பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 26, 2008

நான் ஐஸ்வர்யா ராயின் ரசிகன் - பாகிஸ்தானின் புதிய பிரதமர்

தான் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஹிந்தித் திரை உலகின் இசை அரசி லதா மங்கேஷ்கரின் பரம ரசிகன் என்கிறார் பாகிஸ்தானின் புதிய பிரதமர் யூசுப் ரஸô கிலானி.நான் சிறையில் இருந்தபோது லதா மங்கேஷ்கரின் பாடல்களை விரும்பிக் கேட்டதுடன் ஐஸ்வர்யா ராய் நடித்த எல்லாப் படங்களையும் எனது லாப்டாப்பில் பார்த்து விடுவேன் என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

சுஃபி சாதுவின் பரம்பரையைச் சேர்ந்த 55 வயதான கிலானி தேசியப் பேரவையின் தலைவராக இருந்தபோது தனது பதவியைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2001-ல் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டால் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்ற முஷாரபின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல் சிறைத் தண்டனையையே தேர்ந்தெடுத்தவர் கிலானி என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் நிறைந்த பாகிஸ்தான் மக்களுக்கு புதிய பிரதமரின் பாலிவுட் மோகத்தால் ஹிந்தித் திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

1 Comment:

சங்கு மாமா said...

அவரு ஐஸ்வர்யா ராய் ரசிகர்...
நானு ..ஐஸ்வர்யா நாய் ரசிகர்......


-- பாகிஸ்தான் உருப்படுமா ?இப்படி ஒரு பிரதமர் இருந்தா ?