பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 27, 2007

FLASH: பெனசிர் புட்டோ சுட்டு கொலை

பெனசிர் புட்டோ சுட்டு கொலை

பாகிஸ்தானில் பெனசிர் புட்டோ சென்ற பேரணியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாக் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான பெனசிர் புட்டோ கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. . ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசி முடித்து விட்டு திரும்பிய சில மணி துளிகளில் இந்த குண்டு வெடிப்பு நிகழந்தது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து கிடைத்த ‌தகவலின்படி பெனசிர் சுட்டு கொல்லப்பட்டதாக பாக்., டி. வி., தெரிவிக்கிறது. முதலில் லேசான காயம் ஏற்பட்டதாக இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என கூறப்பட்டது. ஆனால் அவர் சுட்டு கொல்லப்பட்டதாக பாக்., மக்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதே ரேநத்தில் நவாஸ் ஷெரீப் பங்கேற்ற பேரணியில் சென்ற அவரது ஆதரவாளர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெனசிருக்கு கழுத்து பகுதியில் துப்பாக்கி சூடு விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. ராவல்பிண்டி அருகே பிரசா கூட்டத்தில் பேசி விட்டு புறப்பட்டது.ம் 50 மீட்டர் தூரம் சென்ற பின்னர் பெரும் சப்தத்துடன் குண்டு வெடித்ததாக பாக்., மக்கள் கட்சி பிரமுகர் தெரிவித்தார். பரக்கத்துல்லா கூறுகையில் பெனசிர் புறப்பட்டதும் குண்டு வெடித்தது. ஆனால் அவர் தப்பி விட்டார் என நினைத்தோம் தொடர்ந்து அவர் காயமடைந்ததாக கூறப்பட்டதும் பெரும் பதட்டம் அடைந்தோம் என்றார். ராவல்பிண்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதும் அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவரது கழுத்து பகுதியில் துப்பாக்கியால் மர்ம நபர் சுட்டதாக ‌கூறப்படுகிறது.


3 Comments:

Anonymous said...

What a hot iddly updates.. Very good sir

Mangai said...

No value for human lives.
Individual preferences take over anything and everything.

சிங்கை வெங்கடேசன் said...

முதலில் மனிதாபிமான அடிப்படையில் அன்னாரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...

வினை விதைத்தவன் வினை அறுப்பான் (ள்) என்பது உண்மையாகி விட்டது....

இவர் ஒரு காலத்தில் (1989 ல்) காஷ்மீர் சுதந்திரத்தை பற்றி சூடாக பேசிய பேச்சு...மிக பிரபலமானது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப் லிங்க் ல் உள்ள வீடியோ வை பார்க்கவும்....

அம்மையார் கூறியது....

"காஷ்மீர் ஒரு முஸ்லீம் மாநிலம்...அது முஸ்லீம் களுக்கே சொந்தம்...இந்துக்கள் அழிக்கப்பட வேண்டும்....அப்போது தான் காஷ்மீருக்கு சுதந்திரம் கிடைத்த மாதிரி" என்று உண்மையான மனதொடோ அல்லது அரசியல் ஆதாயங்களுக்க்காகவோ கூறியவர்.... இன்று இப்படி அவருடைய சமுதாயதினாராலேயே கொல்லப்பட்டது...மிகுந்த வேதனைக்குரியது...

1947 ல் ராஜாஜி காந்தியிடம் கூறியதன் அர்த்தம் பல பேருக்கு இன்று விளங்கியிருக்கும்....முக்கியமாக பார்ப்பனர்களை கேலி செய்யும் கூட்டத்தினருக்கு... பாகிஸ்தானை அன்று பிரித்து விடாவிடில்....இந்தியா நாறி நாசமாக போயிருக்கும்.... அப்பாடா !!!! பிழைத்தோம்..

http://video.google.com/videoplay?docid=842219646390515565&hl=en