பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 15, 2008

இட்லி வடை பதில்கள் 15-4-2008

இட்லிவடை பதில்கள் 15-4-2008

ஜீ.சங்கர் கேள்விகள்
1. சன் டிவியின் முத்தான திரைப்படங்கள் - பழைய (1994- 95ல்) போடப்பட்ட 'வாரம்' படங்களே திரும்ப வருகின்றன - சிவாஜியோ, எம்.ஜி.ஆரோ, நகைச்சுவையோ வேறு பழைய நல்ல படங்களே இல்லையா ?

அப்படியா ? நான் கவனிக்கவில்லை. ஏன் (திலகம்) சிவாஜி, (தொப்பி) எம்.ஜி.ஆர் படங்கள் நகைச்சுவையா இல்லையா ? வேறு படங்கள் வேண்டும் என்றால் மோசர் பேர் நிறுவனத்துக்கு போங்கள். அவர்கள் தான் இப்பொழுது எல்லாத் திரைப்படங்களையும் பட்டாசுக் கட்டு போலப் போடுகிறார்கள்.

2. ஹேமா ஆனந்த தீர்த்தன் என்று ஒரு ஈசிசேர் எழுத்தாளர் இருந்தாரே. அவரது கிளுகிளுப்பு கதைகள் படித்ததுண்டா ? அவரின் கடைசிக் கதை படித்ததுண்டா?

படித்ததில்லை. தமிழ் பிளாக் வைத்திருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள், அதை எல்லாம் படிக்க மாட்டார்கள். அவர் மச்சனியும் ஒரு எழுத்தாளர், அவரை பற்றி கேட்டுவிடுவீர்களோ என்று பயந்துவிட்டேன்.

3. ப்ரியா கல்யாணராமன் (க.ராமச்சந்திரன்) = பதலக்கூர் ஸ்ரினிவாசலு ?
= முன்பு குஷ்புவுடன் கோர்ட்டில் ஆஜர் ஆனவர் = இப்ப குமுதம் பக்தி ஆசிரியர்

4. ஜெயமோகன், எஸ். ரா, பா.ரா. சாருநிவேதிதா - யார் பதிவுகள் சுவாரஸ்யம் அதிகம் ?(பா.ரா என சேம் சைட் கோல் போடக்கூடாது).

பிளாக் எழுதுபவர்களைப் பற்றி நான் கருத்து சொல்லுவதில்லை. எழுத்தாளர்களை பற்றி மட்டும் கேளுங்கள், பிளீஸ்!

5. நடிக்கவும் வராது. படமும் ஹிட்டாகாது ஆனால் தொடர்ந்து சரத் படங்கள் வந்துகொண்டிருகின்றனவே யார் இவரை நம்பி படம் எடுக்கிறார்கள் ?

சரத்தை நம்பி indiainteracts.com நடத்தும் திரு முருகனை(IAS) தான் கேட்கணும்.

அனானி கேள்விகள்

இட்லி-வடைக்கு சரியான ஜோடி சாம்பாரா இல்லை சட்னியா ?
எது ஜோடி சேர்ந்தாலும், நீங்கள் இட்லிவடையை பிசைந்து அடிப்பது நிச்சயம்.

நீங்க நல்லவரா கெட்டவரா ?
எப்பொழுதுமே கேள்வி கேட்பவர் கெட்டவர், பதில் சொல்லுபவர் நல்லவர். என்ன நான் சொல்லுவது சரியா ?

கேள்விகள் இருந்தால் பின்னூட்டதில் கேட்கவும்.

8 Comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

பதில்களுக்கு நன்றி. அடுத்த பதிப்புக்கான கேள்விகள்

1. நல்லி செட்டியார் + ஏ.நடராஜன் (முன்னாள் சே.. பொதிகையின் முன்னாள் இயக்குனர்) - ஜெ. - சசி : இவர்கள் நட்பை ஒப்பிடுக.

2. deleted

3. 19ஆம்தேதி மாலை விளக்கேற்றி ஒளியேற்ற வாருங்கள் அம்மா என இட்லிவடை கூப்பிடப்போகிறாரா ?

4. ராகுல் காந்தி பிரதமரானால் திமுகவுக்கு இதே அமைச்சகங்கள் கிடைக்குமா ? சிந்தியா ஜூனியரை ஐடி மினிஸ்ட்ர் ஆக்கச் சொன்னதே மாறன் தானாமே ? ஜூவி ஸ்பெஷல் ரிபோர்ட் உண்மையா ?

5. இத்தனை வருஷம் ஹிண்டுவால் ஒரு அரசை தட்டி எழுப்பமுடியாததை டைம்ஸ் முதல் நாள் தண்ணீர் ரிப்போர்டிலேயே அரசை கஸரத் வாங்குகிறதே ? சேமியர்ஸ் ரோடுக்கு ஆட்டோ வராது (கூடிய சீக்கிறம்) என்ன நிச்சயம் ?

6. சென்னையில் கிடைக்கும் அவ்வளவு தண்ணீர் பாட்டில்களும் (கேன்களும்) நெசமாவே பாக்டீரியா உள்ளவையா ? இட்லிவடை குழுமத்தின் 9 பேர் வீட்டிலும் தண்ணியை காய்ச்சிக் குடிக்கிறார்களா ?
(சரக்கு மாஸ்டர் தான் தெனமும் காவிரித் தண்ணீர் குடிக்கும் ஊரில் இருக்காரே;-)

7. மருத்துவர் ராமதாஸ் ஏன் மெட்ரோ திட்டத்தை எதிர்க்கிறார் ஆனால் பஸ்கள் அதிகமாக்கவேண்டும் என சொல்கிறார். ? இதில் ஏதாவது உள்குத்து இருக்கா ?

8. வைகோ நார்வேயில் எரிக் சோல்ஹேமுடன் என்ன பேசியிருப்பார் ?

9. கோடநாடு எஸ்டேட்டில் அம்பேத்கார் படம் இருக்கிறதா ? அதே படம் (அச்சு அசல்) எப்படி சென்னையிலும் இருக்கிறது ? படத்துக்கு பூத்துவிவிட்டு வரும் மத்திய அமைச்சரின் தாயின் முகத்தில் அதென்ன ஒரு புன்முறுவல் ?

10. விஜய் டிவி நீயா நானா ஸ்பெஷலில் சாருநிவேதிதாவும் ஞாநியும் சேம்சைட் கோல் போட்டனரே. கவனித்தீரா ?

11. ஜெயாடிவி காலைமலரில் வீடா.ராஜகோபாலன் சார் நடத்தும் ஆங்கில வகுப்புகளை (இன்று ஒரு வார்த்தை) பார்ததுண்டா ? இது மாதிரி சொல்லிக் கொடுக்கும் வாத்தியார்கள் இன்னும் உள்ளனரா ? (பள்ளிகளில்)

கேள்விகளைக் கேட்டது: ஜி.சங்கர்.

கேள்வி பதில் பதிவை வாரத்தின் ஒரு நிச்சயிக்கப்பட்ட நாளில் வெளியிடலாமே (செவ்வாய் அல்லது புதன்). ஹேமா ஆனந்த தீர்த்தனின் மச்சினியார் யாரைய்யா ? எனக்குத் தெரிந்தது எழுத்தாளர் சுபா (சுரேஷின்) மச்சினியார் தான் ஒரு பெரும் 'அந்தரங்க' எழுத்தாளர்.

( edited )

Anonymous said...

கோடை வெயிலின் கடுமையை எந்த அரசியல்வாதியின் பேச்சின் மூலம் கண்டுக்கொள்ளலாம்?

Anonymous said...

// இட்லி-வடைக்கு சரியான ஜோடி சாம்பாரா இல்லை சட்னியா ?
// எது ஜோடி சேர்ந்தாலும், நீங்கள் இட்லிவடையை பிசைந்து அடிப்பது நிச்சயம்.

அருமை! அருமை!

Anonymous said...

ராகுல் காந்திக்கு எப்போது கல்யாணம்னு இட்லிவடைக்கு தெரியுமா?.கல்யாணம் ஆனா, இல்ல ஆகாவிட்டால், இந்தியாவுக்கு என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் இட்லியைம் வடையும் புட்டு புட்டு சாப்பிடுவதை போல் சொல்லுங்க ?

IdlyVadai said...

//கேள்வி பதில் பதிவை வாரத்தின் ஒரு நிச்சயிக்கப்பட்ட நாளில் வெளியிடலாமே (செவ்வாய் அல்லது புதன்).//

அது எப்படி முடியும். எனக்கு பதில் தெரிந்தவுடன் தான் நான் போட முடியும்.

பொய்யன் said...

antha 9 per yaar?

Anonymous said...

ஐ.பி.எல் ஆட்டம் எப்படி ? ஏன் இட்லிவடையில் அதை பற்றிய செய்தி இல்லை ?