பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 13, 2007

கொள்கை, நாய்க்கு மட்டும்தான் !

பெரியார் வீட்டு நாய்க்கு பிராமணர் நடத்திய ஹோட்டல் என்பதால் பால் வாங்காமல் தன் கொள்கையை நிலைநாட்டிய வீரமணி பற்றிய செய்திக்கு சோ கருத்து!கே : பிராமணர் நடத்துகிற ஹோட்டல் என்பதால், பெரியார் வீட்டு நாய்க்கு அங்கு பால் வாங்குவதைக் கூட தவிர்த்துவிட்ட தி.க. தலைவர் வீரமணியை, முதல்வர் கலைஞர் புகழ்ந்திருக்கிறாரே?

ப : அவருக்கென்ன வந்தது? பாலில்லாமல் பட்டினி கிடந்தது பெரியார் வீட்டு நாய்தானே! பிராமணர் நடத்துகிற ஹோட்டல் என்பதால், அதை ஒதுக்கி, பெரியாரின் நாயைப் பட்டினி போட்ட வீரமணி, நல்லவேளையாக தன் விஷயத்தில், இந்த மாதிரி "கொள்கைப் பிடிப்பு' எதையும் காட்டவில்லை. பிராமணப் பெண்மணி ஜெயலலிதாவையும், அவரது ஆட்சியையும் ஆதரித்தார்; இத்தனைக்கும் மத்தியில் பிராமணர் வாஜ்பாய் ஆட்சி அமைய உதவிய பிராமணப் பெண்மணியாக ஜெயலலிதா இருந்தும், ஒரு சான்ஸைக் கூட விடாமல், அவரை வீரமணி புகழ்ந்து தள்ளினார். கொள்கை, நாய்க்கு மட்டும்தான்!

13 Comments:

Anonymous said...

சூப்பர் பதில்.
சோவை சோமாரி அப்படி-இப்படின்னு திட்டும் கபோதிகளுக்கு இந்தமாதிரி லாஜிக்கலா திங்க் பண்ண கூடதெரியாதுங்கறதுதான் உண்மை.

என்றுணர்வர் இந்த திராவிட திம்மிகள் தன் அறிவிலித்தனத்தை.

யோசிப்பவர் said...

'கவிதாயினி' கனிமொழிக்கு போட்டியாக கவிஞர் சோவின் கவிதைகளை பிரசுரிக்கவில்லையா?

Anonymous said...

Animal Welfare Board should take suo moto action & arrest Veeramani for not giving food to the dog

IdlyVadai said...

அனானி லூஸுல விடுங்க. நாய் வாலை நிமுத்த முடியாது :-)

IdlyVadai said...

யோசிப்பவர் உங்களுக்காக இதோ

இப்படியே மற்ற பகுதிகளையும் கேட்கார்தீர்கள் :-)


கே : தைரியம் இருந்தால், எங்கள் கவிஞர் கனிமொழி எம்.பி.யுடன் கவியரங்கில் கலந்துகொண்டு கவிபாடத் தயாரா?

ப : அன்புமிக்க வாசகரே, என்ன இது இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? "கூவம் நதிக்கரையினிலே' தொடரில் நான் எழுதிய கவிதையின் ஒரு சில வரிகளை நினைத்துப்பாருங்கள்.

மந்தவெளி மன்னாரு
மஞ்சாசோறு தின்னுட்டான்
அடையாறு ஆறுமுகம்
அம்பேல்னு போயிட்டான்...

இஸு இஸுன்னு நான்
இஸ்க்கறேன் இஸ்க்கறேன்
இஸ்தேன்னா வந்துரு
இல்லேன்னா எந்திரு...

நீங்கள் குறிப்பிடுகிற போட்டியில், நான் வெற்றிபெற இது போதாதா!

போதாதென்றால், இதோ அடுத்த சாம்பிள்! "சர்க்கார் புகுந்த வீடு' தொடரில் நான் வடித்த கவிதையில் ஒரு சிறு பகுதி இது :

மனதிலே டென்ஷன்
இருந்தால், அவன்
அப்பா.

பையிலே பென்ஷன்
இருந்தால், அவன்
தாத்தா'.

வீரத்திற்கு முதல் கவிதை; தத்துவத்திற்கு இரண்டாவது கவிதை! என்ன? நீங்கள் சொல்கிற கவியரங்கத்தில் வெற்றி எனக்குத்தானே?

இப்படிக்கு,
கவிஞர் சோ

Bala said...

IPod Iyyasamy

Answer

Movie ---Doli Saja ke rakhna
song name 'Bol Sajni'

Bala

வெங்கி said...

ரெண்டு கிழ்வனுங்களுக்கும் ( கலைஞர், வீரமணி) வேற வேலையே கிடையாது...செத்த கழுதைக்கு ஜாதகம் பாக்குறது...சும்மா விழா நடத்தி மொக்க போடுறது....சோ கொடுத்தது...சூப்பர் அடி...

பெரியார் நாயி பால் குடிச்சா என்ன ?? பீர் குடிச்சா என்ன....சோ சொன்ன மாதிரி...வீரமணி Situation க்கு எத்த மாதிரி..ஜால்ரா போடறாரு... சீக்கிரம் இவனுங்க மண்டைய போட்டா நாடு உருப்படும்....

Hariharan # 03985177737685368452 said...

நாய் கொண்டு நிரூபிக்கப்பட்ட
ஈவெரா வகையறாக்களின் பகுத்தறிவுக் கொள்கைப் பிடிப்பு சம்பந்தமாக எனது பதிவுஈவெரா வகையறாக்களின் பகுத்தறிவு ISO 9001(நாய்)கொள்கைப்படி மானமிகு-இனமானக் காவலனாவது எப்படி இந்தப்பதிவில்

ஜோதிபாரதி said...

கி.வீரமணி அவர்கள் நல்லவர். வல்லவர். முதல்வர்களை அனுசரிப்பதிலே நல்லவர், முதல்வர்களிடம் காரியம் சாதிப்பதில் வல்லவர். பெரியார் கல்லுரிகளில் ஏழை எழிய மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுப்பாரா? ஜெயலலிதாவுக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டம் கொடுத்தார். அப்போது அவர் பிராமணர் என்று தெரியாதா? மக்கள் ஏமாற ரெடி என்றால், அவர் ............. ரெடி.

அன்புடன் ஜோதிபாரதி
http://jothibharathi.blogspot.com/

Anonymous said...

cho's bathil = sooooooooper.
It doesn't take much to be called kavignar these days.

Anonymous said...

இந்த கே-ப விலிருந்து, பெரியார் வீட்டு நாய் பால் குடித்த காலமும் இன்றைய காலமும் சிறிது மாறி இருக்கிறது என்ற உண்மை(!!!) தெரியவருகிறது :)

john said...

கலைஞர் சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியுது. வீரமணி நாய்க்கு பால் வாங்கக்கூட துப்பிள்ளதவன் என்கிறார். என்ன கோபமோ?

Anonymous said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க? நானும் கவிஞர் தான். இதோ பாருங்கள்:

இட்லி மூன்றெழுத்து - தொட்டுக்க
சட்னியும் மூன்றெழுத்து
ப்ளாக் அது மூன்றெழுத்து - பின்னூட்டும்
அனானியும் மூன்றெழுத்து!

இப்படிக்கு
கவிஞர் அனானி.