பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 13, 2007

தி.மு.க. -பா.ம.க. கூட்டணியில் குழப்பம் - விஜயகாந்த் பேச்சு

திமுக பா.ம.க மோதல், திமுக மாநாடு, கூட்டணி பற்றி விஜயகாந்த் பேச்சு ( திருமண விழாவில் தான் வேறு எங்கே இப்படி பேச முடியும் ? )

நான் ஜாதி மதம் எதையும் பார்க்க மாட்டேன். நாட்டில் இருப்பது ஒன்று ஆண் ஜாதி, மற்றொன்று பெண் ஜாதி தான். திருமண நிகழ்ச்சியில் நான் அரசியல் பேசுவது இல்லை. ஆனால் பலர் திருமண நிகழ்ச்சிகளில் பேசி வருவதால் நானும் பேச வேண்டிய நிலை உள்ளது.

நான் யாருக்கும் எப்போதும் பயப்பட மாட்டேன். நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் நாட்டில் வறுமை, ஊழல் அதிகம் உள்ளது. தர்மபுரி மாவட்ட மக்கள் நிறைய பேர் வேலைக்காக பெங்களூர் செல்கிறார்கள். இதற்கு வறுமை தான் காரணம்.

தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கள் தொட்டில் மையத்தில் ஒப்படைக்கப் படுகிறார்கள். இதற்கு காரணம் வறுமை தான். எனவே வறுமையை ஒழிக்க தர்மபுரியில் பெரிய தொழிற்சாலை தொடங்க வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

அரசு சார்பில் இலவச டெலிவிஷன் கொடுப்பதை நான் குறை சொல்லவில்லை. டி.வி. கொடுப்பது போல வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.

அரசு கொடுக்கும் டி.வி. விற்பனை செய்யப்படுவதாக நான் முதலில் கூறினேன். அதை யாரும் கேட்கவில்லை. ஆனால் இப்போது டி.வி. விற்பனை செய்வதை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள்.

நான் மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை என்று கூறுகிறார்கள். நான் எதற்காக போராட்டம் நடத்த வேண்டும். அப்படி போராட்டம் நடத்தினால் சாலை மறியல் நடத்தினால் பாதிக்கப்படுவது எனது மக்கள் தான். தவறு செய்யும் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம்.

இப்போது தி.மு.க. - பா.ம.க. கூட்டணிக்குள் குழப்பம் நீடிக்கிறது. புறம்போக்கு நிலத்தை எடுக்கக்கூடாது என்று ஒரு கட்சியினர் கூறுகிறார்கள். கூட்டணியில் உள்ள மந்திரி நீங்கள் தான் புறம்போக்கு நிலத்தில் கல்லூரி நடத்துகிறீர்கள் என்று கூறுகிறார்கள். கூட்டணி கட்சியினர் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள். 5 ஆண்டுகளில் ஆட்சி மாற்றம் வந்து விடும் என்று நினைத்து அரசியல் கட்சியினர் கொள்ளையடித்து வருகிறார்கள்.

நெல்லையில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பிரமாண்ட மாநாடு நடத்தப் படுகிறது. இளைஞர்கள் இருப்பது இப்போது தான் தெரிகிறதாப தைரியம் இருந்தால் அரசியல் கட்சியினர் தனியாக தேர்தலை சந்தியுங்கள் என்று நான் கூறி வருகிறேன். அதற்கு யாரும் இதுவரை பதில் கூறவில்லை. மக்களையும், கடவுளையும் நம்பி தான் இருக்கிறேன். எனது கூட்டணி மக்கள் கூட்டணி தான். அரசியல் கட்சியினர் திருந்த வேண்டும் அல்லது மக்கள் திருத்த வேண்டும்.

0 Comments: