பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 04, 2007

வெங்க்சர்கார் பி.சி.சி.ஐ.விளையாட்டும் டிராவில் முடிந்தது

வெங்க்சர்கார் ராஜினாமா செய்ய போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதிய விவகாரத்தில், தேர்வுக்குழு தலைவர் வெங்சர்க்கார் தமது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதனையடுத்து இதுகுறித்து விவாதிக்க வரும் 16ம் தேதி பி.சி.சி.ஐ., கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் சரத்பவார் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ., தலைவர் சரத்பவார், நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ள தேர்வுக்குழு கூட்டத்தில் வெங்சர்க்கார் பங்குகொள்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த வெங்சர்க்கார் சரத்பவார் கூறியது பற்றி தமக்கு ஏதும் தெரியாது என்றும், பி.சி.சி.ஐ., கூட்டத்தில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

1 Comment:

யோசிப்பவர் said...

கார்ட்டூன் கந்தசாமி, ஜோக்ஸ் ஜோதிகா, மொபைல் மீனா, Poll ஆகிய பகுதிகள் வெகு நாட்களாக அப்டேட் செய்யப்படாமலிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இனியும் இது தொடர்ந்தால் வெளிநடப்பு செய்ய வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்.