பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 08, 2008

சட்டசபைக்கு வந்தார் ஜெ - வந்த வேகத்தில் வெளியே சென்றார்

சட்டசபைக்கு ஜெ திடீர் வருகை, வழக்கம் போல் வெளிநடப்பு
( கொடநாடு செல்கிறார் ஜெ.-ஒரு மாதம் ரெஸ்ட்! )

ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பிரச்சனை தொடர்பாக அவையை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டசபை யிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
.
அவர்களை தொடர்ந்து மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை அவை கூடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதாவும், அதிமுக உறுப்பினர்களும் சபைக்கு வந்து அமர்ந்தனர்.

சரியாக 9.30 மணிக்கு வழக்கம் போல திருக்குறள் வாசித்து விட்டு சபாநாயகர் அவை நடவடிக்கைகளை தொடங்கினார். உடனே எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா எழுந்து, "தமிழகத்தின் அதி முக்கியமான ஒரு பிரச்சனை குறித்து இந்த அவையை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதற்கு அனுமதி அளித்து அவையை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஆவுடையப்பன், கேள்வி நேரத்தில் போது வேறு எந்த பிரச்சனையையும் விவாத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று பேரவை விதி 32ஐ எடுத்துக் கூறி அனுமதி மறுத்தார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது.

அப்போது ஜெயலலிதா முக்கிய மான பிரச்சனை குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார்.

எனவே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒத்திவை, ஒத்திவை, விவாதிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்று குரலெழுப்பினார்கள். தொடர்ந்து அவர்கள் சில நிமிட நேரம் அரசுக்கு எதிராகவும், சபாநாயகருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சனை குறித்து அவையை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க அனுமதி மறுப்பதால் அதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி விட்டு ஜெயலலிதா சட்டசபையிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து மதிமுக உறுப்பினர்களும் இந்த வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்சனை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அதிமுக வெளிநடப்பு செய்ததாக கூறினார்.

4 Comments:

சங்கு மாமா said...

ரெஸ்ட் எடுக்க போகுறதுக்கு முன்னே...சட்ட சபைக்கு சும்மா வந்து கலாய்ச்சிட்டு போனாரா ?.. எம் புருஷனும் கச்சேரிக்கு போனான் ங்கற கதை... மாதிரி..
என்னிக்கு அந்த அம்மா சசிகலா குரூப் விட்டு வெளியே வருதோ, அன்னிக்கு தான் அ தி மு க உருப்படும்... எம் ஜி ஆர் வளர்த்த கட்சிய ஜால்ரா கும்பல் ஆக்கி அலைய விட்டுடுதே இந்த அம்மா ??

We The People said...

இதுவும் ஒரு பிழைப்பா?? இந்த பத்து நிமிஷ வேலைக்கு தான் ஒரு மாச ரெஸ்டா?? வாழ்ந்தால் தமிழக அரசியல்வாதியாக வாழவேண்டும், இல்லையேல் தமிழ்நாட்டில் சாவதே பெட்டர் போலவே :)))

Anonymous said...

She is a very BIG crack in tamilnadu !

Anonymous said...

பீனிக்ஸ் பறவை பிழைதெழத் தான் போகிறது . பொறுத்திருந்து பாருங்கள்.