பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 02, 2008

தனித்து போட்டியிட முடியுமா - விஜயகாந்திற்கு டி.ராஜேந்தர் கேள்வி

"தனித்து போட்டியிடுவோம் என்பதில் விஜயகாந்த் நிலையாக இருக்க முடியுமா?'' என்று டி.ராஜேந்தர் சவால் விடுத்துள்ளார்.

லட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் விஜய.டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்....


வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகவும், கட்சியின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மார்ச் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறேன்.

மார்ச் மாதம் 8-ந் தேதி அரக்கோணத்தில் நடைபெறும் கொடிஏற்று விழாவிலும், 9-ந் தேதி திருவண்ணாமலையிலும், 15-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கொடி ஏற்றுவிழாவிலும் கலந்து கொள்கிறேன்.

எங்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் எனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறேன். தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் எனக்கு சிறுசேமிப்பு துணைத்தலைவர் பதவி கொடுத்து இருக்கிறார்கள். இப்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம்.

குரல் கொடுப்பேன்

எல்லா அரசியல் கட்சிகளும் தனித்து போட்டியிட தயாரா? என்று விஜயகாந்த் கேட்கிறார். அது அவரது கருத்து. விஜயகாந்த் என்னை விட அதிக படங்களில் நடித்து உள்ளார். அவருக்கு இருக்கும் வாய்ப்பு வசதிகள், எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஒரு தமிழன். எனக்கு இருக்கும் வாய்ப்பு வசதி இவ்வளவுதான்.

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண்குமார் விமானத்தில் பயணம் செய்த போது விஜயகாந்தும், அவரும் தெலுங்கில் பேசிக்கொண்டு சென்றார்கள் என்று ஒரு வாரபத்திரிகை செய்தி வெளியிட்டது. இரண்டு பேரும் ஒரே மொழியில் பேசக்கூடியவர்கள் எனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசிக்கொண்டு செல்லுங்கள் என்று விமானத்தில் ஏற்றிவிட்டார்கள் என்றும் செய்தி வெளியானது. இதற்கு உரியவர்கள் யாராவது பதில் சொல்லி இருக்கிறார்களா? தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்று நான் குரல் கொடுக்க தயங்கமாட்டேன்.

தனித்து போட்டி

கட்சி ஆரம்பிக்கும் அத்தனைபேரும் அரியணை ஏறிவிட முடியாது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இதற்கு எல்லாம் மாறுபட்டவர். அரசியலில் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது. அரசியலுக்கு வந்தால் அடுத்த நாளே முதல்-அமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது. நான் ஒருநாளும் நாளைய முதல்-அமைச்சர் என்று சொல்லவில்லை.

தனித்து போட்டியிடுவேன், தனித்து போட்டியிடுவேன் என்று பல்லவி பாடிடும் விஜயகாந்த் அதே நிலையில் தொடருவாரா? என்பதை பகிரங்க சவாலாக கேட்கிறேன்.

எம்.ஜி.ஆர். வாரிசு

எம்.ஜி.ஆரின் வாரிசு என்று விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் சொல்லலாம். எம்.ஜி.ஆர். வாரிசு யார் என்று மக்கள்தான் சான்றிதழ் கொடுக்கவேண்டும். எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு யார் என்றால் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட நான் சொல்கிறேன். எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு தமிழ்நாட்டில் அ.தி.மு.க. இருக்காது என்று சொன்னார்கள். இவற்றை எல்லாம் மீறி இன்றைக்கும் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் கொள்கையை தாங்கி, தூக்கி நிறுத்தி இருப்பவர் ஜெயலலிதாதான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. எம்.ஜி.ஆரின் புகழை இடையில் பாடாமல் இருந்தால் அது அவரது தவறு. அது ஒரு குற்றமாக கூட நான் கருதுகிறேன்.

ஆனால் அதையும் மீறி, அ.தி.மு.க. என்ற இயக்கத்தை ஜெயலலிதா நடத்துகிறார். அவர் பேசிய கருத்தில் உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பது வேறு. அது மாறுபட்ட கருத்தாக இருக்கலாம். ஜெயலலிதா போராட்ட குணம் மிக்கவர்.

ஜெயலலிதா பற்றி கருத்துசொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. எம்.ஜி.ஆரின் வாரிசு ஜெயலலிதா இல்லை என்று யாரால் சொல்லமுடியும். இந்த கருத்தை சொல்லுவதில் எந்த தவறும் கிடையாது.

சீட்டுவேண்டும்

பாராளுமன்ற தேர்தலில் எங்களை தள்ளிவிட்டு யாராலும் கோலம்போட முடியாது. தி.மு.க. கூட்டணியில் இருந்து கலைஞர் என்னை விலக்கியதாக சொல்லவில்லையே? பின்பு எப்படி அ.தி.மு.க.வில் சேருவேன் என்று சொல்லமுடியும்.

பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு சீட்டு வேண்டும். சீட்டு கலைஞர் கொடுப்பார். சீட்டு இல்லாமல் உங்கள் ஓட்டு என்று கேட்கும் இடத்தில் லட்சிய தி.மு.க. இல்லை. எனது கட்சிக்கு சீட்டு வாங்கும் முயற்சியில் நான் இறங்கி இருக்கிறேன்.

6 Comments:

Hariharan # 03985177737685368452 said...

இதைத் தனது தனித்த திறமையால் இதுவரை 99 தடவை அரசியல் கூட்டணின்னு உள்ளே/வெளியே விளையாடியும்,

வெட்டியான சவடால் அடுக்குமொழி பேசியும், ஒட்டுமொத்த தமிழகத்தின் ஏகோபித்த ஆதரவைப்பெற்று பிரதமர் வேட்பாளராகியிருக்கும்
திரு.விஜய.ராஜேந்தர் சொன்னா ரகளையாவும் ஒரே சிரிப்பாதான் இருக்கு :-))

Raja said...

//பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு சீட்டு வேண்டும். சீட்டு கலைஞர் கொடுப்பார்.//

Please label this post under "Nagaichuvai".

சங்கு மாமா said...

இவரு பேச்சை எல்லாம்..உங்க ப்ளோக் ல போட்டு என் எடத்த வேஸ்ட் பண்ணுறீங்க ?? டி ஆர் பேசுறது எல்லாமே பெஸ்ட் ஜோக் மாதிரி தான்..வானத்த பாத்து எச்சி துப்புறமாதிரி..
மேலும் டி ஆர் பேசுறத தெரு நாய் கூட நின்னு மதிச்சி கேக்காது..அப்புறம் நாம ஏன் ? நான் கேட்டேன் ங்கறதுக்காக இப்பிடி ஒரு நியூஸ் போடுறதா... கேப்டனுக்கே அவமானம்...மொதல்ல டி ஆர அவரோட தாடிய ஷேவ் செய்ய சொல்லுங்க..அப்பால யோசிப்போம் அவருக்கு எம்.பி சீட் கொடுக்குரத பத்தி...

Sunny said...

Vijaya T. Rajendar is really crazy comedian.

ஜயராமன் said...

இன்றைய சூழலில் கருணாநிதி கூட தனித்து நின்றால் ஆட்சி அமைக்க முடியாது.

அதனால் இந்த வாய்சவடால் டி.ஆர் அவர்களுக்கு ஆகாது!

நன்றி

ஜயராமன்

சங்கு மாமா said...

UPDATE:

நம்மை தேடி யார் வந்தாலும் கூட்டணி-டி.ராஜேந்தர்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்காக, விஜயகாந்தை மேலிட பார்வையாளர் அருண்குமாருடன் தெலுங்கில் பேச வைக்கிறார்கள் காங்கிரஸ்காரகள் என ல.தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் `லட்சியமே கீதம்' என்ற தலைப்பில் 9 கொள்கை விளக்க பாடல்களை விஜய டி.ராஜேந்தர் தயாரித்துள்ளார்.

அவரே எழுதி, இசையமைத்து, பாடிய இந்த பாடல்கள் அடங்கிய சிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

மதுரை ஆதீனம் இந்த சிடியை வெளியிட்ட பின் ராஜேந்தர் பேசியதாவது:

கட்சி ஆரம்பித்தவுடனே முதலமைச்சர் ஆகி விட சிலர் கனவு காண்கின்றனர்.

வீட்டில் ஒரு மொழியும், வெளியே வந்ததும் ஒரு மொழியும் பேசுபவர்கள் (விஜய்காந்த்) எல்லாம் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகி விடலாம் என்று நினைக்கின்றனர்.

ஒரு தமிழ்நாட்டிற்கு எத்தனை முதலமைச்சர்கள் தான் வர முடியும்?.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்காக, விஜயகாந்தை மேலிட பார்வையாளர் அருண்குமாருடன் தெலுங்கில் பேச வைக்கிறார்கள் (காங்கிரஸ்காரகள்).

நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டவர்கள், ஆம்லேட் போட்டவர்கள் எல்லாம் நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். தமிழ் இன உணர்வு உள்ளவர்களை நான் ஒருங்கிணைப்பேன். எனக்கு எல்லா மொழியும் தெரியும். மற்ற மொழிகளை நான் மதிக்கிறேன். தமிழ் மொழியை துதிப்பேன்.

இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு உதவி செய்கிறது. இதை பார்த்துக்கொண்டு தமிழர்கள் சும்மா இருக்க முடியுமா?. இலங்கையில் இறப்பது தமிழர்கள். இதற்காக நாம் அழக்கூட கூடாதா?.

சிறுசேமிப்புத்துறையின் துணை தலைவராக நான் இருந்தாலும், இலங்கை தமிழர்களுக்காக நான் குரல் கொடுக்க பயப்பட மாட்டேன். இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

தமிழ் மக்களுக்காக பல தொல்லைகளை சந்தித்து இருக்கிறேன்.

முன்பு நான் கலைஞரை தலைவராக ஏற்றிருந்தேன். இன்று முதல் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் தலைவராக புறப்படுகிறேன்.

மதுரையில் லட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்று திரட்டி மாநாடு நடத்த இருக்கிறேன். இனி 80 சதவீதம் அரசியலில் ஈடுபட போகிறேன். 20 சதவீதம் தான் சினிமாவில் நடிப்பேன்.

நமது கட்சி மிகப்பெரிய சக்திமிக்க கட்சியாகும். நம்மை யார் கூட்டணி சேர்க்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும்.

அவருடன் கூட்டணி சேர போகிறோம், இவருடன் கூட்டணி சேர போகிறோம் என்ற பேச்சுக்கு இடமில்லை. நம்முடன் யார் வருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றார் டி.ராஜேந்தர்.


இது எப்டி இருக்கு....


JOKE OF THE YEAR !!!!