பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 03, 2008

புத்தக கண்காட்சி சிறப்பு அம்சங்கள்

புத்தக கண்காட்சி சிறப்பு அம்சங்கள் என்று சில தகவல்களை மாலைசுடர் தந்துள்ளது....
தினத்தந்தியிலும் செய்தி வந்துள்ளது


* வழக்கத்தை விட இரண்டு நாட்கள் கூடுதலாக நடைபெறுகிறது.

* தொடர்ந்து 2வது ஆண்டாக பூந்தமல்லி, நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கில பள்ளியில் நடைபெறுகிறது.

* புத்தக கண்காட்சிக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* முதல் முறையாக அமெரிக்க நூலகம் சார்பில் அரங்கு அமைக்கப்படுகிறது.

* பிரிட்டிஷ் நூலகம் வாசகர்களுக்கு 200 ரூபாய் புத்தகம் வாங்க சலுகை வழங்குகிறது.

* புத்தக கண்காட்சிக்காக என்று பெரும்பாலான பதிப்பகங்கள் 20 முதல் 30 புதிய நூல்களை வெளியிட உள்ளன.

* பல ஆண்டுகளாக அச்சில் இல்லாத தமிழ் நூல்கள் மறுமதிப்பு காண்கின்றன.

* பழந்தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் நாட்டுடமை பெற்ற நூல்கள் பல பதிப்பகங்களால் வெளியிடப்படுகின்றன.

* மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மற்றும் வாசகர்களுக்கான வினாடி வினா நடத்தப்படுகிறது.

* சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. மறைந்த எழுத்தாளர் லா.ச.ரா. பற்றிய குறும்படம் திரையிடப்படுவது சிறப்பு. மறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் குறும்படமும் திரையிடப்படுகிறது.

* சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் போன்ற திரைப்பட மேதைகளின் படங்களும் திரையிடப்பட உள்ளது.

* வாசகர்களுக்கு சிவப்பு கம்பள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

* 7 இடங்களில் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி.

* வாசகர்களின் வசதிக்காக ஆறு இடங்களில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

* கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது.

* பள்ளி மாணவர்களுக்காக 12 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள்.

* ஐடி நிறுவனம் மற்றும் வங்கி, உயர் கல்வி துறையில் பணிபுரிவோருக்காக கோல்டன் டிக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரூ. 100 மதிப்புள்ள இந்த டிக்கெட்டை வாங்கினால் தினந்தோறும் 5 நபர் புத்தக கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவார்கள்.

தினத்தந்தி செய்தி:

சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமான புத்தக கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன், செயலாளர் ஆர்.எஸ். சண்முகம் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 31-வது ஆண்டு `சென்னை புத்தக கண்காட்சி' பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில்( பச்சையப்பா கல்லூரி எதிரில்) நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். தொழிலதிபர் நல்லிகுப்பு சாமி தலைமை வகிக்கிறார்.

இந்த கண்காட்சியில் 528 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. பதிப்பாளர்கள் உள்ளிட்ட 345 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. கண்காட்சி வருகிற 17-ந் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சி நடைபெறும் 14 நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பட்டிமன்றம், இலக்கிய சொற்பொழிவுகள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், பிற்பகல் 2.30 மணிக்கு உலக புகழ் பெற்ற குறும்படங்கள் மற்றும் பரிசு பெற்ற ஆங்கில மற்றும் இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் வங்கி துறையை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் கோல்டன் டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.100 மதிப்புள்ள இந்த டிக்கெட்டை வாங்கினால் தினமும் 5 பேர் நுழைவு கட்டணம் இன்றி கண்காட்சியில் அனுமதிக்கப்படுவார்கள். வாசகர்களுக்கு வினாடி- வினா போட்டியும் நடத்தப்படும்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கிய ரூ.1 கோடி நிதியில் ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை முலம் கிடைத்த வட்டியை கொண்டு 5 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழியும், பாராட்டு சான்றிதழ்களும் அவரால் வழங்கப்படுகிறது.

இந்த விருதினை சென்னையை சேர்ந்த மா.சு. சம்பந்தம், கோவையை சேர்ந்த கவிஞர் புவியரசு, தஞ்சையை சேர்ந்த மு.ராமசாமி, விருத்தாசலத்தை சேர்ந்த சு.தமிழ் செல்வி, எழுத்தாளர் சாரா ஜோப் ஆகியோர் பெறுகிறார்கள்.

புத்தகண்காட்சியை பார்க்க பள்ளி மாணவர்கள் அதிகமானோர் வர வேண்டும் என்பதற்காக 12 லட்சம் இலவச அனுமதி சீட்டு அச்சடிக்கப்பட்டு, சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் விற்பனை செய்யும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். நுழைவு கட்டணம் ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இந்த புத்தககண்காட்சியில் 15 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது, பெண்கள் மத்தியில் புத்தகம் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த கண்காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

5 Comments:

ஜயராமன் said...

நல்ல பயனுள்ள தகவல்தான். நன்றி.

/// இந்த புத்தககண்காட்சியில் 15 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். //

இதில் ஏதோ பிழை இருப்பது போல் தெரிகிறதே!!

ஜயராமன்

Anonymous said...

இந்த பத்ரியும் (NHM) தமிழ் எழுதும் மென்பொருள் வெளியிடுவதில் ஏதோ நுண் அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. சுரதாவின் யுனிகோட் மற்றும் கன்வர்டர் மென்பொருள் மிகவும் எளிதாகவும் (இலவசமாகவும்) இண்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே (லோக்கல் சேமிப்பில் இருந்தபடியே) தமிழ் எழுத வசதி இருக்கும் போது எதற்கு இன்னொரு மென்பொருள் அதுவும் விண்டோஸ் மட்டுமே அதுவும் டாட்.நெட் டவுன்லோட் எல்லாம் ?

இதற்கு இட்லிவடையும் லின்க் கொடுத்திருப்பது ஹும் என்னத்த சொல்ல.

இத்தனை நாள் பதிவுகள் அதிகம் எழுதாத பத்ரி இப்போ புத்தகம் விக்கணும்னு தினமும் ஒரு பதிவு போடுவது (அவரது விருப்பம் என்றாலும்) ஏதோ நுண்ணரசியல் மாதிரித்தான் தெரிகிறது.

பொதுவா கருத்து கந்தசாமி மாதிரி எல்லா விஷயங்களிலும் பொலிடிக்கலி கரெக்ட் (நன்றி: காசி) ஸ்டேட்மெண்ட் விடுக்கும் பத்ரி சமீப வாரங்களில் அடக்கி வாசிப்பது ஏனோ.

பத்ரியின் பதிவுக்கு செல்ல முடியவில்லை அதனால் இங்கேயே இந்த பின்னூட்டம்.

IdlyVadai said...

//இந்த பத்ரியும் (NHM) தமிழ் எழுதும் மென்பொருள் வெளியிடுவதில் ஏதோ நுண் அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. சுரதாவின் யுனிகோட் மற்றும் கன்வர்டர் மென்பொருள் மிகவும் எளிதாகவும் (இலவசமாகவும்) இண்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே (லோக்கல் சேமிப்பில் இருந்தபடியே) தமிழ் எழுத வசதி இருக்கும் போது எதற்கு இன்னொரு மென்பொருள் அதுவும் விண்டோஸ் மட்டுமே அதுவும் டாட்.நெட் டவுன்லோட் எல்லாம் ?//

இதில் எதுவும் அரசியல் இல்லை என்பது என் எண்ணம். NHM எல்லா மொழிக்கும் ஏற்றது மற்றவை தமிழ் சார்ந்தது.

//இதற்கு இட்லிவடையும் லின்க் கொடுத்திருப்பது ஹும் என்னத்த சொல்ல. //

லிங்க் கொடுப்பதில் என்ன இருக்கு மற்றவர்களுக்கு உதவியாக இட்லிவடையில் இதுவாது இருக்கே என்று சந்தோஷபடுங்கள் :-)

மஸ்கிட்டோ மணி said...

யார் கேன்டீன் போடுகிறார்கள் , 'இட்லிவடை' கிடைக்குமா போன்ற முக்கிய தகவல்களை கொடுக்காத இ.வ வுக்கு கண்டனம்

Narayanan M said...

Aarogiyamana oru sollal erpada ithu pondra neegalvugal kandippa uthavum! varaverakka thakkathu!! nandri.