பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 04, 2007

மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்

மருத்துவ படிப்பு காலத்தை 51/2 ஆண்டிலிருந்து 61/2 ஆண்டு நீட்டிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெரும்பாலான மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும், தமிழ்நாட்டிலுள்ள 6 மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதி ஜானகிராம் கூறும் போது, நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து பெரும்பாலான மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களது போரட்டத்தை கைவிட்டுள்ளனர். இருப்பினும், தொடர்ந்து 6 மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அவர்களிடம், பேச்சுவார்த்தையின் விவரத்தை எடுத்துக்கூறி போராட்டத்தை கைவிட அறிவுறுத்துவோம் என்று கூறினார்.
முழு விவரம் கீழே...

அமைச்சர் கருணாநிதி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுத்தார். `மருத்துவப் படிப்பை நீடிப்பது தொடர்பாக எந்த சட்டமும் இயற்றப்பட வில்லை. நிபுணர்குழு அறிக்கை வந்த பிறகு தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய சுகாதார மந்திரி அன்புமணி உறுதி அளித்துள்ளார். இதை ஏற்று போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று அவர் கூறி இருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று மாலை மருத்துவக் கல்லூரி மாணவர் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப் போது போராட்டத்தை வாபஸ் பெறும்படி கேட்டுக் கொண்டார். அதை தொடர்ந்து மாணவர் சங்க பிரதிநிதிகள் தங்கள் முடிவை விரைவில் தெரிவிப்பதாக கூறினார்கள். பின்னர் மாணவர் சங்க பிரதிநிதிகள் தனியாக கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது போராட்டத்தை வாபஸ் பெறுவது என்ற முடிவை பெரும்பாலான மாணவர் சங்க பிரதிநிதிகள் ஆதரித்தனர். இதையடுத்து சென்னை, தஞ்சை, மதுரை, சேலம், திருச்சி, தேனி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய 8 மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை உடனே வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

போராட்ட வாபஸ் குறித்து தமிழ்நாடு மருத்துவ மாண வர்கள் மற்றும் பயிற்சி மருத்து வர்கள் கூட்டமைப்பு அறிக்கை:

3-12-07 அன்று தமிழக முதல்வர் அளித்த வேண்டு கோளை உறுதிமொழியாக ஏற்று, நோயாளிகளின் நலன் மாணவர்களின் படிப்பு பெற் றோர்களின் உணர்வு கருதி பணிக்குச் செல்கி றோம்.

தமிழக முதல்வர் அவர் களும், அனைத்து கட்சி தலைவர்களும் பல்வேறு அமைப்புகளும், மக்களும் எங்களுக்கு ஆதரவு அளித்த பின்பும் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் சாம்பசிவராவ் தலைமையிலான குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன் தான் இறுதி முடிவு எடுக்கப் படும் என்று கூறியது எவ ருக்கும் ஏற்புடையதாக இல்லை. இருப்பினும், தமி ழக முதல்வரின் உறுதி மொழி யினை ஏற்று எம்.பி.பி.எஸ். படிப்புக் காலம் 5 ஆண்டு களில் இருந்து 6 ஆண்டு களாக உயர்த்தப்பட மாட்டாது என மாணவர்கள் நம்பு கிறோம்.

மேலும், எதிர்காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச் சகம் மீண்டும் இத் திட்டத்தை கொண்டு வர முனைந்தால் நாடு தழுவிய அளவிலான எங்கள் போராட்டம் தொடரும். எங்களுக்கு ஆதரவளித்த தமிழக முதல்வருக்கும் அனைத் துக் கட்சி தலைவர் களுக்கும் சமூக நல அமைப்பு களுக்கும், மாணவர் அமைப்புகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியி னைத் தெரிவித்துக் கொள்கறோம்.

தொடர்ந்து உண்ணாவிரதம் - ஸ்டான்லி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுப்பு


சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். நேற்று காலை ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் உண்ணவிரதத்தை தொடங்கிய மாணவ-மாணவிகள் இன்று காலையிலும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-

மருத்துவ மாணவர்கள் மீது முதல்-அமைச்சர் காட்டும் அக்கறைக்கு நன்றி தெரிவித் துக் கொள்கிறோம். என்றா லும் எங்கள் கோரிக்கை குறித்து மத்திய மந்திரி அன்புமணி எந்தவித அறி விப்பையும் வெளியிட வில்லை. போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மட்டுமே கூறுகிறார். எனவே மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது போல போராட்டம் வாபஸ் பெறப்பட்டாத நெல்லை, கோவை, உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளுக்கும் இன்று மாணவ-மாணவிகள் செல்லவில்லை.

இந்த கல்லூரி மாணவ- மாணவிகளும் இன்றும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

0 Comments: