பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 04, 2007

செந்தில் ஜோடியாக நடிக்க மாட்டேன்- மீனா மறுப்பு

காமெடி நடிகர் செந்தில் ஆதிவாசியும் அதிசய பேசியும் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் மீனா நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். கவுண்டமணியிடம் அடிவாங்கி பழக்கபட்டவர் என்பதால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.காமெடி நடிகர் செந்தில் ஆதிவாசியும் அதிசய பேசியும் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு பழங்குடி இனத்தவர் வேடம்.

காட்டில் வசிக்கும் அவர் செல்போனை வைத்துக்கொண்டு பண்ணும் நகைச்சுவை சம்பவங்களே இப்படத்தின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க காடுகளில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. செந்தல் ஜோடியாக நடிக்க கதாநாயகி தேடிவந்தனர். மீனா ஜோடியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தயாரிப்பு தரப்பினர் கருதினர். இதற்காக அவரை அணுகினர்.

ஆனால் செந்திலுடன் ஜோடி சேர மீனா மறுத்து விட்டார்.

ஆதிவாசியும் அதிசய பேசியும் படத்தின் தயாரிப்பாளர் பி.பி.பாபு என்னை சந்தித்து செந்தில் ஜோடியாக நடிக்கும்படி கேட்டார். எனக்கு அவர் ஜோடியாக நடிக்க விருப்பமில்லை. எனவே மறுத்துவிட்டேன் என்றார். அதே படத்தில் மீனா தனியாக ஒரு கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

0 Comments: