பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 20, 2007

விஜயகாந்த் செல்வாக்கு ?

நண்பர் ஒருவர் சாட்டில் வந்து விஜயகாந்த் செல்வாக்கு நிஜமாக உயர்ந்திருக்கா ? இந்த மாதிரி கருத்துகணிப்பு எல்லாம் நிஜமா என்றார். எனக்கு தெரியாது ஆனால் திமுக மாநாடு நடந்த போது பேசிய சில பகுதிகளை கீழே தந்துள்ளேன்....


"நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த சில காளான்கள் தங்களிடம்தான் இளைஞர்கள் இருப்பதாகக் கூறிவருகின்றனர். ஆனால், இளைஞர்கள் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார்கள். அழைத்தால் வர வேண்டிய இடத்திற்கு வந்துவிடுவார்கள். இன்று இந்த இளைஞரணி பேரணியைப் பார்த்தபோது, எனக்கும் பத்து வயது குறைந்துவிட்டது" - கி. வீரமணி

"இளைஞர்களே... திடீர் தலைவர்களையும், "புரட்சி' என்று பட்டங்களை சூட்டிக்கொள்ளும் மின்மினி தலைவர்களையும் நம்பாதீர்கள். வெறும் கேளிக்கை ரீதியான தலைவர்கள் பின்னால் போகாதீர்கள். தி.மு.க.வில் இணையுங்கள்" - கவிஞர் தமிழச்சி

"இன்று யார் யாரோ, புதிதாக கட்சி துவங்குகிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், தலைவராகலாம். எனவே, இந்த மாநாட்டை அவர்களைப் பற்றி பேச, நான் பயன்படுத்தப் போவதில்லை. தி.மு.க. 1949ல் உருவாகி, 67ல்தான் ஆட்சி அமைத்தது. ஆனால், இன்றைய திடீர் தலைவர்களோ கட்சி துவங்கியவுடனேயே அடுத்த முதல்வர் என்று கூறிக்கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது" – ஸ்டாலின்.

2 Comments:

யோசிப்பவர் said...

'புரட்சி' கவிஞர் தமிழச்சி வாழ்க

Anonymous said...

தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து


சென்னை, டிச.21: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கவர்னர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா: பக்ரீத் நன்நாளில் ஒற்றுமை, சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

முதல்வர் கருணாநிதி: தன் வீட்டு சமையல் அறையில் இருந்து வெளியேறும் வாசனையால், வசதியற்ற அண்டை வீட்டாருக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்ற சிந்தனையைக் கொண்ட மனித நேயமிக்கது இஸ்லாமியக் கலாசாரம். அண்ணல் நபிகள் நாயகம் வகுத்துத் தந்த இத்தகைய மனிதநேயப் பண்புகளைப் பின்பற்றிடும் இஸ்லாமிய மக்கள், தமிழகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளுடன் இவ்வாண்டில் அரசு பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அரவணைத்திடும் தமிழக அரசின் சார்பில் என் உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்.ஜெயலலிதா: இறைவனின் தூதரான இப்ராம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவுகூரும் தியாகத் திருநாள் பக்ரீத். இறைவனை வழிபட்டு, ஏழை எளியோர், நண்பர்கள், உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உன்னதப் பணியை நினைவூட்டும் திருநாள் பக்ரீத். இந்நன்னாளில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இதயம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி: இறைவனின் ஆணைக்கிணங்க இப்ராம் தன் மகன் இஸ்மாயிலையே பலிதர முன்வந்த தியாகத்தின் மேன்மையை நினைவுறுத்தும் நாள் பக்ரீத். இந்நாளில், மனித இனத்தில் உள்ள சாதி, இன, மத வேறுபாடுகளை கடந்து நல்லிணக்கத்தோடு நாடு உயர உழைப்போம் என்று சூளுரைப்போம்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: மனித குலத்துக்கு இஸ்லாம் தந்துள்ள தியாகமெனும் நற்பண்பை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி எல்லோரும் கடைப்பிடித்து மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றி வளர்க்க இத்திருநாளில் எல்லோரும் சூளுரை எடுத்துக் கொள்வோம்.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: Ôஇதயத்தில் தூயவர்கள் செய்யும் தியாகத்தை, இறைவன் ஏற்பார்Õ என்பார் அண்ணல் காந்தியடிகள். ‘தன்னை எரித்துக் கொண்டு ஒளியூட்டி வழிகாட்டும் தீபத்தைப் போல, ஒளிவிளக்காய் நாம் வாழ்ந்திடுவோம்Õ என்ற அல்லாமா இக்பாலன் வைர வரிகளை உள்ளத்திலே கொண்டாடும் திருநாள் பக்ரீத்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்: பிறப்பால் அனைவரும் சமமானவர்களே என்றும் அனைவரின் உணர்வுகளையும் மதித்து போற்றவேண்டும் என்றும் ஜனநாயக அணுகுமுறைகளை மானுடத்துக்கு கற்பித்த நபிகள் நாயகத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதன் அடையாளமாக பக்ரீத் திருநாள் விளங்குகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: சமுதாயத்தில் இருந்து ஒருவர் பெறுவதைவிட, தருவதுதான் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் உண்மையாக சமுதாயத்துக்கு பயன்படுபவர் ஆவார். அதைதான் தியாகமென்று மக்கள் போற்றுகின்றனர். இறைவன் மீது கொண்டுள்ள பக்தியால், தங்களது ஒரே மகனை இழக்கத் தயாரான நாளே பக்ரீத் திருநாள்.

அஇசம கட்சி தலைவர் சரத்குமார்: உலகில் உள்ள இஸ்லாமிய பெருமக்கள், பக்ரீத் திருநாளை தியாகத் திருநாளாகக் கடைபிடிக்கிறார்கள். அன்பு, அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய இஸ்லாத்தின் உயரிய லட்சியங்களை நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழியில் சென்று செயல்படுத்த உறுதி ஏற்க வேண்டுகிறேன்.