பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 28, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 28-04-08

பாடி காட் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்....

சிரஞ்சீவி இட்லிவடைக்கு,

நலமா ? நீ ஸ்ரீராமருக்கு எழுதிய கடிதத்தை அவரிடம் நேரில் கொடுத்தேன். முழுவதையும் படித்துவிட்டு,

"ஏன் இந்த மாதிரி நேரத்தை இட்லிவடை வீண் செய்கிறார். இந்தியாவில் நிறைய பேர் இந்த மாதிரி வெட்டியா இருக்கிறார்களே. நான் என்ன செய்வேன்!" என்று ரொம்ப வருத்தப்பட்டார்.

நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். அப்பறம் உன் இஷ்டம்.

இந்த வார ராமர் செய்தி :-)
ராமர் பாலம் பாதுகாக்க வேண்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில், ஏராளமான பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். ஆண்கள் பேசிக்கொண்டும், பிளாக் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்கள் செயலில் ஈடுபடுகிறார்கள். பெண்களுக்கு இருக்கும் தைரியம் பல ஆண்களுக்கு இருப்பதில்லை என்பது தான் உண்மை.

சில வாரங்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சோனியா சொன்னது
"ராகுல் காந்தியை அமைச்சராக்க தீர்மானித்தேன். அவரிடமும் கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்." என்ன ஒரு பெருந்தன்மை, தியாகம் என்று முதலில் தோன்றும். ஆனால் பகுத்தறிவு இருந்தால் அமைச்சரவை விரிவாக்கம் பிரதமர் முடிவு செய்ய வேண்டியது சோனியா இல்லை என்று தெரியும்.

பிரதமர் இப்படி சொல்லுகிறார் "ராகுல் காந்தி கட்சியில் முக்கியத் தலைவர். எனவே அவருடன் முக்கிய விஷயங்களில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திலும் அவரது ஆலோசனை கேட்கப்பட்டது" இந்தியா விளங்குமா ?

"ஸ்டீல் விலை உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது" இது பிரதமரின் அடுத்த கவலை. . "100% steel 0% gas" என்ற நியூ இந்தியன் எஸ்பிரஸ் விளம்பரத்தை பார்த்திருந்தால் அவர் கவலை பட்டிருக்க மாட்டார். பிரதமர் செய்ய வேண்டியது இது தான், எல்லா நியூ இந்தியன் எஸ்பிரஸ் பேப்பரையும் எடுத்துக்கொண்டு பழைய பேப்பர் கடையில் எடைக்கு எடை போட்டிருந்தா 100% ஸ்டீல் கிடைத்திருக்கும். கூடவே பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் எழுதிய கடிதங்களையும் பழைய பேப்பர் கடையில் போட்டால் நிறைய பணம் வரும்.

அந்த விளம்பரம் பார்க்க தவறியவர்களுக்காக:


ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக ஐபிஎல் போட்டிகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் சந்தோஷம், ஹர்பஜன் சிங் வருத்த பட வேண்டாம், அவருக்கு இருக்கவே இருக்கு WWF. அதில் அவருக்கு நல்ல எதிர் காலம் இருக்கும் என்று நம்புகிறேன்.

காலையில் வாக்கிங் சென்றால் உடம்புக்கு நல்லது. வாக்கிங் போக முடியாதவர்கள் ? சென்னை மின்சார ரெயிலில் போகவேண்டியது தான். நான் சொல்லுவது புரியலையா ?

சென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் எந்தவித காரணமின்றி 20 நிமிடம் மின்சார ரெயில்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சென்டிரல் ரெயில் நிலையம் வரை பயணிகள் நடந்து செல்லும் நிலை தினமும் ஏற்படுகிறது. கூடிய சீக்கிரம் இந்த ஸ்டேஷனுக்கு 'பிரச்சனை பிரிட்ஜ்' என்று பெயர் மாற்றம் நடக்க போகுதாம்.

கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி.பி பாடிய "மண்ணில் இந்த..." மூச்சு விடாத பாடல் பிரசித்தம். அதே போல சிவமயம் என்ற படத்தில் "ஷேத்ரம்.." என்ற பாடலை மூச்சுவிடாமல் பாடியுள்ளாராம். பக்தி சீசன் காலை தூக்கத்தை கெடுக்க இன்னொரு பாடல் ரெடி.

தசாவதாரம் சிடி ரிலீஸ் விழாவை கலைஞர் டிவியில்(ஆர்காடு வீராஸ்வாமி தயவில்) நேற்று பாக்க முடிந்தது. நடுநடுவே நீண்ட விளம்பர இடைவேளையின் போது சன் டிவி தயவில் 'தமிரு' படம் வேற. சண்டேனா இரண்டு!

விழாவிற்கு ஏன் ரஜினி வரலை என்பது தான் புரியாத புதிர். ரஜினி குடும்ப மக்கள் கூட யாரும் வரலை. என்ன காரணம் ? பல காரணங்கள் சொல்லப்படுகிறது ஆனால் எனக்கு தெரிந்த காரணம் கமல் ஹீரோவாக நடிக்கிற படம் இது. இதில் ரஜினி கலந்து கொண்டால் மொத்த அட்ராக்ஷனும் அவர்மேல்தான் இருக்கும். அவர் லேசாக தலையை திருப்பினாலோ, அல்லது தலையை கோதினாலோ, அதையே பெரிதாக விசிலடித்து கொண்டாடுவார்கள் ரசிகர்கள். மேடையில் இருக்கும் ஜாக்கிசானுக்கு இவர்கள் ஏன் இந்த வயசான மனிதரை பார்த்து கொண்டாடுகிறார்கள்? என்றெல்லாம் விளக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற தர்ம சங்கடங்களை தவிர்க்கலாமே என்பதால்தான் ரஜினி இந்த விழாவை புறக்கணித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

மதுரை ரஜினி ரசிகர்கள் நேற்று என்ன செய்தாகள் தெரியுமா ? ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று நூற்றுக்கணக்கான ஆண்களும், ஐம்பது பெண்களும், 11 ஆடுகளும் எல்லா தெருக்களிலும் ஊர்வலமாக சென்று, கடைசியில் ஆடுகளை பலி கொடுத்திருக்கிறார்கள். எல்லோர் கைகளிலும் "தமிழ் நாட்டின் இருளை அகற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்" என்று கையில் தட்டி வேற.

பதினொரு ஆடுகளும் இறப்பதுக்கு முன் என்ன நினைத்திருக்கும் ? "ரஜினி ரசிகர்கள் சரியான ஆட்டு மந்தை" என்று நினைத்திருக்கும்.

பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் பக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பிரியாணியாகியது. தமிழ்நாட்டு மக்களுக்கு இருள் நீங்குமா என்று தெரியலை ஆனால் பிரியாணி கிடைப்பது நிச்சயம்.

நேற்று நடத்துவதாக இருந்த தனது நெருப்பு சாகச மேஜிக் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் ரத்து செய்து விட்டார். தனது தாயார், ரசிகர்கள், மலையாள நடிகர் சங்கம் ஆகியோர் இந்த மேஜிக் நிகழ்ச்சிக்கு ஆட்சேபனை தெரிவித்ததாலும், விபரீதம் வேண்டாம் என கேட்டுக் கொண்டதாலும் இந்த நிகழ்ச்சியை தான் செய்யப் போவதில்லை என்று மோகன்லால் தெரிவித்தார். நீதி: செய்தாலும் விளம்பரம், செய்யாவிட்டாலும் விளம்பரம் சினிமா நடிகர்களுக்கு

இன்று வந்த டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் சென்னையில் தான் அதிக முதியோர் இல்லங்கள் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

"உங்களுடைய பெற்றோரை அவர்கள் உயிரோடு இருக்கும்போதே வணங்கி விடுங்கள். இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்கு சென்று வணங்குவதை விட இது சிறந்தது.'' இது ஜாக்கிசான் சொன்னது ( நன்றி கலைஞர் பேச்சு )

சன் டிவியில் திருவிளையாடல் மெகா சீரியல் வருவது தெரிந்திருக்கும். முதல் 15 எடிசோடுக்கு செலவு 1 கோடி ரூபாயாம். சினிமாவில் பார்த்தது சிவனில் சில லீலைகள் தான், ஆனால் சீரியலில் 64 லீலைகள் இருக்காம். ஆக இது மெகா சீரியல் இல்லை மாகா மெகா சீரியல்.

"இன்னும் சன் டிவி அண்ணா அறிவாலயத்தில் தான் இருக்கிறதா? என்று மெயில் அனுப்பி கேட்ட நண்பருக்கு பதில் - ஆமாம். இதில் என்ன சந்தேகம் ? சன் டிவி ஆபீஸ் ஆழ்வார் பேட்டைக்கு மாறி இரண்டு மாதம் ஆகிறது.

4 Comments:

Hariharan # 03985177737685368452 said...

//வைகோ அதிமுகவில் இணைந்தால், அடுத்த நாளே நாங்கள் திமுகவில் இணைவோம். வைகோ திமுகவில் இணைந்தால் அதை வரவேற்று நாங்களும் அவருடன் சேர்ந்து திமுகவில் இணைவோம் - எல். கணேசன். //

முனீஸ்,

எல்.கணேசன் என்னமா தன் கொள்கையை பாடிகாட் செய்யறார்னு தெரிஞ்சு புல்லரிச்சு சாம்பலை தேய்ச்சுண்டிருக்கேன்.

அப்புறம் முனீஸ், நீங்க உங்க பாடிகாட் அருள் சர்வீஸை டூவீலர், ஆட்டோ, கார், பஸ்ஸுன்னு இருந்தா மட்டும்தான் தருவீங்களா இல்லை என்னைமாதிரி பாதசாரிக்கும் பாடிகாட் பண்ணுவீங்களா??

நான் உங்களை பல்லவன்சாலையில் நேரடியா மீட் பண்ணி பலவருஷம் ஆச்சேன்னு பதில் சொல்லாம விட்டுடாதீங்க முனீஸ் ப்ளீஸ்!

We The People said...

//ஆனால் பகுத்தறிவு இருந்தால் அமைச்சரவை விரிவாக்கம் பிரதமர் முடிவு செய்ய வேண்டியது சோனியா இல்லை என்று தெரியும்.//

ஆனாலும் முனீஸ் உங்களுக்கு பகுத்தறிவு இருக்கிற அளவுக்கு அரசியல் அறிவு இல்லை போலயே! இந்தியாவின் உண்மையான பிரதமர் யாருன்னு கேட்ட சின்ன குழந்தைகூட சொல்லுமே "சோனியா"ன்னு! நம்ம பன்னீர்செல்வம் முதல்வரா இருந்தபோது என்ன வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரோ, அதே மாதிரி வேலையை தான் மன்மோகன்சிங் பார்த்துக்கிட்டு இருக்காரு! இது தெரியாம நீங்களும் ஏகமா பேசறேளே!! யாருயா நீர் விவரம் இல்லா இருக்கேள்!

domaru said...

இன்னா தலைவா,
சைக்கிள் கேப்புல சந்துல சிந்து பாஞ்சி எத்தினி மேட்டரு தந்துகின பாத்தியா ? சரி...சரி...
நானும் உன்னான்ட தம்மாந்தூண்டு கத்துக்கறேன்.
அப்பாலிக்கா வரேன்.

Anonymous said...

http://tbcd-tbcd.blogspot.com/2008/04/plagiarism-content-draught-idly-vadai.html