நடந்து கொண்டதாக நளினி கூறினார். இந்த சந் திப்பு பிரியங்கா-நளினி இரு தரப்பையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

சிறையில் இருக்கும் நளினி தொடர்ந்து சோனி யாவுக்கு கடிதம் எழுதி வருகிறார். சோனியா சமீ பத்தில் உடல் நலம் இல் லாமல் ஆஸ்பத்திரியில் இருந்த போது கூட நளினி கடிதம் எழுதி விசாரித் தார்.

இதனால் நளினி மீது சோனியா குடும்பத்தினர் தனிப்பட்ட அன்பு வைத் துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கருதுகிறேன்.

என்றாலும் நளினியை பிரியங்கா ரகசியமாக சந்தித்து பேசியது ஏன் என்பது மட்டும் தான் புரியாத புதி ராக உள்ளது.

இவ்வாறு நளினி வக்கீல் எஸ்.துரைசாமி கூறினார்.I met my father's assassin: Priyanka

Speaking to a news channel, Priyanka Vadra has acknowledged that she visited Vellore to meet her father's assassin.

Priyanka said that it was a personal visit and she needed to make peace with violence in her life.

A Chennai lawyer had filed an application under the Right to Information Act (RTI) last week seeking information on a purported meeting on March 19 between Priyanka and Nalini at the special prison for women in Vellore. On March 19, Priyanka was, indeed, in Vellore to pay obeisance at the Sripuram temple there.

The RTI applicant, D Raj Kumar, has sought the prison superintendent's response to a number of queries: Under which legal provision was Priyanka permitted to meet Nalini, who accompanied her, how long did the meeting last, and what did they talk about?

Nalini, who is 43 now, was given the death sentence by a special court for being involved in Rajiv Gandhi's assassination on May 21, 1991, in Sriperumbudur

4 Comments:

Futuristics said...

NICE Blog :)

IdlyVadai said...

Update:

I met my father's assassin: Priyanka

Anonymous said...

Priyanka: Why did you people kill my father? don't you know he was a good man?

Nalini: We killed your father because only then your mother can form an alliance with DMK and help DMK to come to power in the state as well as enjoy "money-making" ministries at the centre.

Anonymous said...

anony ur reply is too gud. :-)