பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 25, 2008

அண்ணாதுரையின் மகன் பரிமளம் தற்கொலை

முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் மகன் பரிமளம் தற்கொலை

முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் மகன் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார். தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் மகன் பரிமளம். இவர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். அவருக்கு வயது 67. அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார். நேற்றிரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது விட்டில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒருமணி நேரத்திற்கு பின்னர் அவரது வீட்டிலிருந்தவர்கள் அவர‌ை கண்டு பிடித்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் அவரது இறப்பை உறுதி செய்தனர்.

3 Comments:

சங்கு மாமா said...

அவர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்..
தான் வாழ்ந்தது போதும்..என்று நினைத்திருப்பார்..பாவம்..அவரது தந்தையார் இன்று பெயரளவில்..மட்டுமே உபயோகப்படுவதை எண்ணி..(?? !!!)

ஹரன்பிரசன்னா said...

சன் டிவி செய்தியில் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார் என்றுதான் சொன்னதாக நினைவு. தற்கொலை என்று எங்கே படித்தீர்கள்?

IdlyVadai said...

ஹரன்பிரசன்னா மாலைமலர், தினமலர், தினமணி, தட்ஸ் தமிழ்...