பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 11, 2007

யார் உண்மை பேசுகிறார்கள் ?

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது குஜராத் ஆட்சியாளர்களை `மரணத்தின் வியாபாரிகள்' என்று அவர் குற்றம் சாட்டினார்.

சோனியாவின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையை உருவாக்கியது. ...

குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியைத்தான் `மரணத்தின் வியாபாரி' என சோனியா கூறியதாக பா.ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். நரேந்திர மோடி உடனே இந்து அஸ்திரத்தை எடுத்து பிரயோகித்தார். மீடியாவும் வழக்கம் போல் நரேந்திர மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்தது.

" மரணத்தின் வியாபாரி என்று சோனியா காந்தி பொதுவாகத்தான் சொன்னார். எந்த தனி நபரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை" என மத்திய மந்திரியுமான கபில் சிபல் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது விளக்கம் அளித்தார்.

"மரணத்தின் வியாபாரி என்று சோனியா சொன்னது நரேந்திர மோடியைத்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது" என்று காங்கிரசின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி திட்டவட்டமாக (சனிக்கிழமை) கூறினார்.

சோனியாவின் பேச்சு குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் திடீரென்று நோட்டீசு அனுப்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சி தனது நிலையை இப்போது தலைகீழாக மாற்றிக் கொண்டது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று பேட்டி அளிக்கையில், `மரணத்தின் வியாபாரி என்று சோனியா காந்தி சொன்னது நரேந்திர மோடியை அல்ல. மரணத்தின் வியாபாரி என்று அவர் கூறியது உண்மைதான். ஆனால் எந்த நபரையும் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை. அவருடைய உரையை யார் வேண்டுமானாலும் படித்து பார்த்து உண்மை நிலையை தெரிந்து கொள்ளலாம்' என்று சிங்வி தெரிவித்தார்.' என்று கூறினார்.

இதே பதிலைத்தான் இன்று தேர்தல் கமிஷனுக்கு சோனியா அனுப்பியுள்ளார்.

நரேந்திர மோடி வெற்றி பெற போவது நிச்சயம் என்பது என் கருத்து.


6 Comments:

Sundar K H said...

gujarat melum valam pera MODI jeyika vendum...

யாத்திரீகன் said...

என்ன நடக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் ?

Kamal said...

கண்டிப்பாக பா.ஜ.க தான் வெல்லும்...
மரணத்தின் வியாபாரி என்று கூறிய சோனியா காந்தியின் குடும்ப சொத்தான காங்கரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் சாவு மணி அடிக்கத்தான் போகிறார்கள்..
தேர்தல் முடிவு வந்ததும் "அன்டோனியோ மெயனோ" ராவோடு ராவாக இத்தாலிகே செல்லபோகிறார்.

யோசிப்பவர் said...

//மொபைல் போன் பேட்டரிக்கு வேப்பங்குச்சியை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றுவது கடலூர் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. முழுவதுமாக சார்ஜ் குறைந்த மொபைல் போன் பேட்டரியை அப்புறப்படுத்தி, போனில் உள்ள நடு பின்னில் சிறிய வேப்ப இலைக் காம்பை வைத்து மீண்டும் பேட்டரியை பொருத்தினால் போதும். அடுத்த இரண்டு வினாடிகளில் முழு சார்ஜ்! ஏறிவிடுகிறது. பிறகு பல மணிநேரம் அதை வைத்தே பேசமுடியும். இந்த முறை கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வேகமாக பரவிவருகிறதாம். (செய்தி: தினமலர்)
//

என்றைக்கு தினமலர்?

Anonymous said...

cho interview
http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml

Abu-Ben-Adam said...

மோடி மரண வியாபாரி என்பதில் ஒரு ஐயமும் இல்லை...

Let the Almighty save the Gujarat