இன்று புத்தக வெளியீட்டு விழாவில் இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார்.
“Since I am a member of the backward community my media friends in Delhi feel that they can write anything they want to about me, but I am not going to let this affect me, I will do what I have to.."
நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் டெல்லி பத்திரிகைகளும், டிவி நிறுவனங்களும், என்னைக் குறி வைத்து தாறுமாறாக செய்தி வெளியிட்டு வருகின்றன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
புகை பிடிக்கும் பழக்கத்தை சினிமா நடிகர்கள் சினிமாவில் கைவிடச் செய்ய அன்புமணி போராடி வருவது அனைவருக்கும் தெரிந்தது. இதனால் நடிகர் விஜய், இனி தமது படங்களில் புகைக்கும் காட்சிகள் இடம்பெறமாட்டா என்று அறிவித்து விட்டார்! இது பாராட்ட பட வேண்டிய விஷயம் என்றாலும் இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) நிர்வாகத்தில், தன் மூக்கை நுழைத்து அதன் இயக்குநர் வேணுகோபாலுக்கு இவருக்கும் நடந்த லடாய் மிக கேவலமான ஒன்று. அவரது பதவிக் காலத்தைக் குறைக்கச் சட்டத் திருத்தமே கொண்டு வந்தார் அன்புமணி. இவர் எந்த காலேஜில் டாக்டர் படித்தார் என்று அனைவரும் வியந்தனர்.
மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்கிற விஷயத்திலும் இவரின் நோக்கத்தை காட்டிலும் பிடிவாதம் தான் நிறைய இருந்தது.
இவரின் இந்த பிடிவாததுக்கு திமுக, மீடியாவில் இவருக்கு ஆதரவு பெரிதாக இல்லை.
இன்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் " 'நான் ஒரு கீழ் ஜாதியை சேர்ந்தவன்(MBC)' அதனால் தான் டெல்லி மீடியா என்னை டார்கெட் செய்கிறது" என்று சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி ஜாதியை இழுப்பது சில அரசியல் கட்சிகளின் பிரமாஸ்திரம். பக்கத்தில் சுவர் இருந்தால் முட்டிக்கொள்ளவும்.


நன்றி: தினமணி










5 Comments:
அதனால் தான் இட்லிவடை அவருடய மாமனார் வீட்டில் இது மூன்றாம் தல முறையாக அரசியலில் வரமுடிந்தது. னிலப்பரபுக்கலைன் கட்ச்சியான காங்கிரசில் அவருடய மாமனாரின் அப்பா முக்கிய பதவியில் இருண்தார் !!!!!
என்ன செய்வது .. யாரையாவது குறை சொல்ல வேண்டும்..ஆனாலும் அவருடய புகை பிடித்தல் தடை கொள்கை வரவேற்க்கப்பட வேண்டியதே..
மகன் ப்ரதம மண்திரி ஆகும் வரை சோனியா காந்தி என்னென்னெல்லாம் செய்யவேண்டிஉள்ளது.கணவரை கொன்றவர்களை துதி பாடினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே.
எப்படியோ எல்லாரும் சேர்ந்து இந்துக்களுக்கு இழுக்கு சேர்க்கும் மோடியை செயிக்கவைத்துவிடுவார்கள்.
Very similar to how Azhar used the "I am discriminated because of being a muslim" weapon when cornered for match fixing.
பா.ம.க என்பது பக்கா ஜாதி கட்சி.... உண்மையிலே பார்த்த அவுங்க இனமான வன்னியர் இனத்துக்கு ஒண்ணுமே செய்யலே...ராமதாஸ் எண்ணம் எல்லாம் அவர் குடும்பம், குட்டி பொழைச்சா போதும்..
அரசியல்ல Survive பண்ணுறதுக்கு ஜாதிய இழுக்கிறது ஒரு காரணம்...அன்புமணி அவரோட அப்பா ராமதாஸ் மாதிரியே பேச கத்துகிட்டாரு போல இருக்கு..
ஆட தெரியாத வேசி தெரு கோணல் ங்குற கதையா இருக்கு..
விஜய் தலித் எனதால் தான் அவரை வம்புக்கிழுக்கிறாரோ , சாதி வெறி பிடித்த அன்புமணி?
Post a Comment