பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 13, 2008

சவுந்திரபாண்டியனார் காவல் நிலையம் எங்கே இருக்கு ?

சவுந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையம் = பாண்டிபஜார் போலீஸ் நிலையம்
தொடர்புடைய செய்தி: திருவல்லிக்கேணியை தி.கேணி என்று ஏன் எழுத கூடாது - கலைஞர்

சென்னை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்துக்கு `சவுந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையம்' என்ற புதிய பெயரை வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

சவுந்தரபாண்டியன் பெயரில்

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழ் சொற்களை உச்சரிப்பது குறித்து அறிவுரை வழங்கினார். `அருகில்' என்ற வார்த்தையை `அருகாமையில்' என்று தவறாகக் குறிப்பிடுவதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தை தமிழில் பெயர் மாற்றம் செய்யும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டார். அதற்கு `சவுந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையம்' என்று தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். முதல்-அமைச்சரின் இந்த ஆணையைத் தொடர்ந்து பாண்டிபஜார் போலீஸ் நிலையத்துக்கு `சவுந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான பெயர்ப் பலகையும் மாற்றப்பட்டு விட்டது.

தியாகராயர்நகராக மாற்றம்

இதையடுத்து, சென்னையில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் சில போலீஸ் அதிகாரிகளின் அலுவலகங்களின் பெயரும் மாற்றப்பட்டு உள்ளன. அதன்படி, கே.கே.நகர் போலீஸ் நிலையம் என்று அழைக்கப்பட்டு வரும் போலீஸ் நிலையத்தை முதலில் சூட்டப்பட்ட பெயரான `கலைஞர் கருணாநிதிநகர் காவல் நிலையம்' என்று அழைக்கும்படி போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தி.நகர் துணை ஆணையாளர் அலுவலகம், தி.நகர் உதவி ஆணையாளர் அலுவலகம் என்று அழைக்கப்பட்ட அலுவலகங்கள் இனிமேல், `தியாகராயர்நகர் துணை ஆணையர் அலுவலகம், தியாகராயர்நகர் உதவி ஆணையாளர் அலுவலகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மவுண்ட் ரோடு என்பதை எவ்வளவு பேர் அண்ணா சாலை என்று சொல்லுகிறார்கள் ?

3 Comments:

Anonymous said...

"எவ்வளவு பேர் மௌன்ட் ரோடு என்பதை
அண்ணா சாலை என்று சொல்கிறார்கள்?"

எங்கள் கல்லூரியில் நாங்களெல்லாம்
அண்ணாசாலை என்று தான் சொல்கிறோம் .
வயசானதுகள் ( என் அப்பா மற்றும் கிழ
பேராசிரியர்கள்) தான் இன்னும் மௌன்ட் ரோடு
என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதே போல் சென்னை என்று தான் சொல்கிறோம்.
கிழங்கள் தான் மெட்ராஸ் என்று இன்னும்
சொல்லிக்கொண்டு இருக்கின்றன.
தமிழில் சொல்வதற்கு ஏன் ஐயா கூச்சப்ப்டுகிறீர்கள்?

சங்கு மாமா said...

எந்தத் தலைமுறையிலோ ஒரு நாத்தனாராம்
அவள் கந்தல் முறத்தை எடுத்துச் சாத்தினாளாம்


அனானி,

எல்லா பெயரையும் (இங்கிலீஷ், பிரெஞ்சு, ஜெர்மன்..சைனீஸ், இப்படி எல்லா பெயர்களையும்..) பாகுபாடு இல்லாமல் தமிழாக்கம் செய்து விட்டால் மொழி வளர்த்த மாதிரி ஆகி விடுமா ? சும்மா கிடந்த நாசுவன் குரங்குக்கு ஷேவிங் பண்ண மாதிரி தான்... (விரமா முனிவர் என்று ஒருவர் வந்து அறை குறையாக வோ அல்லது அதிகமாகவோ தமிழ் கற்றுக் கொண்டு (??) கிறிஸ்துவ பெயர்களை தமிழாக்கம் செய்து சீரழித்த மாதிரி..உதாரணத்துக்கு :joseph = யூசாப்பு , sebastian = செவுத்தியான்..)

மொழி வளர்க்க ஆயிரம் வழி இருக்கு... மொதல்ல தமிழை சரியா பேச கத்துக்குங்க... நாட்டுல எத்தனையோ ஜனங்க, அடிப்படை வசதி இல்லாம இருக்காங்க, அத்த வுட்டுட்டு பேர மாத்துறது, புண்ணாக்கு திங்கறது, மொழி கிறுக்கு புடிச்சி அலையிறது...எல்லாம் வீண்...செயல்... எங்களுக்கும் தெரியும் ..அண்ணா சாலை, சென்னை..திருவரங்கம் எல்லாம்...கூச்சம் ஒண்ணும் இல்லை... !!! உருப்படியான வேலைய பாருங்கையா !!

Anonymous said...

எனக்கு ஒரு யோசனை... கருணாநிதியையும் மற்ற சில தமிழ் வெறி ஆசாமிகளையும், வட்டாள் நாகராஜையும் மற்ற சில கன்னட வெறி ஆசாமிகளையும் ஒரே சிறையில் அடைத்தால் என்ன..
ஒன்னோட ஒன்னு பெராண்டிகிட்டு.. ரொம்ப தமாசா இருக்கும்பா.. :)