பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 30, 2008

விடுதலைப் புலிகள், காங்கிரஸ், திருமா - மாட்டிக்கொண்டு முழிக்கும் கலைஞர்

விடுதலைப் புலிகள் பிரச்சனையில் கலைஞர் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்பது என் எண்ணம். இது தான் எங்கள் நிலை என்று அவரால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும்...

நேற்று:
கலைஞர் பேச்சு:(சட்டசபை)
திருமாவளவனாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் புலிகளை ஆதரித்து பேசுவதை சட்ட ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும். இதில் வேறு வழியில்லை. பொடா சட்டம் சரியாக பயன் படுத்தப்பட்டதா? இல்லையா? என்ற பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதற்காக ஞானசேகரன் எடுத்துக் காட்டியிருப்பதற்கு ஏற்ப புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேச நான் ஆதரவு தருவதாக கருதக்கூடாது. அரசு நடத்தும் எங்களுக்கு தர்ம சங்கடங்கள் இருப்பதை சொல்ல வேண்டிய நிலையில்நான் இருக்கிறேன்.


இன்று:
தமிழக அரசு அறிக்கை:
தடை செய்யப்பட்டுள்ள எந்த இயக்கமாயினும் அவற்றுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதோ, செயல்படுவதோ, துண்டு அறிக்கைகள், சுவரொட்டிகள் வெளியிடுவதோ, ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதோ, அவற்றில் கலந்து கொள்வதோ சட்டப்படி குற்றமுடையதாகும். கவிதை எழுதிவிட்டு இந்த மாதிரி பேசுவது சுத்த மடத்தனம். அப்ப பொடா சட்டத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 'தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது' என்ற வாதம் என்ன ஆகும் ? நேற்று இதை சொல்லிவிட்டு இன்று அப்படி பேசினால் குற்றம் என்றால் இதற்கும் பொடாவிற்கு என்ன வித்தியாசம் ?

அத்தகைய குற்றமிழைப்போர் தனிப்பட்டவராயினும், சங்கம் அல்லது அமைப்பு ரீதியில் இயங்கு வோராயினும் அவர்கள் அரசின் இந்த மேற்கண்ட நடவடிக்கைகள் ஏதேனும் ஒன்றில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மேல் குறிப்பிட்ட சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப் படுவார்கள்.

திருமா பேச்சு:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல் படுவதாக எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அ.தி.மு.க.வும், காங்கிரசும் வெளிநடப்பு செய்தன. இந்த பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் தெளிவான விளக்கம் அளித்தார். விடுதலைப்புலிகள் பற்றி பேசுவது எங்கள் கருத்துரிமை. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். வெகுஜனஇயக்கமாக அங் கீகரிக்க வேண்டும் என்பதே எங்களது கருத்துரிமை யாகும். இதற்கு சட்டம் தண்டிக்குமானால் இதை எதிர்கொள்ள நாங்கள் தயா ராக இருக்கிறோம்.

இந்த நிலமை நாளைக்கு வைகோவால் ஜெக்கு வரலாம்

4 Comments:

Arasiyal Aarvalan said...

Ju Vi la Thiruma interview padingaa... Kalaignar is gonna have lots of fun. :))

பெர்த் வெங்கி said...

அட்ரா சக்கை...அட்ரா சக்கை...

தெருமா வளவனை அரசியல்ல பெரிய வி.ஐ.பி ஆக்க இது ஒரு சூப்பர் ஐடியா .....

இப்படியே அவரும் விடுதலை புலிகளுக்கு ஆதரவு ன்னு சொல்லி மொக்கை போட்டே, பொழப்பு ஒட்டிடுவாரு.. கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கிறதுல தெருமா வளவன் செம கெட்டியான ஆளு...நடக்கட்டும்...நடக்கட்டும்...

Anonymous said...

அருந்ததியர்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுப்பதை எதிர்க்கும் திருமாவளவன் வேளாள பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளை ஆதரிப்பது பச்சை அயோக்கியத்தனம்.

ஹாரி said...

திருமா,

//விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். வெகுஜனஇயக்கமாக அங் கீகரிக்க வேண்டும்

விடுதலைப்புலிகள் முதலில் வெகுஜன இயக்கமாக ஆகட்டும் அப்புறம் அங்கீகரிப்போம்.

அதை விடுங்க, உங்க படம் எப்ப ரிலீஸ்? அடுத்து எத்தனை படத்துல கமிட் ஆயிருக்கீங்க? அதை சொல்லுங்க..