பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 14, 2008

பஞ்சாங்கம் படிக்கத் தடை

பழைய காலத்தில் பல கோமாளி ராஜாக்கள் இருந்திருக்கிறார்கள் என்று கதைகளில் படித்திருக்கிறோம். இப்படி எல்லாம் கூட ராஜாக்கள் இருந்திருப்பார்களா என்று நினைத்ததுண்டு.

தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்திலிருந்து தை மாசம் மாற்றுவதும், கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கத் தடை விதிப்பதும் என்று இன்றும் அவர்கள் தொடர்கிறார்கள்...

பகுத்தறிவு கோமாளிகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமை பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

( இந்தாண்டு பஞ்சாங்கம் படிக்க, தமிழக அரசு வாய்மொழி உத்தரவாக தடை விதித்துள்ளது. )

12 Comments:

சங்கு மாமா said...

கோயில்ல பஞ்சாங்கம் படிச்சா இவனுங்களுக்கு என்ன எரியுது ? அசிங்கம்...பஞ்சாங்கம் படிச்சா நாட்டு நடப்பு கெட்டு போயிடுமா ?
(edited)

ஆனா கலைஞர் வீட்டில மட்டும் அய்யிர வெச்சி எல்லா பஞ்சாங்கமும், படிக்கும், நடக்கும்..

அதான் நான் ஒட்டு போடுறதே கிடையாது..மரியாதை இல்லாத மாநிலம் ஆகி விட்டது தமிழ் நாடு... மத சம்பிரதாயங்களுக்கு மதிப்பு இல்லாமற் போய் விட்டது..
(edited)

Anonymous said...

49-O - In Constitution of India:

Did you know that there is a system in our constitution, as per the 1969
act, in section " 49-O" that a person can go to the polling booth,
confirm his identity, get his finger marked and convey the presiding
election officer that he doesn't want to vote anyone!
Yes such a feature is available, but obviously these leaders have never
disclosed it. This is called "49-O". Why should you go and say " I VOTE
NOBODY"... because, in a ward, if a candidate wins, say by 123 votes,
and that particular ward has received "49-O" votes more than 123, then
that polling will be cancelled and will
have to be re-polled. Not only that, but the candidature of the
contestants will be removed and they cannot contest the re-polling,
since people had already expressed their decision on them. This would
bring fear into parties and hence look for genuine candidates for their
parties for election. This would change the way; of our whole
political system... it is seemingly surprising why the election
commission has not revealed such a feature to the public....

Seems to be a wonderful weapon against corrupt parties in India ... show your power, expressing
your desire not to vote for anybody, is even more powerful than
voting... so don't miss your chance. So either vote, or vote not to vote
(vote 49-O) and pass this info on...
Use your voting right for a better INDIA

Anonymous said...

பஞ்சாங்கம் படிக்காதேன்னு சொல்றவன்
பகுத்தறிவு கோமாளி !
பஞ்சாங்கம் படின்னு சொல்றவன்
பகுத்தறிவாளி.

Anonymous said...

இட்லி வடை, சங்கு மாமா
நம்ம ஊர்ல 49-O சாத்தியமா..?

மகேஷ் (Magesh) said...

புது பஞ்சாங்கம் கெடைக்கலையா? பழைய பஞ்சாங்கம் போட்டோ போட்டிருக்கீங்க?

சங்கு மாமா said...

//இட்லி வடை, சங்கு மாமா
நம்ம ஊர்ல 49-O சாத்தியமா..?//


அனானி...
49-O வை முயற்ச்சி செய்து பாருங்கள்....உங்களை voting booth தில் இருந்து ஒழுங்காக வீடு போய் சேர விடுகிறார்களா நம் அரசியல் வாதிகள்..என்று பார்ப்போம்... நமக்கு மொத்தமாக ஓ போட்டு விடுவார்கள்...!! :)

raama selvi said...

49-ஓ வை பயன் படுத்துவதில் சங்குமாமா சொல்கிற நடைமுறை சிக்கல் நிச்சயமாக உண்டு, ஏனனில் சாதாரண ஓட்டு போல அது ரகசிய பதிவு இல்லை, அது உங்கள் முழுமுகவரி மற்றும் நீங்கள் யாருக்கும் ஓட்டு போட விரும்ப வில்லை என்பதை தெளிவாக அடையாளத்தோடு பதிவு செய்யும், அடுத்த நிமிஷமே உங்கள் முன் ஆட்டோ நிற்கும்,இதெல்லாம் ஞானி ஓ பக்கங்களில் எழுதிவிட்டார், ஓட்டு இயந்திரத்திலேயே ஒரு பட்டன் இதற்காக இருந்தால் அப்போது அதிக ஓட்டு இதற்குதான் விழும், அதனால் ஏற்படும் ஸ்திரமில்லாத சூழலை தவிர்ககவே இந்தமுறை முக்கியமில்லாமல் அணுகப்படுகிறது, இதனை பயன்படுத்தி நமது அரசியல்வாதிகள் சுகப்படுகிறார்கள் அவ்வளவுதான்

கழுகு said...

//அதான் நான் ஒட்டு போடுறதே கிடையாது..மரியாதை இல்லாத மாநிலம் ஆகி விட்டது தமிழ் நாடு... மத சம்பிரதாயங்களுக்கு மதிப்பு இல்லாமற் போய் விட்டது..//

தெளிவாக சொல்லுங்கள் பார்ப்பனர்களுக்கும் இந்துத்வவியாதிகளுக்கும் மரியாதை இல்லாத நாடு. இதனால்தான் நீங்கள் ஓட்டு போடவில்லையென்று தெரிகிறது.

சங்கு மாமா said...

//தெளிவாக சொல்லுங்கள் பார்ப்பனர்களுக்கும் இந்துத்வவியாதிகளுக்கும் மரியாதை இல்லாத நாடு. இதனால்தான் நீங்கள் ஓட்டு போடவில்லையென்று தெரிகிறது.//

நண்பர் கழுகு அவர்களுக்கு,

நான் பார்ப்பனனும் கிடையாது..இந்துவோ, க்ரிஸ்துவனோ, முஸ்லிமோ கிடையாது.. நான் ஒரு Free Thinker.. எனவே நீங்கள் எனக்கு ஜாதி முத்திரை குத்தி பார்க்க வேண்டாம்.. வேறு நாடுகளில், ஜாதி பிரச்சினை வைத்து அரசியல் செய்யப்படுகிறதா ? இந்தியாவில் மட்டும் ஏன் இந்த கேவலம் ? ஜாதி இல்லை என்றால் உயிர் வாழ முடியாதா என்ன ?

மேலும்,

நான் ஒட்டு போடாததற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு...இந்திய அரசியல் அமைப்பு, அரசியல் கட்சிகள், தலைவர்கள், அவற்றின் (அவர்களின்) கொள்கைகள், நேர்மை, இவற்றின் மேல் நம்பிக்கை போய் விட்ட காரணமும் ஒன்று.. எனக்கு படிப்பு தந்த தாய் நாட்டின் மீது மதிப்பு இருப்பதால், திட்டி எழுத மனம் வரவில்லை.. ஆயினும் எனது திறமையை மதித்து எனக்கு உகந்த வேலை அளித்து சோறு போட்ட நான் தற்போது வசிக்கும் நாட்டிற்க்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்..

எனவே அடக்கி வாசிக்கவே விரும்புகிறேன்.. வீணாக பின்னூட்டம் என்ற பெயரில் மட்டரகமான ஜாதி கமெண்ட்களை எழுத வேண்டாம்.. என் ஈ-மெயில் ID சங்குமாமா@ஜிமெயில்.காம் ... கண்டிப்பாக பதிலளிப்பேன் !!

நன்றி...

rm_slv said...

//வேறு நாடுகளில், ஜாதி பிரச்சினை வைத்து அரசியல் செய்யப்படுகிறதா ? இந்தியாவில் மட்டும் ஏன் இந்த கேவலம் ? ஜாதி இல்லை என்றால் உயிர் வாழ முடியாதா என்ன ?//

சங்கு மாமாவுக்கு ஒரு கேள்வி

நீங்கள் கூறியுள்ளதுபோல் சாதி அரசியல் மற்ற நாடுகளில் இல்லை என்றா நினைக்கிறீர்கள், அது இன அரசியல் என்ற அடையாளமாய் இருக்கிறது, பாகிஸ்த்தானில் பதூன்கள் உள்ள பகுதியில் மற்றவர்கள் நின்று வெற்றி பெறமுடியுமா? அமெரிக்காவில் கத்திரினா தாக்கியபோது அது கருப்பர் பகுதி என்பதால் பெரும்பாலான உதவிப்பணிகள் செல்லவில்லை என படித்திருக்கிறேன்,இப்படி எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு அடையாளத்தில் இனம் அல்லது மொழி அல்லது பிறப்பு குடும்ப வகை என ஏதோ ஒரு அடையாளத்தில் இருக்கத்தான் செய்கிறது

சங்கு மாமா said...

rm_slv அவர்களுக்கு

நான் மேலோட்டமாக ஒப்பிட்டு பார்க்கிறேன்.. கடந்த 10 ஆண்டு காலமாக ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் வசித்து, வேலை செய்து இருக்கிறேன் (ஆழ கடல் எண்ணெய் எடுக்கும் கப்பல் வடிவமைப்பு துறையில் ).தற்போது ஆஸ்திரேலியா வில் வசித்து வருகிறேன்... என்னுடைய அனுபவத்தில், எனது வெளி இன நண்பர் வட்டத்தில் (வெள்ளையர், சீனர், கறுப்பர், இந்தியர்களில் - வட இந்தியர், மலையாளி, தெலுங்கர், பெங்காலி, சிங்குகள், மராடியர்கல்மற்றும் இதர இனத்தவர்..ஆனால் கன்னடன் மற்றும் தமிழனை தவிர்த்து..) இன்று வரை கருத்து வேறு பாடு வந்ததில்லை...முக்கியமாக, என் சமையலுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.. நான் கஷ்டத்தில் இருந்த காலத்தில் அனைவரும் எனக்கு தங்கள் சக்திக்கு மீறி உதவிகளை செய்துள்ளனர்..
மேலும், கண்டால் முகத்தை திருப்பிக்கொண்டு போகும் பழக்கம் தமிழனுக்கு மட்டுமே உண்டு... வேறு இனத்தவரிடம் அதை கண்டிருக்கிறீர்களா ? நீங்கள் கூறும் அமெரிக்க கறுப்பர் பிரச்சினை இன்று அந்த அளவு (அதாவது இந்தியாவில் ஜாதி பிரச்சினை போல்)...என்பது எனது தாழ்மையான கூற்று..
நண்டு கதை கேல்விப்பட்டிருக்கீறீர்களா ? அதில் தமிழ் நண்டு மட்டும் தனது நண்ப நண்டின் காலை வாரியவாறு இருந்ததாம்..சிங்கப்பூரில் ஒரு தமிழ் நிகழ்ச்சியில் ஒரு பேச்சாளர் கூறக்கேட்டேன்.. உண்மையிலேயே..எனக்கு அது அவமானமாக இருந்தது.. இரு பழ்க்கமிலாத மலையாளிகளுக்கு இடையே உள்ள பாசமும், ஒற்றுமையும் என் தமிழனிடத்தில் இல்லை ? ஒரு தமிழன் வாழ்ந்தால் இன்னொரு தமிழனுக்கு எரியும்..பொறாமை.. ?
நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்..நான் சொல்வது 100% உண்மைதானே ?

rm_slv said...

சங்கு மாமா அவர்களுக்கு
தங்களின் பதிலுக்கு நன்றி, தங்களைப்போல் நானும் பல நாடுகளில் பணிபுரிந்துள்ள காரணத்தால்தான் இதை எழுதுகிறேன், எத்தனை மலையாளிகள் தங்களின் குரோதம் காரணமாக தமக்குள்ளேயே அடித்துக்கொள்வதை நான் கண்டிருக்கிறேன், நீங்கள் சற்று எண்ணிப்பார்க்க வேணும் இந்தியாவைத்தவிர மற்ற எல்லாநாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு, அதாவது
1.அடிமை படுவதற்கு முன்னும் பின்னும் ஒரே நாடாக இருந்திருப்பார்கள்
2.பெரும்பாலும் ஒருசில மொழிகள் மட்டுமே உடையவராக இருப்பார்கள்.அதிலும் பல மறைந்து போய் ஒரு மொழி வழக்காகி இருக்கும்.
3.மிகக் குறைவான எண்ணிக்கையில் இனங்களும் மதங்களும் மட்டுமே அங்கெல்லாம் இருக்கும்
ஆனால் நம்நாடு வெகுகாலம் தனித்தனி ஆட்சியில் தனிநாடாக பிரிந்து பின்னர் ஒன்று சேர்கப்பட்டது எத்தனை மதம் எத்தனை மொழி எத்தனை இனம், இவையெல்லாம் ஒரு 50 வருட சுயாட்சியில் மாறவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும், தங்களைப்போன்றவர்கள் மத இன அடையாளங்களை இப்போது தவிர்க்கிறீர்கள் என்பதுதான் இந்தியாவின் வெற்றி அது பாராட்டதக்கது,
//எனக்கு படிப்பு தந்த தாய் நாட்டின் மீது மதிப்பு இருப்பதால், திட்டி எழுத மனம் வரவில்லை//

தங்களைப்போன்றவர்கள் , மேற்கண்டவாறு எழுதுவது மனது வலிக்கிறது தேவர்மகன் படத்தில் ஒரு வசனம் வரும், "அவன் படிக்காத பாமரன் அவன் மெதுவாதான் வருவான் நீதான் கையைபுடிச்சு அழைச்சுட்டு போகனும்" அதுதான் நிஜம் தங்களைப்போன்ற சிந்தனாவாதிகள் கையைப்பிடித்து அழைத்துப்போக கடமைப்பட்டவர்கள் என நினைக்கிறேன் அதைவிட்டு நாட்டின் மீதும் அதன் நடப்புகள் மீதும் வருத்தப்படவோ கோபப்படவோ நியாயமில்லை என நினைக்கிறேன். தங்களை புண்படுத்தும் நோக்கமில்லை அன்புடன்
rm_slv