காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி ஒத்திவைத்தார் என்று முன்னாள் முதல்வரும், நிர்வாகச் சீர்திருத்த ஆணையத் தலைவருமான வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்த வீரப்ப மொய்லியிடம், ஒகேனக்கல்லில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள குடிநீர்த் திட்டம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:
"ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு எந்த ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது, இதற்கு அனுமதி அளித்தது யார் என்று இப்போது விவாதிக்கத் தயாரில்லை.
இப் பிரச்னையால் தமிழகம், கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்ட பதற்றம் இப்போதுதான் தணிந்துள்ளது. எனவே மேற்கொண்டு இது பற்றி விவாதிக்க விரும்பவில்லை.
இரு மாநிலங்களிலும் அமைதி ஏற்பட ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி ஒத்திவைத்துள்ளார், இதை நான் வரவேற்கிறேன்.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலையீடு உள்ளது. கருணாநிதியுடன் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதன் மூலம் இத் திட்டத்தை ஒத்திவைக்க கருணாநிதி சம்மதித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் வந்த கேள்வி-பதில் அறிக்கை
கேள்வி:- காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளுக்காகத் தான் தாங்கள் இவ்வாறு முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்களே?
பதில்:- காங்கிரஸ் கட்சித் தரப்பிலிருந்து யாரும் அப்படிப்பட்ட வேண்டுகோளை என்னிடம் வைக்கவில்லை. இதைப்பற்றி பேசவும் இல்லை. அப்படி ஒரு கட்சியின் நலன் கருதி நான் அந்த அறிவிப்பை செய்யவில்லை. இரண்டு மாநிலங்களிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை எண்ணி எடுக்கப்பட்ட முடிவுதான் அது. அதாவது மனிதநேய முடிவு - மாநிலங்களின் ஒற்றுமைக்கான முடிவு!
இதற்காக சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் சோனியா காந்தி என்பதை இதன் மூலம் அவர் நிரூபித்துள்ளார் என்றார் வீரப்ப மொய்லி.
நான்கு நாட்களுக்கு முன் சத்தியராஜ் பேசிய வீர வசனம்
தமிழன் மனிதன் இல்லை, வெறும் மரம் என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மரமாக இருந்தால் என்ன நடக்கும்? நாய் வந்து ஒண்ணுக்கு அடிக்கும். பிறகு எவனாவது வந்து மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போய் கட்டில் செய்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருப்பான். டேபிள் செய்து அதில் உட்காருவான். மொத்தத்தில் அந்த மரத்திற்கு மரியாதையே இல்லாமல் போய் விடும். எனவே தமிழா, நீ மரமாக இருக்காதே, மனிதனாகவும் இருக்காதே, தமிழனாக இரு என்று சொல்கிறேன்.
ஒகேனக்கலில் பாயும் காவிரி ஆற்றில் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டபோது அதற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. இது வன்முறையாக மாறியது. இரு மாநிலங்களிலும் அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில்தான் இத்திட்டத்தைத் தாற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக ஏப்ரல் 5-ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் அமைதி திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞரே இதற்கு நீங்கள் கவிதை எழுதி எங்களை குழப்பாதீர்கள். நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, April 09, 2008
கலைஞரே இது நியாயமா ?
Posted by IdlyVadai at 4/09/2008 04:33:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










12 Comments:
///கலைஞரே இதற்கு நீங்கள் கவிதை எழுதி எங்களை குழப்பாதீர்கள். நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம்///
இது சூப்பர்
தமிழன் மரம்தான் அப்படின்னு இன்னொரு முறை நிருபிச்சிட்டாங்க. என்ன ஒண்ணு, காலை தூக்கி ஒண்ணுக்கு அடிச்சது காங்கிரஸ்னா, தமிழன வெட்டி பெரிய சேர் பண்ணி அதில குடும்பத்தோட உக்காந்து கால் ஆட்டிட்டு இருக்கிறது இன்னொரு தமிழந்தான். என்னமோ போங்க.
idlyvadai read this
http://www.dinamalar.com/2008apr09/events_tn6.asp
hope this time something might happen !!
''ராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டாலென்ன?. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஜெயித்தாலென்ன? பாஜக ஜெயித்தாலென்ன? நம் திட்டத்தை நாம் நிறைவேற்ற வேண்டியது தானே'' - (விஜய டி.ராஜேந்தர்)
How is this ??
கலைஞர் சொன்னதாக...
//காங்கிரஸ் கட்சித் தரப்பிலிருந்து யாரும் அப்படிப்பட்ட வேண்டுகோளை என்னிடம் வைக்கவில்லை. இதைப்பற்றி பேசவும் இல்லை. அப்படி ஒரு கட்சியின் நலன் கருதி நான் அந்த அறிவிப்பை செய்யவில்லை. இரண்டு மாநிலங்களிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை எண்ணி எடுக்கப்பட்ட முடிவுதான் அது. அதாவது மனிதநேய முடிவு - மாநிலங்களின் ஒற்றுமைக்கான முடிவு!//
மொய்லி சொன்னதாக...
//இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலையீடு உள்ளது. கருணாநிதியுடன் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதன் மூலம் இத் திட்டத்தை ஒத்திவைக்க கருணாநிதி சம்மதித்தார்.//
***
தலைப்பு ஏன் "கலைஞரே இது நியாயமா" என்று உள்ளது?
நீங்கள் மொய்லி சொன்னதை நம்பி கலைஞரின் பதிலை சந்தேகப்படுகிறீர்கள் சரியா?
அது எப்படீங்க? இரண்டு பேர் அறிக்கை விடுறாங்க, உங்களால் மொய்லியை நம்ப முடிகிறது ஆனால் கலைஞரை நம்ப முடியவில்லை. நீங்கள் சோனியா-கலைஜர் பேச்சை ஒட்டுக்கேட்டீர்களா? :-))
**
தத்துவம்:
அரசியலில் யாரின் அறிக்கையை நம்புவது என்பது அரசியல்வாதிகளின் பேரில் உள்ள நம்பிக்கையின்பேரில் வரும் முடிவு அல்ல.
நாம் எதன் சார்பாக சிந்திக்க முனைகிறோம் (அல்லது நம் சிந்தனை எதற்கு ஆதரவாக உள்ளது) என்ற கொள்கை அடிப்படையில் , நமக்கு பிடித்ததை நம்ப விழைகிறோம்.
**
முடிவு:
அம்மா ஆட்சியில் இந்த திட்டம் தூங்கிக் கொண்டு இருந்தபோது இட்லி, வடை சுட்டுக் கொண்டு இருந்தார்.
10 வருடம் பொறுத்தாகிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்கள் பொறுக்கலாம் சரியா? கலைஞர் என்ன செய்கிறார் என்று தெரிந்துவிடும்.
**
முட்டைக்குள் குஞ்சு தயாராகிரது என்றால் நம்ப வேண்டும் இட்லி , நம்ப மாட்டேன் முட்டையை உடைத்துக் காட்டு என்று அடம்பிடிக்கக்கூடாது மொய்லி சொன்னார் என்பதற்காக. :-))
****
நிச்சயம் இதில் அரசியல் இல்லாமல் இல்லை. ஆனால், அரசியல் இல்லாமல் தீர்வும் காணமுடியாது என்பதும் கசப்பான உண்மை. :-(((
கல்வெட்டு அவர்களின் பின்னூட்டம் வினோதமாய் இருக்கிறது. அவரின் தர்மசங்கடம் புரிந்தாலும் கருநாநிதியின் இந்த திடீர்-பல்டி அவரின் தீவீர அல்லக்கைகளுக்கு மெல்லவும் முடியவில்லை, முழுங்கவும் முடியவில்லை.
கர்நாடகத்தில் எடியூரப்பா வருவதற்கு வாய்ப்பு அதிகம். ஹொகேனக்கல் வந்து கலாட்டா செய்துவிட்டுப்போயிருக்கும் அவரிடம் கருநாநிதி போய் சமரசம் பேசப்போகிறாரா? அல்லது, கிருஷ்ணா வந்தால் அவரிடம் பேசப்போகிறாரா? - கிருஷ்ணாதான் இதை எதிர்த்து உச்சநீதி மன்றம் போவதாக இப்போதே சொல்லிவிட்டாரே!
இது போகாத ஊருக்கு வழி. இந்த அர்த்தராத்திரி அந்தர்பல்டிக்கு காரணம் ஒன்று ஜெயலலிதா சொல்வதுபோல் கனிமொழி மந்திரிபதவி என்கிற கருவாடு இந்த பூனைகளுக்கு காட்டப்பட்டிருக்க வேண்டும்.
இப்படி "ஸ்டேட்ஸ்மென்" வேடம் திடீரென ஏற்ற கருநாநிதி, சேது சமுத்திர திட்டத்தில் மட்டும் ஏன் வீரம் பேசினார்? அந்த திட்டத்தை ஒத்திப்போட மத்திய அரசு எத்தனையோ கேட்டுக்கொண்டும் இவர் வீம்பு பிடித்தது ஏன்? அந்த திட்டத்திற்காக கூட இந்தியா எங்கும் பல இடங்களில் வி.எச்.பி ஆர்ப்பாட்டம் நடத்தியது! பெங்களூரில் ஒருவரை உயிரோடு எரித்தார்கள் பஜரங்கதள் ஆட்கள். ஆனால், அப்போதெல்லாம் இவர் "நான் என் தமிழர்கள் நலனைக் கேட்கிறேன்" என்று ஏன் சொல்லவில்லை?
இப்போது இதே லாஜிக்கை வைத்து இனிமேல் கர்னாடகம் காவேரித்தண்ணீரை கொடுக்க ஏன் மறுக்க முடியாது? எங்களூரில் இதனால் கலவரம் வெடிக்கிறது, அதனால் ஆறு மாதம் பொருங்கள் என்று அவர்கள் சொல்ல மாட்டார்களா? காவேரி கலாட்டா போது மாண்டியா விவசாயிகள் கபினி அணையில் தற்கொலைப்போராட்டம் செய்யப்போவதாக எச்சரித்தார்கள். இதை கிருஷ்ணா தண்ணி கொடுக்க மாட்டேன் என்றார். இப்போது கருநாநிதி சொல்லும் அதே காரணம்தான் - "என் மக்களுக்கு நலனுக்காக. டென்சன் அதிகமாக இருக்கிறது. இப்போது முடியாது..." என்று. ஆனால், உயர்நீதி மன்றம் அதை ஏற்கவில்லை. "உன்னால் சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாவிட்டால் நீ பதவியில் இருக்க லாயக்கில்லை. ஆனால், தண்ணீர் திறந்து விட வேண்டும் " என்றது.
அந்த நீதி யே இப்போது கருநாநிதிக்கும். "அய்யா, உங்களால் தமிழர்களை காக்க முடியவில்லை என்றால் நீங்கள் பதவியில் இருக்க லாயக்கில்லை. ஆனால், குடிக்கும் தண்ணீருக்கு காக்க வைக்காதீர்கள்..."
கருநாநிதி ஆரம்பித்த திட்டங்களை விட நிறுத்திய திட்டங்கள்தான் அதிகம்.. சென்னை விமானநிலையம் ஆகட்டும், டாடா டைடானிய தொழிற்சாலை ஆகட்டும், சேது திட்டம் ஆகட்டும் எல்லாம் புஸ் ஆகிறது. எனக்கென்னவோ அவர் மஞ்சள் துண்டு ராசி இல்லை என்று தோன்றுகிறது. அந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பாபாவிடம் கேட்டு இன்னொரு மோதிரம் வாங்கி போட்டுக்கொண்டால் ஒருவேளை தோசம் நீங்கும். கல்வெட்டு அய்யா அதற்காக வேண்டட்டும்.
நன்றி
ஜயராமன்
கல்வெட்டு
////காங்கிரஸ் கட்சித் தரப்பிலிருந்து யாரும் அப்படிப்பட்ட வேண்டுகோளை என்னிடம் வைக்கவில்லை. இதைப்பற்றி பேசவும் இல்லை. அப்படி ஒரு கட்சியின் நலன் கருதி நான் அந்த அறிவிப்பை செய்யவில்லை. இரண்டு மாநிலங்களிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை எண்ணி எடுக்கப்பட்ட முடிவுதான் அது. அதாவது மனிதநேய முடிவு - மாநிலங்களின் ஒற்றுமைக்கான முடிவு!//
1. இரண்டு மாதம் கழித்து இதே நிலமை வராது என்பது என்ன நிச்சயம் ?
2. கவர்னர் ஆட்சியின் போதே இப்படி என்றால் காங்கிரஸ்(ஒரு பேச்சுக்கு) ஆட்சியின் போது என்ன நடக்கும் ? பி.ஜே.பி என்றால் கேட்கவே வேண்டாம்.
3. உச்சநீதிமன்றம்தான் சரியான தீர்வுக்கு உரிய இடம் என்று கூறும் இதே எஸ்.எம்.கிருஷ்ணாதான், முன்பு முதல்வராக இருந்தபோது, உச்சநீதிமன்ற் காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மறுத்து, உச்சநீதிமன்றத்தால் மிகக் கடுமையாக கண்டிக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.
தமிழர்களுக்கு எதிராக அப்போது மூண்ட மோதலைத் தடுக்க முடியாவிட்டால், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாவிட்டால் எதற்காக முதல்வர் பதவியில் இருக்கிறீர்கள், பதவியை விட்டு போய் விடுங்கள் என்றும் உச்சநீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டார் என்பதை கலைஞர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.
4. மெளளியின் இந்த மாதிரி பேச்சை ஏன் சோனியா காந்தி கண்டிக்கவில்லை ? ( கர்நாடகத்தின் மீது, சோனியாவிற்கு தனி பாசமாம் )
5. நான் கேட்ட கேள்வி சத்தியராஜ் கேட்டதைவிட மைல்டாகதான் கேட்டேன்.
இந்த கலைஞர் மீது சந்தேகம் எல்லாம் இல்லை. நிச்சயம் சோனியா காந்தி பேசிய பின் தான் இந்த முடிவு எடுத்திருப்பார் என்று திடமாக நம்புகிறேன்.
எனக்கென்னமோ கலைஞர் கூறியதிலும் மொய்லி கூறியதிலும் பெரிய வித்தியாசம் இல்லை, கர்நாடகத்தில் தேர்தல் வருவதால் அதில் தப்பிக்க அவருக்கு அந்த பேச்சு, தமிழக நிலையில் திமுகவின் நிலைபாடும் கிட்டதட்ட காங்கிரஸின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாக காட்டிக்கொள்ள முடியாத நிலை,இது அறிந்துதான் எல்லோரும் ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்க முயல்கிறார்கள். இந்த திட்டம் உடனடியாக நாளையே பலனைத்தரப்போவதில்லை எனவே ஓரிருமாதம் கடந்து தொடங்குவதால் காங்கிரஸுக்கும் லாபம் திமுகவுக்கும் லாபம் என்கிற மனோநிலையில் ஒருவகையில் இது ஒரு அரசியல் ஸ்திர தன்மையோடு முன்னெடுக்க உதவும். இப்போது இவர்கள் கேட்கும் கலைஞரின் உறுதியான நடவடிக்கை கர்நாடக தேர்தலுக்கு பிறகு கேட்காமலேயே அவர் செய்வார் என்பதுதான் சாத்தியம். இதனை புரிந்து கொள்வதுதான் நடுநிலையானவர்களின் கடமை என நான் நினைகிறேன்.
அய்யா ஜயராமன் அவர்களே,
நான் யாருக்கு அல்லக்கை என்பதை நீங்கள் கண்டுபிடித்து சொன்னதற்கு நன்றி!
// இந்த திடீர்-பல்டி அவரின் தீவீர அல்லக்கைகளுக்கு மெல்லவும் முடியவில்லை, முழுங்கவும் முடியவில்லை.//
கடவுளுக்கே அல்லக்கையாக இருக்க விரும்பாதவன் நான், கலைஞருக்கா? ம்..ம்..ம்ம்
கூடி வாழும் சமூகக் கட்டமைப்பில் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சிலரால் ஆளப்படுகிறேன் என்பதே உண்மை.
அப்படி ஆள்பவர்கள் எடுக்கும் முடிவுகள் எனது வாழ்க்கையை நேரடியாக அல்லது மறைமுகமாக ஒவ்வொருநிமிடமும் பாதித்துக்கொண்டு உள்ளது. அதை நான் மறுக்க முடியாது.
கலைஞருக்கு எதுவாக இருந்தாலும் ராமனும் கல்வெட்டும் அவரின் முடிவின் விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.
உங்களை மாதிரி ராமர்களுக்கு நான் எந்த இடத்தில் கலைஞரை விமர்சித்துள்ளேன் என்றெல்லாம் சுட்டி கொடுத்து நிச்சயம் நிரூபிக்க முயலமாட்டேன்.
எனவே நீங்கள் என்னைப் எப்படிப் பார்க்க வேண்டும் என்பது உங்களின் உரிமை. எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள். :-))
****************
இட்லிவடை,
//1. இரண்டு மாதம் கழித்து இதே நிலமை வராது என்பது என்ன நிச்சயம் ? //
நிச்சயம் கிடையாது.
நம்மைச் சுற்றியுள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநில தண்ணீர்ப் பிரச்சனைகள் தீர்வது என்பது பெரிய சிக்கல்.
அனைத்துக் கட்சிகளும் தொலைநோக்குப் பார்வையில் ஒரு திட்டம் அமைத்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொய்வடையாமைல் சில பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுத்து செயல்பட வேண்டும்.
ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்கும் அரசியலில் இது நிச்சயம் முடியாது.
இரண்டுமாதம் கழித்து கலைஞர் கவிதை பாடலாம். சாத்தியம் உண்டு. காங்கிரஸ் கில்லாடி இதில்.
//2. கவர்னர் ஆட்சியின் போதே இப்படி என்றால் காங்கிரஸ்(ஒரு பேச்சுக்கு) ஆட்சியின் போது என்ன நடக்கும் ? பி.ஜே.பி என்றால் கேட்கவே வேண்டாம்.//
பி.ஜே.பி ...தேசிய அளவில் இராமரைத் தவிர இதுக்கு வேறு கொள்கை கிடையாது. அதுவும் இடையூரப்பா என்றால் , சங்குதான். கோர்ட்-கேஸ் வட்டாள்....
கங்கிரசும் சளைத்தது அல்ல. கிருஷ்ணா செய்த கொடுமைகளும் கோர்ட் திட்டியதும் ஞாபகம் இருக்கலாம் உங்களுக்கு.
தேசிய கட்சிகள் எல்லாம் வார்டு அளவில் அரசியல் பண்ணுதுக.
ஆனால், சேது திட்டத்தில் இன்னும் விடாமல் காய் நகர்த்தப்பட்டுக்கொண்டுதான் உள்ளது. அதுபோல் இதுவும் தொடரும் என்று நம்புவோம்.
//3. உச்சநீதிமன்றம்தான் சரியான தீர்வுக்கு உரிய இடம் என்று கூறும் இதே எஸ்.எம்.கிருஷ்ணாதான், முன்பு முதல்வராக இருந்தபோது, உச்சநீதிமன்ற் காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மறுத்து, உச்சநீதிமன்றத்தால் மிகக் கடுமையாக கண்டிக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.
தமிழர்களுக்கு எதிராக அப்போது மூண்ட மோதலைத் தடுக்க முடியாவிட்டால், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாவிட்டால் எதற்காக முதல்வர் பதவியில் இருக்கிறீர்கள், பதவியை விட்டு போய் விடுங்கள் என்றும் உச்சநீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டார் என்பதை கலைஞர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். //
கலைஞர் மறந்து இருக்க மாட்டார் ஆனால் இப்போது அதை ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. :-))
இது நிச்சயம் அரசியல் என்பதிலும், அதில் சோனியாவின் பங்கு உள்ளது என்பதிலும் எனக்கு மொய்லி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.
ஆனால், இந்தப் பிரச்சனையில் 2 மாதம் பொறுக்கலாம் என்பதே எனது நிலை.
// 4. மெளளியின் இந்த மாதிரி பேச்சை ஏன் சோனியா காந்தி கண்டிக்கவில்லை ? ( கர்நாடகத்தின் மீது, சோனியாவிற்கு தனி பாசமாம் )//
சோனியா எப்படி கண்டிப்பார் ?
அவர் கிருஷ்ணாவையே கண்டிக்க முடியவில்லை. ?
//5. நான் கேட்ட கேள்வி சத்தியராஜ் கேட்டதைவிட மைல்டாகதான் கேட்டேன். //
சத்யராஜ், ...ம்ம்.. அவர விட்டுவிடுவோம் இப்போது
//இந்த கலைஞர் மீது சந்தேகம் எல்லாம் இல்லை. நிச்சயம் சோனியா காந்தி பேசிய பின் தான் இந்த முடிவு எடுத்திருப்பார் என்று திடமாக நம்புகிறேன்.//
தவறே இல்லை.
சோனியாவின் வேண்டுகோளின் பேரில் கலைஞர் இதனை தள்ளிப்போட்டிருக்கலாம். இதற்கு சோனியா கொடுத்த விலை என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
அரசியலில் சில காய் நகர்த்தல்களின் பின்னனை நமக்குத் தெரியாது. கன்னடர்களுக்கு இப்போது தேர்தல் அஜெண்டா இல்லால் போய்விட்டது .
இன்னும் கொஞ்ச நாளில் கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலேயெ தெரிந்துவிடும். அது நிச்சயம் ஒக்னேகல் பற்றிப்பேசாது என்றே நம்புகிறேன்.
ஆனால், வட்டாள்,பி,ஜே,பி வகையறாக்காள் ஒக்னேகல் பற்றிப் பேச வாய்ப்பு உள்ளது.
****
நான் கேட்டது, நீங்கள் எப்படி மொய்லியை மட்டும் நம்புகிறீர்கள் என்று . அவர் என்ன வேற்றுக்கிரக அரசியல்வாதியா? அவரின் சோனியா-கர்நாடகா அன்பு பேச்சு 100% வடிகட்டப்பட்ட கர்நாடக அரசியல்தனம்.
கல்வெட்டு அய்யா,
என் பின்னூட்டத்திற்கு மதிப்பளித்து அதற்கு விளக்கம் தர முயன்றதற்கு நன்றி.
///அய்யா ஜயராமன் அவர்களே,
நான் யாருக்கு அல்லக்கை என்பதை நீங்கள் கண்டுபிடித்து சொன்னதற்கு நன்றி! ///
நான் உங்களை கலைஞரின் அல்லக்கை என்று சொல்லவே இல்லையே!! :-) என் பதிலை மறுபடியும் படிக்க வேண்டுகிறேன்.
நீங்களாக முன்வந்து நான் கலைஞருக்கு அல்லக்கை இல்லை, இல்லவே இல்லை என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன அய்யா?
//// கடவுளுக்கே அல்லக்கையாக இருக்க விரும்பாதவன் நான், கலைஞருக்கா? ம்..ம்..ம்ம் ///
கடவுளுக்கு அல்லக்கை தேவையில்லை. ஆனால், கலைஞருக்குத் தேவை. கடவுளுக்கு அல்லக்கையாக இருப்பது என்பது இப்போதுதான் கேள்விப்படுகிறேன். உங்களுக்கு கடவுள் தத்துவத்தில் குழப்பமா, இல்லை அல்லக்கை பொருளில் குழுப்பமா? க வுக்கு க வைத்து எதுகையாக எழுதுவதற்காக முயற்சியோ இது! கனிமொழியின் கவிதை மாதிரி இருக்கிறது.
/// உங்களை மாதிரி ராமர்களுக்கு நான் எந்த இடத்தில் கலைஞரை விமர்சித்துள்ளேன் என்றெல்லாம் சுட்டி கொடுத்து நிச்சயம் நிரூபிக்க முயலமாட்டேன்.
எனவே நீங்கள் என்னைப் எப்படிப் பார்க்க வேண்டும் என்பது உங்களின் உரிமை. எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள். :-)) ///
ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது...
தங்களிடம் மற்றபடி இந்த திட்டத்தின் திடீர் பல்டியைப் பற்றி என் கருத்துக்களுக்கு பதில் ஏதும் இல்லாததால் நீங்கள் அதில் சம்மதப்படுகிறீர்கள் என்றே தோன்றுகிறது. சரி, இதோடு முடிச்சுக்கலாம்...
நன்றி
ஜயராமன்
மொய்லி சொன்னது பொய் என்றால் கலைஞர் மறுத்து அறிக்கை விடட்டும்.
மெளனம் சாதித்தால் அது உண்மை என்றுதானே அர்த்தம்.சோனியா என்ன
சொன்னரோ, இந்தப் பேரத்தில் விட்டுக்கொடுக்க கலைஞர் எதைக்
கேட்டாரோ, பெற்றரோ அதெல்லாம்
ஒருநாள் வெளியேவராமலா போய்விடும்.
kalvetu, Your point is right. We believe people based on our own perceptions.
"If asuran or tamilachi has raised the same question, you would have supported them emotionally. You are questioning idlyvadai because you perceive him/her to be the supporter of jayalalitha and also you believe that the support is based on caste and also you believe that he is poking at karunanidhi(whenever it suits him) solely on the caste equations"
I have read most of your blogs and others. I agree with lots of what you have said. (not the way you have said them)
முட்டைக்குள் குஞ்சு தயாராகிரது என்றால் நம்ப வேண்டும் இட்லி , நம்ப மாட்டேன் முட்டையை உடைத்துக் காட்டு என்று அடம்பிடிக்கக்கூடாது மொய்லி சொன்னார் என்பதற்காக. :-))
You have to be really an idiot to use this analogy to support karunanidhi's statement and even a bigger one to consider his statements as true.
But the blog title "Moiliyae idhu gnayamaa" is better suited for this topic. After putting so much of trust and confidence in sonia, karunanidhi does not deserve such a statement from Moily.
So, i request idlyvadaiyaar to change the title.
mani
Post a Comment