பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 01, 2008

யோகாசனம் கற்றால் யோகம் வருமா?

யோகாசனம் கற்றால் யோகம் கிடைக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவை யில் தெரிவித்தார். பேரவையில் திங்கள்கிழமை, கேள்வி நேரத்தின் போது இது குறித்து நடை பெற்ற விவாதம்...

விடியல் சேகர் (காங்கிரஸ்): அரசு, தனியார் பள்ளிகளில் யோகாசனத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும். மரம் நடும் விழா நடத்தியதுபோல, ஈஷா யோகா மையம், உலக அறிவுத் திருக்கோயில் போன்ற அமைப்பு கள் மூலம் பள்ளிகளில் யோகாசனம் கற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(சத்தியமூர்த்தி பவனில் இருப்பவகளுக்கு குண்டலினி யோகம் மற்றும் சண்டலி யோகம் கற்று தரலாம் )

அமைச்சர் தங்கம் தென்னரசு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வாரத்துக்கு இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் யோகாசனமும் கற்றுத் தரப்படுகிறது. யோகா கற்றால் மன இறுக்கம் குறைகிறது. உடல் ஆரோக்கியம் ஏற்படுகிறது. கலைஞர் 84 வயதிலும் 24 வயது இளை ஞரைப்போல சுறுசுறுப்பாக இருப்பதற்கு யோகாசனமே காரணம். ஆழியாறு யோகா மையம் மூலம் இதுவரை, 1,10,000 ஆசிரி யர்களுக்கு யோகாசனம் கற்றுத் தரப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ. 1.61 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு மேலும் 80,000 ஆசிரியர்களுக்கு யோகாசனம் கற்றுத் தரப்படும்.
( யோகா பள்ளிகளுக்கு நல்ல யோகம் தான் )

ஜி.கே. மணி (பாமக): சர்க்கரை நோய், இதய நோய் போன் றவை இப்போது பள்ளி மாணவர் களுக்கும் வருகிறது. உணவு பழக்கமும், உடற்பயிற்சி இல்லாததும் தான் இதற்கு காரணம். எனவே மாணவர்களுக்கு யோகாசனத்தை யும், விளையாட்டையும் கட்டாய மாக்க வேண்டும். எம்.எல்.ஏக்க ளுக்கும் யோகாசனம் கற்றுத்தர வேண்டும்.

தங்கம் தென்னரசு: உடற்கல்விக்கு திமுக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
2006-2007-ம் ஆண்டில் 168 உடற் கல்வி ஆசிரியர்களும், 2007-2008- ம் ஆண்டில் 439 உடற்கல்வி ஆசி ரியர்களும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ.க்களை பொறுத்த வரை யோகம் இருந்தால் யோகம் (யோகாசனம்) கிட்டும்.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி: யோகாசனம் செய்ய வேண்டுமா னால் காலை 5.30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். சுமார் 10 எம்.எல்.ஏ.க்களாவது தயார் என்றால், அண்ணாநகரில் உள்ள ஆசன ஆண்டியப்பன் மூலம் எம்.எல்.ஏ. விடுதியில் யோகாசனம் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்.

( சென்னையில் தூங்கினால் தானே எழுந்திருக்க முடியும். 'கரண்ட் கட்'டில் ஏங்கே தூங்குவது ? )


ஜி.கே. மணி (பாமக): தினமும் காலையில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால் சர்க்கரை நோய் வராது என்று கடந்த ஆண்டு ஆர்க்காடு வீராசாமி பேரவையில் கூறினார்.
அவரது ஆலோசனையை நாங் கள் இன்றுவரை பின்பற்றி வருகிறோம்.

( சென்னை தண்ணியை குடித்தால் சர்க்கரை நோய் தவிர மற்ற எல்லா நோயும் வரும் )


எஸ்.வி. சேகர் (அதிமுக): தின மும் காலையில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால் சர்க்கரை நோய் வராது என்பதில் உண்மை இல்லை. பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிள்ளைக ளுக்கு நிச்சயம் சர்க்கரை நோய் வரும். தெரியாதத் தகவல்களை அவையில் கூற வேண்டாம்.

( நீங்க எங்க சார் வந்தீங்க ? ஃபேன்ஸி நம்பர் வாங்கவா ? )


வி.பி. துரைசாமி (பேரவை துணைத் தலைவர்): யோகம் இருந்தால் யோகம் கிட்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி னார். அது என்ன யோகம் என்று சொன்னால் நல்லது.

தங்கம் தென்னரசு: அவர வர்க்கு என்ன யோகம் வேண் டுமோ, அந்த யோகம் கிடைக்கும்.

பேரவை துணைத் தலைவர் யோகா கற்றால் கோபம் குறையும். ராஜ யோகம் கிடைத்தாலும் கிடைக்கும்.
( சோம்நாத் சாட்டர்ஜிக்கு யாராவது யோகா கற்று கொடுங்கள் பிளீஸ் )

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :யோகாசனம் கற்றால் யோகம் கிடைக்கும். என்ன யோகம் என்பது பரம ரகசியம்.

(ஒரு யோக பாடல் )
படம் : திருமாங்கல்யம்
குரல் : சுசீலா
இசை : எம்.எஸ்.வி.
நடிகை : ஜெயலலிதா

யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்..
யோகம்....

யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்..
இவள் சேரும் எந்த வீடும்
நீடு வாழும் ஜன்ம நேரம்...

0 Comments: