பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 02, 2008

தமிழ் திரையுலக சங்கத்தினர் அதிரடி

சேப்பாக்கத்தில் பிரமாண்ட ஏற்பாடு: நடிகர்கள் உண்ணாவிரதத்தில் 10 ஆயிரம் பேர் திரள்கிறார்கள்-ராம.நாராயணன் பேட்டி.
சும்மா இருந்த சங்கை...

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிராக கர்நாட காவில் கலவரத்தில் ஈடுபட்ட கன்னட வெறியர்கள் தமிழ் படங்கள் ஓடும் தியேட் டர்களை அடித்து நொறுக் கினார்கள். தமிழ் படங்களை திரையிடக்கூடாது என்றும் தடுத்தனர்.

இதனால் அதிர்ச்சியான தமிழ் திரையுலக சங்கத்தினர் சென்னையில் கூடி நேற்று அதிரடி நடவடிக்கைகள் எடுத் தனர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இருந்து கர்நாடக பிரிவு தற்காலிகமாக நீக்கப்பட்டது.

கன்னட வெறியர்களை கண்டித்து நாளை மறுநாள் (4-ந்தேதி) உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. உண்ணா விரதத்தில் கலந்து கொள் ளாதவர்களுக்கு திரையுலகம் ஒத்துழைப்பு தராது என்று ராம.நாராயணன், சரத்குமார், கே.ஆர்.ஜி. ஆகியோர் அறி வித்தனர்.

உண்ணாவிரத ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. வெளியூர் படப்பிடிப்பில் இருப்பவர்களும், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதையடுத்து வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புகிறார்கள்.

திரையுலகினர் ஏற்கனவே நடத்திய பல போராட்டங்களில் நடிகர்-நடிகைகளில் குறிப்பிட்ட சிலர் பங்கேற்க வில்லை. சில காரணங்களை சொல்லி ஒதுங்கினர். உண்ணா விரதத்தில் அது போல் எவ ரேனும் ஒதுங்க நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் 400 பேர் பங்கேற் கின்றனர்.

திரையுலக போராட்டம் குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் :

திரையுலகினர் உண்ணா விரதம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறும். இதற்காக போலீசில் இன்று அனுமதி பெறுகிறோம்.

உண்ணாவிரதத்துக்காக 50 பேர் அமரும் வகையில் விசேஷ மேடை அமைக்கப்படும். மேடை எதிரில் நாற்காலிகள் போடப்படும். சாமியானா பந்தலும் அமைக்கப்படும்.

4-ந்தேதி வெளியூர் படப்பிடிப்புகளும் நடைபெறாது. சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணிகளும் நடக்காது. நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப் பினர்கள், தயாரிப்பாளர் சங்கத்தினர், பெப்சி தொழிலாளர்கள், டைரக்டர்கள், விநி யோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்வர். மொத்தம் 10 ஆயிரம் பேர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பார்கள்.

காலை 8 மணிக்கு உண் ணாவிரதம் தொடங்கும். மாலை 5 மணி வரை நடை பெறும். திரையுலகைச் சேர்ந்த அனைவரும் இந்த உண்ணா விரத போராட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


உண்ணாவிரதத்துக்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுவதால் பலத்த போலீஸ் பாது காப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்கத்து ஓட்டல்களிலும் அன்று நிறைய வியாபாரம் இருக்கும் என்று தகவல் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

9 Comments:

Anonymous said...

Intresting to see how rajni will handle this....

No one ever questions the ruling central government whenever this issue erupts...

சங்கு மாமா said...

சினிமாக்காரங்க உண்ணாவிரதம் அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதது...ACTUAL ஆ பாத்தீங்கன்னாக்க, மார்க்கெட் போனவன் தான் உக்கார்ந்து இருப்பான்...வீணா டிராபிக் ஜாம், கூட்டங்கூடறது.. போலீஸ் தடியடி, தள்ளுமுள்ளு இதான் நடக்க போறது...நடிகர்கள்..அவங்க assistants flask ல ஜூஸ் / சரக்கு ரெடி யா வெச்சி இருப்பாங்க..அப்பப்போ போயி ஒரு சிப் அடிச்சிட்டு வந்து உண்ணாவிரத கும்பல்ல உக்காந்து கிடுவாங்க... பாப்போம்..ரஜினி, அர்ஜுன், அப்பாஸ் எல்லாம் வராங்களான்னு....
மண்ணெண்ணெய் .. வேப்பெண்ணை .. வெளக்கெண்ணை...
பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன ங்குற மாதிரி இது...சும்மா ஸ்டண்ட்..

IdlyVadai said...

அப்டேட்

1. ரஜினி மற்றும் கர்நாடகத் தில் பிறந்த நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கா விட்டால் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கே.ஆர்.ஜி. கலந்து கொள்ளாத நடிகர்களுக்கு நேற்று நிறை வேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் திரையுலகம் எந்த ஒத்துழைப்பையும் அளிக்காது என்று கூறினார்.

2. இரு வாரங்களாக ஐதரா பாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு ரஜினி சென்னை திரும்பியுள்ளார். திரையுலகத்தினரின் தீர்மானம் குறித்து ஆலோசித்து வருகிறார். இன்று அல்லது நாளை இப்பிரச்சினை குறித்து அவர் அறிக்கை வெளியிடு வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VENKIEE said...

//ஓகனேக்கல் எங்களுக்குச் சொந்தமானது என்று கர்நாடகத்தினர் கூறினால், பின்னர் பெங்களூரை எங்களூரு என்று நாங்கள் கூற நேரிடும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி எச்சரித்துள்ளார்.//

How is it ?? PMK Rocks !!!!

Anonymous said...

rajani kanniyakumariyil nadaippayanam aarammpikkalaam.illaiyel irukkave irukku imayamalai.

Ravi said...

IV, maybe we should go visit these people and spit them on their faces. What is this nonsense? Anyways, this is on expected lines only isnt it?

Venpu said...

தமிழ்நாட்டு மேல ரொம்ப பாசம் இருக்கிற இந்த ____ பசங்க, நாளைக்கு உண்ணாவிரதத்தில கலந்துகறதுக்காக, பாதி பேர் ஹைதராபாத்திலருந்தும், மீதி பேர் மைசூர்ல இருந்தும் வருவானுங்க (ஷூட்டிங்ல அங்கதானு நடக்குது). இந்த ஒரு நாள பந்தல்ல உக்காந்து வேஸ்ட் பண்றதுக்கு பதிலா எல்லாரும் சேந்து ஒரு காமடி படம் எடுத்து இலவசமா காமிச்சா கூட ஒரு பிரயோஜனம் இருக்கும் (ஒரு 3 மணி நேரமாவது பாக்குறவன் சந்தோசமா இருப்பான்)

Venpu said...

//
Ravi said...
IV, maybe we should go visit these people and spit them on their faces. What is this nonsense? Anyways, this is on expected lines only isnt it?
//

well said ravi.. better we can spit in our bathroom itself. I don't want to waste any time in visiting these guys.

Anonymous said...

Mr.இட்லிவடை
yethula comedy
pannanum theriyatha.