பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 04, 2008

தமிழ் திரையுலகினர் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது

கர்நாடகாவை கண்டித்து தமிழ் திரையுகினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் முன்னணி நடிகர்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் சத்யராஜ், முரளி, சந்திரசேகர், சரத்குமார், டி.. ராஜேந்தர், ராதாரவி, விஜயகுமார் மற்றும் நடிகைகளள் ராதிகா, விந்தியா, மனோரமா மஞ்சுளா, சத்யபிரியா உட்பட நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில், காலை 8 மணியிலிருந்து, மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற உள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக நிர்வாகிகள் அமர்வதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேசிய கே.ஆர்.ஜி., இருமாநிலத்தவர்களும் சகோதர பாசத்துடன் இருக்க வேண்டும் என கூறினார். தமிழர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என கர்நாடகாவிற்கு எச்சரித்தர்

இந்த விஷயத்தை ஊதி பெரிசாக்க சன்.நியூஸ் முடிவு செய்துள்ளது. நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். நடிகர் சீமானை பேட்டி எடுக்கிறார்கள். நடுவில் நடிகர்கள், நடிகைகள் பேட்டி என்று பரபரப்பாக இருக்கிறது.

டி.. ராஜேந்தர் - நாங்க இப்ப தான் இடிக்க ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் அடிக்க ஆரம்பிக்கவில்லை. அடித்தால் நீங்கள் ( கன்னட மக்கள் ) தாங்க மாட்டீர்கள்.

பார்த்திபன் - இது வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உண்ணாவிரதம் என்றார்.

பேசுபவர்கள்: எங்கள் படை திரண்டால் கர்நாடகம் தாங்காது என்று தவறாமல் சொல்லுகிறார்கள்.

ரஜினி வந்தார்
உண்ணாவிரத மேடைக்கு ரஜினிகாந்த் வந்தார். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். முதல் வரிசையில் அமர்ந்த ரஜினி அவருக்கே உரிய ஸ்டைலில் கன்னத்தில் விரல் வைத்தபடி அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்.

7 Comments:

Anonymous said...

ஆதாயம் இல்லாமல் சன்டிவியினர் எதையும் ஊதி பெரிதாக்கமாட்டார்களே ? சம்திங் ஈஸ் குக்கிங். இதே போல் பெங்களூரில் நடைபெறும் கன்னட நடிகர்களின் போராட்டத்தையும் கன்னட டிவிசேனலில் முரசொலி செல்வம் ஒளிபரப்புவாரா ?

இவ்வளவு வீராப்பு பேசும் தமிழ் நடிகர்களின் படங்களை கர்நாடகத்தில் ஓட விடுவார்களா (இனிமேல்). இதுக்கு பேருதான் சொ.செ.சூ. வா ?


மாறன்களின் கன்னட சேனலில் முக்கிய, பிரபல காம்பியராக இருக்கும் தீபக் திம்மையாவின் இந்த கட்டுரை / பேட்டி படித்தால் தற்போது கன்னட வெறியர்கள் என தமிழக மீடியாக்களால் பெரிதாக்கப்பட்டுவரும் கன்னட ரக்ஷணா வேதிகே (நாரயண கவுடா அணி) தலைவர் நாராயண கவுடாவின் பின்புலம் தெரியவரும்.

http://churumuri.wordpress.com/2008/03/05/whats-bad-for-the-world-is-good-for-kannadigas/

http://www.deepakthimaya.com/kannadainterviews/Narayana%20Gowda.doc

வால்பையன் said...

சிம்பு, நயன் பக்கத்து பக்கத்துல உட்கார்த்திருந்தாங்க பாத்திங்களா?

வால்பையன்

Anonymous said...

இட்லிவடை முதலில் இந்த நடிகர்கள் தங்களுக்குள் பேசித்தீர்த்துக் கொள்ளட்டும்ம எஹ்டை எதிர்க்கிறார்கள் என்றூ.. அப்புறம் அதுக்கு வேற சண்டை வரும்...

cgs

Anonymous said...

ஞாயிறு காலை 9.30மணிக்கு கால் மேல் கால் போட்டு ஒவ்வொரு தமிழ் சினிமா பற்றியும் ஒற்றை வரியில் கமெண்ட்டு விட்டு பெரிய ' ' மாதிரி சினிமா விமர்சனம் செய்து சத்யராஜ் போன்றோரை சன்டிவிக்கு எதிராகத் திருப்பிய அதே சுரேஷ்குமார் தானே இன்றைக்கு சன் டிவிக்காக சினிமா நடிகர்களிடம் பேட்டி எடுத்து லைவ்வாக ஒளிபரப்புவது ?

SathyaRam said...

இந்த சினிமகரனுக்கு வேற வேலையே கிடையாத இந்த டிவி விளம்பரம் குடுக்கிறான் "தன்மானம் காக்க உண்ணாவிரதம் ". டேய் நீங்க எல்ல்லாம் மானம் இல்லாம தான நடிக்கிரிங்க . நீங்கள் உங்கள் வேலயே பாத்துண்டு போங்க ஆடிநோமா காசு பண்ணிநோமா இந்த அரசியலளிதான் உங்க கர பட்டுடுத்து இந்த நதியாவது விட்டு வைங்க

SathyaRam said...

இந்த சினிமகரனுக்கு வேற வேலையே கிடையாத இந்த டிவி விளம்பரம் குடுக்கிறான் "தன்மானம் காக்க உண்ணாவிரதம் ". டேய் நீங்க எல்ல்லாம் மானம் இல்லாம தான நடிக்கிரிங்க . நீங்கள் உங்கள் வேலயே பாத்துண்டு போங்க ஆடிநோமா காசு பண்ணிநோமா இந்த அரசியலளிதான் உங்க கர பட்டுடுத்து இந்த நதியாவது விட்டு வைங்க

Anonymous said...

நமது நடிகர்களின் இந்த போராட்டம் தேசிய அளவில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். நாம்தான் இங்கு கத்திக்கொண்டு இருக்கிறோம். NDTV என்ன சொல்கிறது என்பதை பாருங்கள். NDTV யை பார்ப்பவர்களுக்கு என்ன தோணும்.

http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080045876