பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 03, 2008

கன்னட நடிகர்களும் நாளை தர்ணா போராட்டம்

கன்னட நடிகர்கள் ஏட்டிக்கு போட்டி பெங்களூரில் நாளை தர்ணா போராட்டம் அறிவிப்பு

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் திரையுலகின் சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்துக்கு போட்டியாக, கர்நாடக மாநில திரைப்படத்துறையினரும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து, கர்நாடக சினிமா வர்த்தக சங்க துணை தலைவரும், நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவருமான சாரா கோவிந்த் கூறியதாவது:-

ஒகேனக்கல் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்துக்கு நியாயம் கிடைக்க கோரி, பெங்களூர் டவுன் ஹாலில் 4-ந் தேதி (நாளை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும். இதில் அனைத்து நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கிறார்கள். தமிழக நடிகர்களின் போராட்டத்துக்கு எதிராக நாங்கள் போராடவில்லை. மக்கள் நலன் கருதி போராடுகிறோம்.''

0 Comments: