பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 12, 2008

200 நடிகர்கள், நடிகைகள் அமெரிக்கா செல்ல தடை

தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் டைரக்டர்கள் 200 பேருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு செல்லும் நடிகர், நடிகைகள், டைரக்டர்களுடன் சிலர் போலி ஆவணங்கள் மூலமாக அங்கு சென்று தங்கிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக சென்ற நபர்கள், நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் அல்லது விசா ஏஜெண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்து செலுத்தி முறைகேடாக அமெரிக்கா சென்றிருப்பதை, அமெரிக்க துணைத் தூதரகத்தின் மோசடி தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளார்கள்.

அமெரிக்காவுக்கு செல்லும் திரையுலக பிரமுகர்களுக்கு எடுபிடியாகச் செல்வது போல் ஆவணங்களில் குறிப்பிட்டு, விசா பெற்று அவர்கள் சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

இவ்வாறாக அமெரிக்கா சென்ற ஏராளமானோர் அங்கேயே தங்கிவிட்டனர். அவர்களது அடையாளம் பற்றிய விவரங்கள் அமெரிக்க அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்க சட்டவிதிகளுக்குட்பட்டு அவர்களது அடையாளம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

200 பேருக்கு ஆயுள்தடை

இவ்வாறாக, தங்களுடன் போலி ஆவணங்கள் மூலமாக சிலரை அமெரிக்காவுக்கு தங்களுடன் அழைத்துச் சென்ற, தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் டைரக்டர்கள் 200 பேர் இனி அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத வகையில் அவர்களுக்கு ஆயுள்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசா பெறுவதற்காக போலியான வழிமுறைகளை கடைபிடிப்போர் மீது அமெரிக்கா அல்லது இந்தியாவில் குற்றவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது பற்றி தூதரக அதிகாரி டேவிட் ஹோப்பர் கூறுகையில், ``இந்த நடவடிக்கை இந்திய திரைப்படவுலகினருக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது. இந்திய திரையுலகுக்கு உலகம் முழுவதிலும் கிடைத்திருக்கும் புகழும், அங்கீகாரமும் அனைவரும் அறிந்ததே. மேலும், இந்திய திரையுலகினருக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு திரையுலகினருடன் அதிகரித்திருக்கும் தொடர்புகளையும் அங்கீகரிக்கிறோம். எனினும், இந்திய திரையுலகைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு உள்ள புகழினை சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தியிருப்பது துரதிருஷ்டவசமானது'

அடுத்த கண்டன கூட்டம் இதுக்கா ?

11 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

என்ன இட்லிவடை சிறுபிள்ளைத்தனமா ஒரு கேள்வி?

இந்த அறிவிப்புக்கு என்ன ஜெயமோகன், லூஸ் மோகன் மாதிரி ஒரு பெரும் மக்கள் தலைவரோட சப்போர்ட்டா இருக்கு? இல்லை பிரபலமான எதாவது நடிகருக்கு இதால இழுக்கா?

இதுக்கெல்லாமா கண்டனக்கூட்டம் போடுவாங்க.. இது ஜுஜுபி மேட்டர்.

Anonymous said...

இட்லி வடை அமெரிக்காவில் ஃபெட்னா என்று ஒரு ஃப்ராடு கம்பெனி இருக்கு அது மூலமாத்தான் ஏகப் பட்ட சினீமாக்காரனுங்க வந்தானுங்க. அமெரிக்கா கூட்டுப் போறதுக்கு ஒரே கண்டிஷன் புலி புகழ் பாடணும் பிராபகரனுக்கு ஜே போடணும். போட மறுத்தால் அவமானப் படுத்தி அனுப்பி வைக்கப் படுவார்கள். அதுல முக்க்கியமான ஃபெட்னா புள்ளி அமெரிக்கா ஜெயில்ல இருக்கான். தமிழ் நாட்டு சினிமாக் காரங்களுக்குத் தட போடறதுக்கு முன்னால் இந்த ஃபெட்னா காரனுங்களுக்குத் தடை போடணும். சுனாமின்னு சொல்லி காசு வசூல் பண்ணி புலிகளுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்துருக்கானுங்க இந்த ஃபெட்னா என்னும் தீவீரவாதிக் கும்பல். திண்டுக்கல் லியோனின்னு ஒருத்தன் இருக்கான் அவனுக்கு ஜோலியே இது மாதிரி காசு வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்கு ஆள் கடத்திக் கொண்டு வருவதுதான். அடுத்து ஃபெட்னா சீமானை இந்த வருட விருந்தாளியா அழைத்திருக்கிறது. அவனுக்கும் விசா கட்டா இல்லையான்னு தெரியலை முதல்ல அமெரிக்க கவுன்சல் கிட்ட சொல்லி புலி ஏஜெண்டான சீமானுக்கும் கோமாளி தங்கருக்கும் தடா போடச் சொல்லுங்க

வால்பையன் said...

அப்ப இனிமே அமெரிக்காவில பாட்டு எடுக்க மாட்டாங்களா !!
என்ன கொடுமை சார் இது! இனிமே அமெரிக்காவ நான் எப்படி பாக்குறது!

வால்பையன்

Anonymous said...

நேத்தைக்கு விஜய்ரிவியில் ராத்திரி 10மணிக்கு ஜில்லுனு ஒரு ஜோடி நிகழ்ச்சியில் சாரு நிவேதிதாவும் அவர் மனைவி அவந்திகாவும் வந்திருந்தாங்களே பாத்தீங்களா ?

சாரு (அவரது இயற்பெயர் அறிவழகனாம்) மிகவும் அமைதியாக பதிலளித்தது ஆச்சரியம். அதைவிட அவர் மனவி சொன்னது இன்னும் ஆச்சரியம். மறுஒளிபரப்பு ஆனால் நிச்சயம் பார்க்கவும்.

IdlyVadai said...

//சாரு நிவேதிதாவும் அவர் மனைவி அவந்திகாவும் வந்திருந்தாங்களே பாத்தீங்களா ?
//

இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.

Indian Voter said...

சகிப்புத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருவதையே இது காட்டுகிறது. வேறென்ன சொல்ல?

Anonymous said...

Read more..... implicates perhaps Vivek and Shankar

http://thatstamil.oneindia.in/movies/news/2008/03/13-popular-comedian-and-director-in-us-visa-frauds.html

சங்கு மாமா said...

லேட்டஸ்ட் நியூஸ் தெரியுமா ?? ஒரு முக்கியமான "அப்பா" வேஷத்தில நடிக்குற நடிகர் தான் இதுக்கு எஜெண்ட்டாம்...!! அது என்ன "கலைக்குடும்பதிலிருந்தா?" கண்டு பிடிங்க...

அமெரிக்க தூதரக அதிகாரிங்க..கமிஷனர் நாஞ்சில் குமரன் கிட்ட Full லிஸ்ட் குடுத்த தா தகவல்...

லூஸ் மோகன் said...

Update :

http://www.dailythanthi.com/article.asp?NewsID=399765&disdate=3/14/2008

Keyven said...

முக்கிய நடிகர், நடிகைகள் பத்து பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அமெரிக்க துணைத் தூதரகம், சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கியுள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் நபராக முக்கிய சிரிப்பு நடிகரின் பெயர் இடம் பெற்றுள்ளதாம். படங்களில் தத்துவத்தையும், உபதேசத்தையும் அதிகம் போதிப்பவர் இந்த நடிகர். மூடப் பழக்க வழக்கங்களையும், முட்டாள்தனங்களையும் சரமாரியாக விளாசுவது இவரது வழக்கம். ஆனால் இவரே வாஸ்து பார்த்துதான் புது வீடு கட்டியதாக கூறுவார்கள்.

ஆனால் அவரே இப்போது ஆள் கடத்தல் மோசடியில் சிக்கியுள்ளாராம். இவர் சமீபத்தில் பலருடன் அமெரிக்கா சென்றார். அவர் கூட சென்ற யாருமே திரும்ப வரவில்லையாம். எனவே அத்தனை பேரிடமும் பணம் வாங்கிக் கொண்டு இவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இந்த நடிகர் பலமுறை அமெரிக்கா போயுள்ளாராம். போகும்போதெல்லாம் கூடவே சிலர் அவருடன் செல்வார்களாம். எனவே இந்த நடிகரை மிகப் பெரிய அளவில் விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம், காவல்துறை ஆணையரை வலியுறுத்தியுள்ளதாம்.

பிரமாண்ட இயக்குநரும்!

இதேபோல முக்கிய இயக்குநர் ஒருவரும் இந்தப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர் ஒரு பிரமாண்ட இயக்குநர். பிரமாண்டமான பட்ஜெட்டில்தான் படமே எடுப்பார்.

இவர் மீதும் ஆள் கடத்தல் சர்ச்சை எழுந்துள்ளது. லேட்டஸ்டாக இவர் கொடுத்த ஹிட் படத்தின் ஷூட்டிங்குக்காக அடிக்கடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது கூடவே சிலரும் சென்றனராம். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லையாம். இவர் குறித்தும் விசாரிக்குமாறு அமெரிக்க தூதரகம் காவல்துறையை கேட்டுக் கொள்ளும் என்று தெரிகிறது.

அமெரிக்க துணைத் தூதரகம் கொடுத்துள்ள பட்டியலில் உள்ள நடிகர், நடிகைகள் குறித்த புகார்களை முதலில் ரகசியமாக விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதில் உண்மை இருந்தால் நேரடியாக அழைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Anonymous said...

விவேக்குன்னுப் பேர மட்டும்தான் போடலை. ஒரு ஆளுக்கு தலைக்கு பத்து லட்சம் வாங்கிக்கிட்டு 10 பேரைக் கூட்டிப் போய் விட்டு விட்டு வந்தால் ஈசியாக டாக்ஸ் இல்லாம 1 கோடி. எவ்வளவுதான் காசு வந்தாலும் "கள்ள" புத்தி போகலையே