பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 13, 2007

சானியா மிர்ஷா மீது வழக்கு


இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா மீது வழக்கு தொடரப்பட்டது. மெக்கா மசூதியில் விளம்பர படப்பிடிப்பில் நடித்த சானியா மிர்ஷா மீது இஸ்லாம் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 17ம் நூற்றாண்டை சேர்ந்த மெக்கா மசூதியில் சில தினங்களுக்கு முன், முன்அனுமதி பெறாமல் விளம்பர படத்தில் நடித்த சானியா மீது இஸ்லாம் அமைப்பினர்கள் வழக்கு ‌தொடர்ந்துள்ளனர். மேலும் இது பற்றி அவர்கள் குறிப்பிடுகையில் இதற்கு முன்பே கவர்ச்சியாக உடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட போதும் அதில் இருந்து மீண்ட சானியா தற்போது விளம்பர படத்திற்காக அத்து மீறி உரியவர்களிடம் அனுமதி பெறாமல் மசூதியில் நுழைந்து சர்ச‌்‌சை ஏற்படுத்தி இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்துவதாக குறிப்பிட்டனர்.. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் சானியா 2005ல் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு ஆதரவளித்து பேசி சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

4 Comments:

Venkie said...

அய்யா இட்லி வடை !

இந்த செய்தியோட நோக்கம் என்ன ? இஸ்லாமியர் தொடர்ந்த வழக்கா ? இல்லை, அந்த போட்டோ வில் தெரியும் சானியா மிர்சா வின் ஜட்டியா ?

Srikanth said...

This is been a surrender season. Sania has apologized finally.
http://www.indianexpress.com/story/249961.html

வெங்கட்ராமன் said...

ஏன் சானியா மிர்சாவோட வேற படமே கிடைக்கலியா இட்லிவடை.

நீங்களும் சினிக்கூத்து, வண்ணத்திரை ரெஞ்சுக்கு ஆயிடுவீங்க போலிருக்கே. . . .

யோசிப்பவர் said...

பயங்கரமான ஒரு சந்தேகம்!! சானியா 'மிர்ஸா'வா? 'மிர்ஷா'வா?