பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 17, 2007

திமுகவின் கடிகாரம்

கடிகார முட்கள் பற்றி வைரமுத்து, கலைஞர் பேச்சு.. கடைசியில் இட்லிவடை படம் :-)


கடிகார முட்கள் போல்... வைரமுத்து கவித்துவமான பேச்சு

மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரை நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் ஒரு கடிகாரம் போன்றது. கடிகாரம் இயங்க 2 முட்கள் தேவை. சின்ன முள்ளும், பெரிய முள்ளும் தேவை. இரண்டு முள்ளும் இல்லாவிட்டால் காலத்தை காட்ட முடியாது. சின்ன முள் நிதானமானது, நேரம் காட்டும். பெரிய முள் சுறுசுறுப்பானது, வேகமாக ஓடும். எனவே சின்ன முள்ளும், பெரிய முள்ளும் கடிகாரத்திற்கு தேவை.

திராவிட இயக்கத்தின் மீது ஆசை உள்ளவன் என்ற முறையில் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடிகாரத்தின் முட்களைப் போல் நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். அண்ணாவின் வாழ்த்தை பெற்றவர் கலைஞர். தளபதி மு.க. ஸ்டாலினுக்கு கலைஞரின் வாழ்த்து இருக்கிறது. அவருக்கு அண்ணாவின் வாழ்த்தும் இருந்தால் அவர் பெறும் வெற்றி பொன் எழுத்துக்களில் பொறித்துக் கொள்ள வேண்டிய வெற்றியாக இருக்கும்.

வைரமுத்து பேச்சுக்கு கலைஞர் ஸ்டைலில் பதில்

காவியக்கலைஞர் காட்சிக்கு தலைமை தாங்கி வைரமுத்து பேசும் போது, கடிகாரத்தின் சின்னமுள்ளும், பெரிய முள்ளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். நான் எந்த கடிகாரம் என்று கேட்டதற்கு பதில் கூறாமல் சென்றுவிட்டார்.

என்னைப் பொறுத்தவரை எந்த முள் என்பதில் கவலை இல்லை. ஆனால் அந்த கடிகாரம் நன்கு இயங்க வேண்டும், நான் நேரம் பார்க்கும்போது நேரம் சரியாக இருக்க வேண்டும்.

ஆற்காடு வீராசாமியா, அன்பழகனா, துரைமுருகனா என்று பார்ப்பதில்லை. கழகம் நன்றாக இருக்கிறதா, பணி நடக்கிறதா என்று தான் பார்க்கிறேன்.

இட்லிவடை ஸ்டைலில் படம்


11 Comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

படம் சூப்பர்.அப்படியே ஒவ்வொரு எண்ணுக்கும் ஒருத்தர் படத்த போட்ருந்தா இன்னும் சிறப்பா இருக்காலாம்

IdlyVadai said...

சாமான்யன், சாமானியமா சொல்லிபுட்டீங்க ஆட்டோ வந்தா என்ன செய்யறது !

Anonymous said...

Hi,
I'm unable to see the contents in FireFox 2.0.0.9 in Linux.
Could you pl. help me...?

Hariharan # 03985177737685368452 said...

அப்பன் செய்த தொழிலை அடுத்தடுத்த தலைமுறையினர் செய்யும் பாரம்பரியமே "வர்ணம்" என்று பகுத்தறிவோடு உணர்ந்த திராவிட இயக்கப் பற்றாளரான கவிப்பேரரசு வைரமுத்து முன்னர் இப்படி கவிதை இயற்றினார்...

"இனி வானவில்லில் மட்டுமே இருக்கட்டும் வர்ணம்"- என்று

இன்று திராவிட இயக்கத்தின் மீதான பற்று மிகுந்த நிலையில் காலத்தை வர்ணம் இழக்கச் செய்த திராவிட இயக்கச் சாதனையாளர்களே வாழையடிவாழை/வாரிசு வர்ணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லும் காலம் காட்டும் கடிகார முட்களாக இருக்க ஆசைப்படுகிறார்!

வாழ்க காக்கைக் கவிப்பேரரசு!

கருணாநிதி கவிஞரின் இந்தக்கூற்றுக்கு அளித்த நிதி எவ்வளவோ?

யோசிப்பவர் said...

விநாடி முள் இன்னும் கடிகாரத்துக்குள்ளா இருக்கிறது?!?

மஸ்கிட்டோ மணி said...

இந்த கடிகாரமே வேணாம், முள்ளில்லாத டிஜிட்டல் கடிகாரம் வாங்குவோம்

புண்ணாக்கு கோவிந்தன்.. said...

கடிகாரமே வேண்டாம்.... வெருங்கய்யே better.. இந்த எழவு கட்சிகள விட்டுட்டு வேற யாரவது வரணும்....எப்போபாரு..டி.எம்.கே இல்லாங்காட்டி எ.டி.எம்.கே வா...

கனவு காணுரதுக்கு மாட்டு மருத்துவகுடி இருக்காரு..கேப்டன் இருக்காரு..சரத்து இருக்காரு... இவிங்கள ஒட்டு போட்டு ஆட்சிக்கு கொண்டுவாங்கய்யா..

(தரு/திரு.) தலை said...

அப்படிபார்த்தா, ஆ.தி.மு.க வின் கடிகாரத்தில ஒரே முள்ளு தான்.

Anonymous said...

காக்கா கவிஞர் சொன்னது வன்மையாக கண்டிக்கப் படவேண்டியது.தி மு க கடிகாரத்துல தீவிரவாதி தாடிக்காரன் ஒரு முள்;மூக்குப்பொடி அண்ணா இன்னொரு முள்.

bala said...

அப்ப, நம்ம தாடிக்காரரின் நெஞ்சில் தைத்த முள் என்ன முள்?சின்ன முள்ளா,பெரிய முள்ளா?குழப்பமா இருக்கே.

பாலா

Anonymous said...

பெரிய வீட்டிலிருந்து வரும் ஸ்டாலின் பெரிய முள்ளு,

சின்ன வீட்டின் சீமந்தப் புத்ரி கனிமொழி சின்ன முள்ளு..