கலைஞர் டி.வி. மன்னிப்பு கேட்கவேண்டும்! என்ற தலைப்பில் ஞாநி ஓ-பக்கங்கள், குமுதம்.
ஜெயலலிதாவுக்கு அறுபது வயதானதால், பகிரங்க கடவுள் நம்பிக்கையாளரான அவர், தன் தோழி சசிகலாவுடன் திருக்கடையூர் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டார். கோயில் சிவாச்சாரியார் ஜெயலலிதாவிடம் ஒரு மாலையைக் கொடுத்தார். அதை அவர் சசிகலாவுக்குச் சூட்டினார். சிவாச்சாரியார் ஒரு மாலையை சசிகலாவிடம் கொடுத்தார். அவர் அதை ஜெயலலிதாவுக்குச் சூட்டினார். பின்னர் இருவரும் மாலையைக் கழற்றி பக்கத்தில் இருந்த உதவியாளரிடம் கொடுத்தார்கள். இதைப் படம் எடுப்பதோ வீடியோ எடுப்பதோ தடுக்கப்படவில்லை. படங்களும் வீடியோக்களும் வெளியாகியிருக்கின்றன.
கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான கலைஞர் டி.வி. இந்தச் செய்தியை திரும்பத் திரும்பக் காட்டி கொச்சைப்படுத்தியது. அறுபதாம் கல்யாணம் கொண்டாடும் தம்பதிகள் வழக்கமாக கும்பிடும் திருக்கடையூர் கோயிலில் ஜெ.வும் சசியும் ‘மாலை மாற்றிக்‘ கொண்டது சரியா என்ற கேள்வியை கலைஞர் டி.வி. எழுப்பியது. பொது மக்களின் பேட்டிகளை ஒளிபரப்பியது. பெண்ணுக்குப் பெண் மாலை மாற்றினால் என்ன அர்த்தம் என்ற தொனியில் இந்தச் செய்திக் கோவை அமைந்திருந்தது.
மாலை மாற்றினார்கள் என்று கலைஞர் டி.வி.யும் மக்கள் டி.வி.யும் ஹிந்து பத்திரிகையும் சொல்லியிருப்பது தவறு. சசிக்கு ஜெ. மாலை அணிவித்தார். ஜெ.வுக்கு சசி மாலை அணிவித்தார். அவ்வளவுதான். மாலை மாற்றும் சடங்கு என்பது தன் கழுத்தில் இருக்கும் மாலையை எடுத்து மற்றவருக்கு அணிவிப்பதேயாகும். அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஆனால் அப்படி ஒன்று நடந்தது போல கலைஞர் டி.வி. செய்தி ஒளிபரப்புவதும் தி.மு.க. ஆதரவு ஏடுகள் கிசுகிசுப்பதும் எதற்காக? எதையும் உடைத்துப் பேசித்தான் எனக்குப் பழக்கம். ஜெ._சசிகலா இருவரும் ஓரின உறவு உடையவர்கள், லெஸ்பியன்கள் என்று அவதூறு செய்வதுதான் இந்த முயற்சிகளின் நோக்கம். நேரடியாகச் சொன்னால் அவதூறு வழக்கு வரும் என்பதால் மறைமுகமாகச் சொல்லும் முயற்சி செய்யப்படுகிறது. எவ்வளவு அருவருப்பான அரசியல் இது ?
பொது வாழ்க்கையில் கண்ணியம் பற்றி தன் 75_ம் வயதுக்குப் பிறகு அடிக்கடி பேசத்தொடங்கியிருக்கும் கலைஞர், உடனடியாக கலைஞர் டி.வி.யின் செய்தி ஆசிரியரை இந்தச் செய்திக் கோவை ஒளிபரப்பிற்காக ஜெயலலிதா, சசிகலா இருவரிடமும் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும். மேலிடத்து சம்மதம் இல்லாமல் எந்த டி.வி. சேனல் செய்தி ஆசிரியரும் இப்படிப்பட்ட ஒளிபரப்புகளைச் செய்யமாட்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே, மன்னிப்பு கேட்கும் தார்மீகக் கடமை கலைஞருக்கும் ராமதாஸுக்கும் கூட இருக்கிறது.
ஜெயலலிதா, சசிகலா இருவரின் அரசியல், ஆட்சி முறை, அணுகுமுறைகள், மதிப்பீடுகள் இவை எதனுடனும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் என்பதால் அவர்களை ஆணாதிக்கப் பார்வையுடன் பார்க்கும் சூழல்தான் இங்கே இருக்கிறது என்பதை அவர்களுடைய கடுமையான விமர்சகர்கள் கூட ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
தமிழகத்தின் அரசியல் முற்றிலும் ஆண் ஆதிக்கப் பார்வையுடைய அரசியல் என்பதனால்தான், கலைஞர் டி.வி.யின் முறைகேடான செய்தி ஒளிபரப்பு பற்றி மெளனம் நிலவுகிறது. முற்போக்கும் பெண்ணியமும் பேசும் இடதுசாரிகளும் தி.மு.க.வைச் சேர்ந்த பெண்ணியக் கவிஞர்களான கனிமொழியும் தமிழச்சியும் சல்மாவும் மெளனத்தை உடைத்து கருத்துத் தெரிவித்தாக வேண்டும்.
இந்த ஆணாதிக்க அரசியலில் விஜய்காந்த் குடிகாரரா என்று விவாதம் எழுந்தால், ஒரு கட்டத்தில் அவர் வெறுப்பாக ‘ஆமாய்யா. நான் குடிப்பேன். இப்ப என்னங்கறே?’ என்று கூடச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட முடியும். அதை இங்கே ஒரு பெண் செய்ய முடியாது. இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் கூட இங்கே ஒரு பெண் முதலமைச்சராகி, தன்னுடன் பொது நிகழ்ச்சிகளுக்கு தன் கணவரையும் துணைவரையும் அழைத்து வருவது பற்றிக் கனவு கூட காணமுடியாது. அந்தச் சலுகை தொடர்ந்து ஆண்களுக்கு மட்டுமே கோவலன் மரபிலான தமிழ்ச் சமூகத்தில் தரப்படும்.
நாளைக்கு நம் அரசியலில் ஒரு லெஸ்பியன், ஓர் அரவாணி, ஒரு ஹோமோ செக்ஷுவல் பொறுப்புக்கு வரக் கூடாதா? வரும் தகுதி அவர்களுக்குக் கிடையாதா? என்பதுதான் என் கேள்வி. பிரிட்டனில் ஓரின உறவாளர் அமைச்சராக இருக்கிறார். இன்று உலகம் முழுவதும் ஓரின உறவினர், அரவாணிகள் பற்றிய பார்வைகள் மாறிவருகின்றன.
தமிழ்ச் சமூகம் மட்டும் போலியான ஒழுக்கக் கோட்பாடுகளுடன் நடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. அடுத்த தேர்தலின்போது ஒவ்வொரு கட்சியும், செக்ஸ், ஆண் பெண் உறவு, ஒழுக்க விதிகள் பற்றியெல்லாம் தன் கொள்கை என்ன என்பதையும் தன் தேர்தல் அறிக்கையிலே சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, March 04, 2008
கலைஞர் டி.வி. மன்னிப்பு கேட்கவேண்டும்!
Posted by IdlyVadai at 3/04/2008 04:24:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










6 Comments:
ஞானியின் கேள்விகள் நியாயமானவை. தார்மீகமானவை.
தன் காமாந்திர இந்திரசித் பார்வையில் விளையும் அபத்தக்கருத்துக்களை எப்போதும் எதிர்ப்பாளர்கள் மேல் சார்த்தும் தீரா விடக் கலைஞர்களின் கொச்சை அரசியலே இந்த "மாலை மாற்றிய" இட்டுக்கதை.
அதைவிட ஈனமாக, இதற்கு சப்பைகட்டி, இந்த நியாயமான ஞானியின் கேள்வியைக்கூட திரித்துப்பார்க்கும் சில துரதிருஷடப்பார்வை யாளர்களை என்ன சொல்ல?
இந்த வக்கிரப்பார்வையாளர்களின் இணையத்திலும் நடத்தும் ஏசண்ட் தொழில் இத்தனை ஈனமானதா? அந்தோ பரிதாபம்.
நான்தான்
see here too.
ஓ-பக்கங்களை வலைப்பூவில் கண்ணுற இங்கே செல்லலாமே?
//தமிழ்ச் சமூகம் மட்டும் போலியான ஒழுக்கக் கோட்பாடுகளுடன் நடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. அடுத்த தேர்தலின்போது ஒவ்வொரு கட்சியும், செக்ஸ், ஆண் பெண் உறவு, ஒழுக்க விதிகள் பற்றியெல்லாம் தன் கொள்கை என்ன என்பதையும் தன் தேர்தல் அறிக்கையிலே சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..//
sex education பற்றியே இன்னும் தீர்கமான முடிவுக்கு வாராத இவர்கள homo, lesbian பற்றி பேசபோகிறார்கள்?
Idiotic Gnani
Post a Comment