பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 07, 2008

டைரக்டர் சரணுக்கு நல்ல வசூல்ராஜா தேவை!

இன்று வந்த செய்தி. நடிகர் கமலஹாசன் மீது டைரக்டர் சரண் சினிமா பட அதிபர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளார். ரூ.2 கோடி பணத்தை திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்று அந்த புகாரில் கூறி இருக்கிறார். டைரக்டர் சரணுக்கு உடனடி தேவை ஒரு நிஜமான வசூல்ராஜா !



கமலஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை டைரக்ட் செய்தவர் சரண். அந்தப் படத்தை அடுத்து சரண், கமலஹாசனை வைத்து சொந்தப்படம் தயாரிக்க விரும்பினார். அந்தப் படத்தை அவரே டைரக்ட் செய்வதாகவும் இருந்தார். இந்தத் திட்டத்தை அவர் கமலஹாசனிடம் கூறிய போது, அந்தப் படத்தில் நடிக்க அவர் சம்மதித்தார்.

இதற்காக கமலஹாசனுக்கு முன்பணமாக சரண், ரூ.2 கோடி கொடுத்ததாகத் தெரிகிறது. இதற்கிடையில் சரணுக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. கமலஹாசனை வைத்து அந்தப் படத்தை அவர் தயாரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே அந்தப் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஐய்ங்கரன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திடம் சரண் ஒப்படைத்தார். டைரக்டர் பொறுப்பை மட்டும் அவர் வைத்துக் கொண்டார்.

இந்தத் திட்டத்தில் கமலஹாசனுக்கு உடன்பாடு இல்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ``சொன்னபடி நீங்கள் நடந்து கொள்ளவில்லை. எனக்குத் தெரியாமல் தயாரிப்பாளரையும் நீங்கள் மாற்றி விட்டீர்கள். இதனால் உங்கள் படத்தில் நான் நடிக்க முடியாது. உங்களிடம் வாங்கிய ரூ.2 கோடியை திருப்பித் தந்து விடுகிறேன்'' என்று கூறினார்.

இந்த சூழ்நிலையில் கமலஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டைரக்டர் சரண் புகார் கொடுத்து இருக்கிறார். அந்தப் புகாரில் `கமலஹாசனிடம் நான் கொடுத்த ரூ.2 கோடியை அவர் இன்னும் திருப்பித் தரவில்லை. எனக்கு அந்தத் தொகையை அவர் திருப்பித் தர உத்தரவிட வேண்டும் அல்லது என் டைரக்ஷனில் கமலஹாசனை நடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று சரண் கூறி இருக்கிறார்.

இந்தப் புகார் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூடி முடிவெடுக்க இருக்கிறது.

"கமலஹாசன் மீது டைரக்டர் சரண் புகார் கொடுத்து இருப்பது உண்மைதான். இந்தப் பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் கவனமாக செயல்படும். கமலஹாசன் ஒரு பெரிய நடிகர். அவர் மீது சரண் கொடுத்த புகாரில் உண்மையுள்ளதா? என்று விசாரித்து முடிவு செய்வோம்.”

- தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன்

பழைய பதிவு:

1 Comment:

Anonymous said...

" சர்ச்சையே " உனது மறுபெயர்தான் "கமல் ஹாசனோ ????"