பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 07, 2008

குஷ்பு திருமாவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு!

நேற்று கீழ்ப்பாக்கம் Citadel ஹாலில் "ஆழி" பதிப்பகத்தாரின் 8 புத்தகங்களின் வெளியீட்டு விழா. விழாவில் குஷ்பு திருமாவை எள்ளி நகையாடியதால் பெரும் கொந்தளிப்பு.


மேடை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் அறிவுமதி, குஷ்பு என்று முக்கிய பிரமுகர்களால் களைகட்டி இருந்தது.
( நிகழ்ச்சி பற்றிய அழைப்பிதழ் பார்க்கவிரும்புகிறவர்கள் இங்கே போங்க )

விழாவிற்கு வந்திருந்த திருமா மேடையேறும்போது குஷ்பு 'கண்டுகொள்ள'வில்லை என்பதை மொத்தக் கூட்டமும் கண்டுகொண்டது. ஆனால் தமிழர் பண்பாட்டுக்கு மாறிவிட்ட குஷ்பு அப்படி எல்லாம் விட்டுவிடவில்லை. தான் மைக்கில் பேசும்போது, திருமா மேடைக்கு வரும்போது அவரை 'கவனிக்காததால்'தான், தான் வணக்கம் சொல்லவில்லை என்றும் அதற்குப் பதில் இப்போது 'ஸ்பெஷல்' வணக்கம் சொல்வதாகவும் சொன்னார். தொடர்ந்து நக்கலாக, "யாருக்குத் தெரியும், உங்களுக்கு வணக்கம் சொல்லவில்லை என்றுகூட என்மேல் வழக்குத் தொடர்ந்தாலும் தொடர்வீர்கள்..... ஆனால் ஏற்கனவே எனக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுமாதிரி வேறுவேறு கோர்ட்களில் நிலுவையில் இருக்கின்றன... அதனால் இவற்றையெல்லாம் சந்திக்கப் போதுமான அனுபவமும் தைரியமும் இப்போது எனக்கு இருக்கிறது.." என்றும் சொன்னார்.
( தேர்தலில் குஷ்பு நின்றால் முதல் ஓட்டு என்னுடையது )

இதனால் பொங்கிப் போன கவிஞர் அறிவுமதி, இடையில் மைக்கை வாங்கி, ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட தலித் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் ஒரு தன்னிகரில்லாத் தலைவரை கிண்டல் செய்த அவர் பேச்சை வன்மையாகக் கண்டித்தார்.
( புதுமை பெண் கேள்விப்பட்டிருக்கேன், இவர் புதுமை ஆண் )

எதிர்த்து குஷ்பு ஒரு பொதுமேடை விவாதத்திற்கே சவால் விடுத்து, தயாரானார். (அட அட ) வந்திருந்த கூட்டத்திலிருந்து ஒரு பகுதியினர் குஷ்புவை எதிர்த்து ஆக்ரோஷமாக கோபத்துடன் கத்திக்கொண்டே மேடையேற காவல்துறை உள்ளே நுழைந்தது. வெளிநடப்பு செய்யவிருந்த குஷ்புவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் தடுத்து நிறுத்தி, பொதுமக்களையும் அமைதிப்படுத்தினர்.

செ. ச. செந்தில் நாதன் - பதிவு

இந்த விஷயத்தை பற்றி 'செ. ச. செந்தில் நாதன் - அறம் பொருள் இன்பம்' பதிவில் எழுதியது...

திருமா வெளியிட குஷ்பு பெற்றுக்கொண்ட படம்

தினத்தந்தி செய்தி:

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
புத்தக வெளியீட்டு விழா
சென்னை கீழ்ப்பாக்கத்தில் டான்பாஸ்கோ அரங்கில் செந்தில்நாதன் எழுதிய ÔஆயிÕ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகை குஷ்பு, பாடலாசிரியர் அறிவுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே நடிகை குஷ்பு அரங்குக்கு வந்திருந்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் தொண்டர்கள் புடைசூழ திருமாவளவன் அரங்குக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த அனைவரும் எழுந்து, திருமாவளவனுக்கு வணக்கம் செலுத்தினர். Ôதிருமாவளவன் வாழ்கÕ என்று கோஷங்கள் எழுப்பினர்.
சலசலப்பு
ஆனால், நடிகை குஷ்பு அவரை கண்டும் காணாமல் அமர்ந்திருந்தார். இதைக் கண்ட விடுதலைச் சிறுத்தை கட்சித் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் விழா தொடங்கியது. விழாவில் முறையாக அனைவரும் வந்து மேடையில் பேசிச் சென்றனர். தனது முறையின் போது பாடலாசிரியர் அறிவுமதி பேசிவிட்டுச் சென்றார். பின்னர் நடிகை குஷ்பு பேசச் சென்றார். அப்போது மேடையில் இருந்த திருமாவளவனை நோக்கி கை கூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு பேசினார்.
வழக்கு போடுவார்கள்
அப்போது அவர், "திருமாவளவன் வரும் போது நான் கவனிக்கவில்லை. அதற்குள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு விட்டது. இப்போதுதான் நான் அவரை பார்க்கிறேன். அதனால் வணக்கம் செலுத்துகிறேன். இப்போது வணக்கம் போடாவிட்டால், இதற்கும் வழக்கு போடுவார்கள். இதுவரை என் மீது 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நான் சொன்ன கருத்துகளை தவறாக புரிந்து கொள்கிறவர்கள்தான் இங்கு அதிகம். வாரம் இருமுறை வெளிவரும் பத்திரிகையில் நான் கூறிய கருத்தை யாராவது முழுமையாகப் படித்தீர்களா? இது சம்பந்தமாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா? என்று ஆவேசமாக பேசி முடித்தார்.
நாவடக்கம் வேண்டும்
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருமாவளவன் அனைவரையும் அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார். உடனே மேடையில் இருந்த பாடலாசிரியர் அறிவுமதி மீண்டும் மைக் முன்பு வந்து பேசினார்.
அவர் நடிகை குஷ்புவை பார்த்து, "திருமாவளவன் வரும்போதே முதலில் வணக்கம் தெரிவிக்காமல் இப்போது வணக்கம் தெரிவிப்பது நாகரீகமல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவர் மீதான இந்த மாதிரியான பேச்சு கண்டிக்கத்தக்கதுÕÕ என்று கூறி தனது இருக்கைக்கு சென்றுவிட்டார்.
தொண்டர்கள் எதிர்ப்பு
இதனால் வெகுண்டு எழுந்த குஷ்பு மறுபடியும் மைக்கின் முன்வந்து ஆவேசமாக பேசினார். அவர், "எனக்கு எப்போது, யாருக்கு, எப்படி, எங்கே வணக்கம் செலுத்த வேண்டும் என்பது தெரியும்ÕÕ என்று கூறி விட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார்.
இதைக் கண்டதும் தொண்டர்கள் அனைவரும் குஷ்புவை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பியதுடன், இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இதனால் அந்த அரங்கில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் தெரிந்ததும் போலீசார் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்காக அரங்கத்துக்குள் நின்றனர்.
வெளியேறினார்
அப்போது திருமாவளவன் மேடைக்கு பேச வந்தார். அவர், "நாங்கள் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. அவர் கூறிய கருத்துக்கு எதிராகத்தான் போராட்டம் செய்தோம். அவர் கருத்துகள் திரித்து கூறப்பட்டதா என்பது எங்களுக்கு தெரியாது. தமிழ்ப் பெண்கள் மீது களங்கம் கற்பிப்பது போல் இருந்ததால் போராடினோம். அதனால் குஷ்பு இடம் பொருள் ஏவல் தெரிந்து பேச வேண்டும்ÕÕ என்று பேசினார்.
கனிமொழி
அதைத் தொடர்ந்து கோபத்துடன் நடிகை குஷ்பு வெளியேறினார். கட்சி நிர்வாகிகள் சிலர் சென்று குஷ்புவை சமாதானப்படுத்தி அரங்குக்குள் அழைத்து வந்தனர். அதன்பிறகு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

5 Comments:

வடிவேலு said...

எனக்கென்னவோ...குஷ்பூ சொன்னதில் தவறில்லை என்று படுகிறது...திருமா வளவன் வந்தாக்க என்ன கால்ல விழுகணுமா ??

குஷ்புவை எவ்வளவு அவமான படுத்தி இருப்பார்கள் இந்த திருமா கட்சி ஆட்கள் ?? ஆளாளுக்கு அவனவன் கிராமம், டவுன் ல இருக்கிற கோர்ட் ல எல்லாம் குஷ்பூ மேல கேசு போட்டு சுய லாபம் தேடிக்கிறது...இவர்களுக்கு என்ன முதல் மரியாதை ?

இப்படி கேட்டு மரியாதை வாங்குறதுக்கு பதிலா, நாண்டுகிட்டு சாகலாம்...

கேட்குறவன் கேண பயல் ன்னா எருமை ஏரோபிளேன் ஒட்டுமாம் ??

cgs said...

my vote is also for kushboo iva.

how coem it is about kushboo's karuthu now?if the same maturity has been there for thiruma he would ahev been a good politician.
sorry this is another gimmick from his side.

Ravi said...

My full support to Kushboo here. First, respect cannot be demanded. So its no rule that Kushboo should greet Thiruma. Moreover, she did greet him later. Maybe the speech of Kushboo would've seemed unwarranted but it was instigated only due to Thiruma's supporters' reaction in the crowd. And she was bold enough to question if anyone had read her interview in the magazine completely fully aware that she would invite the wrath of Thiruma's supporters. Arivumathi's reaction and comment only makes me want to laugh (puke infact!!).

Prince of chola said...

குஷ்பு மேல் தவறு இல்லை என்றும் சொல்ல சிலர் இருப்பதுதான் ஆச்சர்யமளிக்கிறது.
குஷ்பு மேல் உள்ள தவறுகள்
1) குஷ்புவை இந்த விழாவுக்கு அழைத்தது திருமாவோ அல்லது அவர் மேல் வழக்கு தொடர்ந்து அவரை அலையவிட்டவர்களோ அல்ல. எனவே தனது பழைய கோபத்தைக்காட்ட இந்த விழாவை அவர் பயன்படுத்தியது தவறு, அவர் தன்னை ஒரு ஆளாக கருதி விழாவுக்கு அழைத்த ஆழி பதிப்பகத்தாரை, அவ்விழாவில் பிரச்சனையை கிளப்பி அவமானப்படுத்தியுள்ளார்.
2) இவர் திருமாவுக்கு வணக்கம் சொல்வதும் சொல்லாததும் இவரது விருப்பம். நீங்கள் கட்டாயமாக திருமாவுக்கு வணக்கம் சொல்லியே ஆகவேண்டும் என்று விழா ஏற்பாட்டாளர்களோ அல்லது அந்த விழாவின் பங்கேற்ற மற்றவர்களோ அவரை வற்புறுத்தவில்லை. பின் ஏன் அந்த இடத்தில் தேவையே இல்லாத ஒரு பேச்சு? வணக்கம் சொல்லவில்லையென்றால் வழக்கு போடுவோம் என்று யாராவது சொன்னார்களா? இவராக ஏன் வாயைக்கொடுத்து வம்பிழுக்க வேண்டும்?
தன் மீது தமிழகத்தின் எல்லா மூலைமுடுக்கிலும் வழக்கு போட்டவர்களின் மேல் இவருக்கு கோபம் இருந்திருந்தால் அதை சொல்ல வேண்டிய முறை இதுவல்ல. ஆழி பதிப்பகத்தின் விழாவிற்கு இவர் எப்படி ஒரு விருந்தினரோ அப்படித்தான் திருமாவும் ஒரு விருந்தினர். தங்களை அழைத்த விழா ஏற்பாட்டளரின் மற்றொரு விருந்தினரை அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? தமிழ்நாட்டு மருமகள் என்று பேச்சுக்கு பேச்சு சொன்னால் மட்டும் போதாது தமிழ்நாட்டின் பண்பாடுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
திருமா மேல் கோபமிருந்தால் இவர் எதற்கு மற்றொரு விழாவை பயன்படுத்த வேண்டும், தமிழகத்தின் மூலை முடுக்கிலெல்லாம் பல கூட்டங்களை நடத்துகின்றார்களே, அதில் ஏதாவது ஒரு கூட்டத்தில் போய் இவரது கோபத்தை காட்ட வேண்டியது தானே?
திருமா சொன்னதை தான் நானும் சொல்கிறேன்.
பிரச்சினையைத் தேடு ஓடுவதை குஷ்பு நிறுத்த வேண்டும், இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வேண்டும், குஷ்புவுக்கு உடனடித்தேவை : வாயடக்கம்

Anonymous said...

தகவல் திரித்து வெளியிடப்பட்டதா என்று கூட தெரியாமல் வழக்கு போடுபவர் ஒரு நல்ல தலைவரா? அப்படி வழக்கு போடுவதும் தமிழ்ப் பெண் மேல் அல்லவா?அது களங்கம் ஆகாதா?

திரித்து எழுதப்பட்டதா என்று தெரியாமல் உங்கள் குடும்பத்தினர்கள் மேல் வழக்கு போட்டால் வாயடக்கம் காட்டுவீர்களா?தலைவரின் சமீபகால நடவடிக்கைகள் கடும் அதிருப்தி ஏற்படுத்துகின்றன அல்லவா?