பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 01, 2008

எதிர்காலத்தில் மோடி இந்தியப் பிரதமராவது நிச்சயம் - சோ

கல்கியில் வந்த சோ பேட்டி

பா.ஜ.க.வைச் சேர்ந்த முதலமைச்சர்களில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறாரே?

“மற்ற கட்சிகளிலெல்லாம் சிறந்த முத லமைச்சர்கள் ஏராளமானவர்கள் இருப்பது போலவும், பா.ஜ.க.வில் மோடி ஒருவர் மட் டும்தான் சிறந்தவர் போலவும் எண்ணத்தை ஏற்படுத்தும் உங்கள் கேள்வியே தவறு. கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவில் மிகச் சிறந்த வெற்றிகரமான முதலமைச்சர் நரேந்திர மோடிதான். இது காங்கிரஸ், பி.ஜே.பி., கம்யூ னிஸ்ட் என... எல்லா கட்சிகளின் ஆட்சிக்கும் பொருந்தும்.”

2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்துக்கு, மோடிதான் காரணம் என்று இன்றும் சொல்லப்படுகிறதே?

“பொதுவாக எந்த முதலமைச்சரும், தங்கள் மாநிலத்தின் கலவரத்தை அடக்க உடனடியாக ராணுவத்தை அழைக்க முன் வரமாட்டார்கள். ஆனால் கலவரம் தொடங்கியதுமே, தாமதிக் காமல் உடனடியாக ராணுவத்தை வர வழைத்தவர் மோடி. எனவே, கல வரத்துக்குக் காரணம் மோடி என்ற குற்றச் சாட்டை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர் கலவரத்தைக் கட்டுப்படுத்த உட னடி நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் சரி.”

குஜராத் பயணத்தின்போது, கலவரத்தால் முஸ்லிம்களின் மனம் ரணப்பட்டிருப்பது தொ¢ந்தது. அந்த ரணத்துக்கு நிவாரணமாக மோடி என்ன செய்ய வேண்டும்?

“நீங்கள் யாரைச் சந்தித்தீர்கள் என்று எனக்குத் தொ¢யாது. ஆனால், முஸ்லிம்களும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். கலவரத்துக்குப் பிறகு, நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, முஸ்லிம்கள் பகுதிகளில் பி.ஜே.பி. வெற்றி பெற்றுள்ளது. மோடியை மதித்து, ‘முல்லா மோடி’ என்று குறிப்பிடும் முஸ்லிம்களும் அங்கே இருக்கிறார்கள்.”

கலவரத்தினால் நேரடியாகப் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களை நாங்கள் சந்தித்துப் பேசினோம். அவர்கள் மனத்தில் இன்னமும் ரணம் ஆறவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்?

“இருக்கலாம். அதற்கு மோடியை எப்படிக் குற்றம் சொல்லலாம்? அவர், யாரையும் வேறு படுத்திப் பார்ப்பதில்லை. துக்ளக் ஆண்டு விழா முடிந்தவுடன், பல முஸ்லிம்கள் என் னிடம் வந்து, ‘மோடியைப் பற்றி, இத்தனை நாட்கள் நாங்கள் தவறாக நினைத்துக்கொண் டிருந்தோம். அவரைச் சா¢யாகப் புரிந்து கொள்ள, ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத் தீர்கள்’ என்று நன்றி தெரிவித்தார்கள்.”

எதிர்காலத்தில் அகில இந்திய அரசிய லில், மோடியின் பங்கு எப்படி இருக்கும்?

“அவர் குஜராத்தில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதன் பிறகு, நிச்சயம் தேசிய அரசியலில் அவர் முக்கியத் துவம் பெறுவார். உடனடியாக இல்லாது போனாலும், எதிர்காலத்தில் மோடி இந்தியப் பிரதமராவது நிச்சயம்.”

1 Comment:

ஜயராமன் said...

"அடுத்த பிரதமர் மோடி - சோ"

சோ அப்படிச் சொல்லவில்லையே. தங்கள் பதிவிலிருந்து அவர் தன் பேட்டியில் "எதிர்கால பிரதமர்" என்றுதானே சொல்லியிருக்கிறார்.

ஒரு பரபரப்புக்காக இப்படி தலைப்பு வைத்தீர்களா என்று தெரியாது, ஆனால், விஷமத்தனமான பொருளை இது ஏற்படுத்துகிறது!

மற்றபடி திரு. சோ இராமசாமி அவர்களின் கருத்துக்கள் நியாயமானவை, உண்மையை உணர்த்துபவை.

நன்றி

ஜயராமன்