பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 22, 2008

இட்லிவடை பதில்கள் - 22-4-08

இட்லிவடை பதில்கள் 22-4-08

ஜி.சங்கர் கேள்விகள் ( இவர் மட்டும் தான் கேட்கிறார் )

1. நல்லி செட்டியார் + ஏ.நடராஜன் (முன்னாள் சே.. பொதிகையின் முன்னாள் இயக்குனர்) - ஜெ. - சசி : இவர்கள் நட்பை ஒப்பிடுக.

நல்லி செட்டியார் இருக்கும் விழாக்களில் ஏ.நடராஜன் இருப்பார். அதே போல் ஜெயலலிதா செல்லும் விழாக்களில் சசிகலா இருப்பார்.

2. 19ஆம்தேதி மாலை விளக்கேற்றி ஒளியேற்ற வாருங்கள் அம்மா என இட்லிவடை கூப்பிடப்போகிறாரா ?

அம்மா சித்ரா பெளர்ணமியை விசித்ரா பெளர்ணமியாக மாற்றியுள்ளார். தினமும் எங்கள் வீட்டில் சாயந்திரம் 'கரண்ட் கட்' அதனால் தினமும் விளக்கேற்றிக் கொண்டு தான் இருக்கிறோம்.

சித்திரை முதல் தேதி நல்ல நாளாக இருப்பதால், அம்மா எஸ்டேட்டில் புதிதாகக் கட்டியுள்ள கட்டடத்துக்கு கிரகப்பிரவேசம் செய்யப் போகிறார் என்று கேள்விப்பட்டேன். எனக்கு அழைப்பு வரவில்லை, அதனால் நானும் விளக்கேற்ற மற்றவர்களை அழைக்கவில்லை.

3. ராகுல் காந்தி பிரதமரானால் திமுகவுக்கு இதே அமைச்சகங்கள் கிடைக்குமா ? சிந்தியா ஜூனியரை ஐடி மினிஸ்ட்ர் ஆக்கச் சொன்னதே மாறன் தானாமே ? ஜூவி ஸ்பெஷல் ரிபோர்ட் உண்மையா ?

ஜூவில் வரும் டயலாக்ஸ் கூட உண்மை இல்லை.

4. இத்தனை வருஷம் ஹிண்டுவால் ஒரு அரசை தட்டி எழுப்பமுடியாததை டைம்ஸ் முதல் நாள் தண்ணீர் ரிப்போர்டிலேயே அரசை கஸரத் வாங்குகிறதே ? சேமியர்ஸ் ரோடுக்கு ஆட்டோ வராது (கூடிய சீக்கிறம்) என்ன நிச்சயம் ?

நான் டைம்ஸ் நாளிதழில் வரும் படங்களை மட்டும் தான் பார்ப்பேன்( பார்க்க படம்). இந்த மாதிரி நியூஸ் எல்லாம் முதலில் அரசை தட்டி எழுப்பும், பின்பு அரசை தட்டிக் கொடுக்கும். எந்த தண்ணீர் எடுத்தாலும் அதில் பாக்டிரியா இருக்கும். பாக்டீரியா கடவுளை போன்றது, தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும்.

Hyundai நிறுவனம் நூறு கார்களை இலவசமாக போலீஸுக்கு ஏன் வழங்கியது என்று முதல் பக்கம் நியூஸ் போட சொல்லுங்கள் நிஜமாக அவர்களுக்கு மஞ்சா சோறு இருக்கு என்று நம்புகிறேன்.


ஆனால் ஹிண்டு டைம்ஸை பார்த்து பயந்து போய் இருக்கிறது என்பது உண்மை. பெட்டிக்கடையில் ஹிண்டு நுழைவாயில் பாருங்கள் ( பார்க்க படம் ).

5. மருத்துவர் ராமதாஸ் ஏன் மெட்ரோ திட்டத்தை எதிர்க்கிறார் ஆனால் பஸ்கள் அதிகமாக்கவேண்டும் என சொல்கிறார். ? இதில் ஏதாவது உள்குத்து இருக்கா ?

"என் பேர் ராமதாஸ்" என்று அவர் சொன்னாலும் அதில் உள்குத்து இருக்கும்.

6. வைகோ நார்வேயில் எரிக் சோல்ஹேமுடன் என்ன பேசியிருப்பார் ?

'வேலூர் மத்திய சிறையில் பிரியங்கா, நளினி இடையே நடந்த சந்திப்புக்கு நான் தான் மூல காரணம். விரைவில் இலங்கை இனப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும்' என்று டி.ராஜேந்தர் சொல்லியுள்ளார். அதனால் இந்த கேள்வியை அவரிடம் கேளுங்கள். எனக்கு ஸ்ரீ.ஸ்ரீ.ரவிஷங்கரிடம் வைகோ என்ன பேசியிருப்பார் ? என்று தெரிந்துக்கொள்ள ஆவல்.

7. கோடநாடு எஸ்டேட்டில் அம்பேத்கார் படம் இருக்கிறதா ? அதே படம் (அச்சு அசல்) எப்படி சென்னையிலும் இருக்கிறது ? படத்துக்கு பூத்துவிவிட்டு வரும் மத்திய அமைச்சரின் தாயின் முகத்தில் அதென்ன ஒரு புன்முறுவல் ?

கேரள நம்பூரிதிகளை வைத்து ஜெ. யாகம் நடத்தின எஃபெக்ட் ஆக கூட இருக்கலாம் யார் கண்டது.

8. விஜய் டிவி நீயா நானா ஸ்பெஷலில் சாருநிவேதிதாவும் ஞாநியும் சேம்சைட் கோல் போட்டனரே. கவனித்தீரா ?

கவணிக்கவில்லை. ஆனால் ஒன்று கவணித்தேன், நீங்க எல்லா வாரமும் சாரு பற்றி கேட்கறீங்க.

9. ஜெயாடிவி காலைமலரில் வீடா.ராஜகோபாலன் சார் நடத்தும் ஆங்கில வகுப்புகளை (இன்று ஒரு வார்த்தை) பார்ததுண்டா ? இது மாதிரி சொல்லிக் கொடுக்கும் வாத்தியார்கள் இன்னும் உள்ளனரா ? (பள்ளிகளில்)

இருக்கிறார்கள். கருப்பு கலர் போர்டு முன்.

அனானி கேள்விகள்

10. கோடை வெயிலின் கடுமையை எந்த அரசியல்வாதியின் பேச்சின் மூலம் கண்டுக்கொள்ளலாம்?

டிவியில் நடிகைகளிடம் "உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?" என்று கேட்ப்பார்கள். அவர்களும் அசடு வழிந்து எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும் என்று safeஆக பதில் சொல்லுவார்கள். அதே பதில் தான் உங்களுக்கும்.

11. ராகுல் காந்திக்கு எப்போது கல்யாணம்னு இட்லிவடைக்கு தெரியுமா?.கல்யாணம் ஆனா, இல்ல ஆகாவிட்டால், இந்தியாவுக்கு என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் இட்லியைம் வடையும் புட்டு புட்டு சாப்பிடுவதை போல் சொல்லுங்க ?

போன மாசம் ஒரு நிருபர் "உங்களுக்கு எப்ப கல்யாணம்?" என்று கேட்ட கேள்விக்கு ராகுலின் பதில் "அது என் பர்சனல் மேட்டர், உங்களிடம் பர்சனாலாக சொல்கிறேன்" என்பது. நீங்க அந்த நிருபரை பிடியுங்க விடை கிடைக்க வாய்ப்பிருக்கு.

12. ஐ.பி.எல் ஆட்டம் எப்படி ? ஏன் இட்லிவடையில் அதை பற்றிய செய்தி இல்லை ?

இவர்களின் ஆட்டம் தான் எனக்கு பிடித்திருக்கு.

4 Comments:

Hari said...

/*Hyundai நிறுவனம் நூறு கார்களை இலவசமாக போலீஸுக்கு ஏன் வழங்கியது என்று முதல் பக்கம் நியூஸ் போட சொல்லுங்கள் நிஜமாக அவர்களுக்கு மஞ்சா சோறு இருக்கு என்று நம்புகிறேன்.
*/

என்ன காரணம் என்று கூறமுடியுமா?

Anonymous said...

பதில்களுக்கு நன்றி இட்லிவடை. நான் மட்டுமே கேள்வி கேட்கிறேன் என்பது எனக்கும் ஒரு மாதிரியாகத்தான் உள்ளது. என்ன செய்ய. உங்கள் ரசிகர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என தெரியவில்லை. இதோ அடுத்த பதிவுக்குக் கேள்விகள். (ஜி.சங்கர்).

எனது கேள்விகள் பலருக்கும் பிடிக்கலாம் என்றே தேர்ந்தெடுத்து கேட்கிறேன். மற்றவர்களும் கேட்டால் நல்லது.

1. தயிர்வடை தேசிகன் - இட்லிவடை தேசிகன் - பெயர்க் காரணம் உண்டா ?

2. கமல் தனது படம் வெற்றிபெறுவதற்கு பிராமண கதாபாத்திரங்களை உபயோகப்படுத்துகிறார் என எனக்குப் படுகிறது (அவரின் பெரும்பாலான சமீபத்திய (15) ஆண்டுகளின் மாஸ் வெற்றிப் படங்களில் இது தெரியவரும். அசினுக்கு ஐயங்காராத்து பாஷை சொல்லிக்கொடுத்ததும் அவரேதானாமே ?

3. தங்களின் பிரத்யேகத் துறையில் கொடிகட்டிப் பறந்த பலரும் கடைசியில் தமிழ் சினிமாவில் (ஒரு படத்திலாவது) ஐக்கியமாவது புகழுக்காகவா அல்லது பணத்திற்காகவா ? (சுஜாதா, மதன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாலமன் பாப்பையா, ராஜா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி....)

4. தினமலர் அந்துமணியின் நிஜ முகம் தெரியும் புகைப்படம் இட்லிவடையில் வெளியாகுமா ? (தினகரனில் போனவருடம் வந்த பாஸ்போர்ட் படம் அல்ல)

5. நிஜமாகவே படித்து பி.எச்.டி பட்டம் வாங்கியிருக்கும் பத்ரி ஏன் டாக்டர் பட்டத்தை போட்டுக்கொள்வதில்லை ? நாகப்பட்டினம் - ஐஐடி - அமெரிக்கா - கிரிக்கின்ஃபோ - நியு ஹொரைசான் மீடியா - தமிழக இளைஞர்களுக்கு பத்ரி ஒரு முன்னோடியா ? முன்மாதிரியா ? (தாய்நாடு , தாய்மொழி பக்தி மற்றும் சேவை வகையில்)

6. சமீபகால விவேக் காமெடிகளில் சரக்கு தீர்ந்துவிட்டது போல தெரிகிறதே ? கவுண்டரும் செந்திலும், பின்னர் வடிவேலுவும் பிடித்த மாஸ் இடத்தை விவேக்கால் பிடிக்க முடியாதா ?

7. குமுதம் பக்தி (மற்றும் அனைத்து குமுதம் குழும பத்திரிக்கைகளும்) வெளியிடுபவர் (தற்போது) ஒரு கிறித்துவர் போலிருக்கிறதே ? இது எப்படி ?

8. சமீபத்தில் யாருக்கானும் தபால் கார்டில் லெட்டர் எழுதி அனுப்பிய அனுபவம் இட்லிவடைக்கு உண்டா ? இப்போது 50 பைசாவா இல்லை 1 ரூபாயா ?

9. ஹிமேஷ் ரேஷமய்யா ? கமல் ஏன் இளையராஜாவை தசாவதாரத்திற்கு உபயோகப்படுத்தவில்லை ?

10. சமீபத்திய ஹிந்திப் படங்களில் ஒரு 'சீன்' ஆவது வருகிறதே ? தமிழ் படத்திலும் இது மாதிரி வருமா ?

Tharuthalai said...

யாருமே கேள்வி கேட்கலைன்னு வருத்தப்படுற மாதிரி தெரியுது. அதனால இந்த வினாக்கள்.

1. பீரோடு கலந்து அடிக்க உகந்தது - ரம்மா? விஸ்கியா?

2. ரஜினி ராத்திரில அடிக்கிற சரக்கு பேரு என்ன?

3. கமலHஆசன் எப்பத்லேர்ந்து கமல் Hஆசன் ஆனாரு? ஏன்?

4. சென்னை / தமிழக கிரிக்கெட் அணிங்கற பேர்ல அசட்டு அம்பிகள் மட்டுமே கோலோச்சும் மர்மம் என்ன?

5. இட ஒதுக்கீட்டுக்கு எதிரா பேஸுறவாளுக்கு ஆதரவா ஜால்ரா தட்டும் கொட்டை தாங்கிகளுக்கு, முன்பு தமிழகத்தில் அனைத்து துறைஅகளும் இன்றைய சென்னை/தமிழக கிரிக்கெட் அமைப்பு போல இருந்தன என்பது தெரியுமா?


-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

oviyaysh said...

idlyvadyare
when ever,where ever i open idlyvadai page, system become hanging for 30 to 60seconds,why its happening.rectify it soon because of this many days i am not visiting ur site.please check soon.