பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 05, 2008

ஒகேனக்கல் பிரச்சனை கருணாநிதியின் வாபஸ் கண்டிக்கதக்கது ஜெயலலிதா

கர்நாடகாவில் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்கிறேன். புதிய கர்நாடக அரசு, தமிழகத்துக்கு நீதி வழங்கும் என நம்புகிறேன் என்றெல்லாம் கருணாநிதி கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மத்திய அரசின் நெருக்கடி காரணமாக ஒகேனக்கல் திட்டத்தை திரும்பப் பெற்று தமிழகத்திற்கு கருணாநிதி துரோகம் செய்துள்ளார் என்று, ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என, சட்டசபையில் ஒரு மனதாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றி விட்டு பின்னர், இவ்வளவு பெரிய கொள்கை ரீதியான முடிவை சட்டசபைக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக அறிவிப்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார் மேலும் அரசியல் கட்சிகளால் அரசியல் லாபத்திற்காக போடப்பட்டுள்ள தடைக்கற்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசின் நெருக்கடி காரணமாக தமிழர்களின் உரிமையை காற்றில் பறக்க விட்டு ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பது மாபெரும் துரோகச் செயல். என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கவர்னர் ஆட்சியிலேயே இவ்வளவு பிரச்சனை என்றால் தேர்தல் முடிந்து எந்த ஆட்சி வந்தாலும் எப்படி தீர்வு வரும் ?

1 Comment:

Anonymous said...

IV Why don't you post the sensible & hard hitting editorial of Dinamani which has castigated Karunanidhi for the way he has handled the Hogenakkal issue ever since it was sanctioned in 1998.