பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 12, 2007

அத்வானி பிரதமர் - தலைவர்கள் ரியாக்ஷன்ஸ்

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளராக அத்வானி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பா.ஜனதாவின் ஆட்சி மன்றக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதற்கு தலைவர்களின் ரியாக்ஷன்ஸ்...

"குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பிறகு நரேந்திர மோடியால் ஆபத்து நேரும் என்று பா.ஜனதா மேலிடம் பயப்படுவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. எனவேதான், குஜராத் தேர்தலுக்கு முன்பே, அவசரம் அவசரமாக அத்வானியை பிரதமர் பதவி வேட்பாளராக தேர்ந்தெடுத்து உள்ளனர்" - பிரதமர் மன்மோகன் சிங்

"அத்வானியின் ஜாதகத்தில், அவருக்கு பிரதமர் பதவியில் அமருவதற்கான ராசியே இல்லை" - லாலு பிரசாத்

"அத்வானி, பிரதமர் ஆக நினைப்பது பகல் கனவாகவே முடிவடையும். பா.ஜனதாவை சேர்ந்தவர் பிரதமர் பதவியை அடையும் சூழ்நிலை ஏற்படாது. ஏதோ பிரதமர் பதவி வேட்பாளர் என்ற அளவுடன் அத்வானி திருப்தி அடைய வேண்டியதுதான்" - இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் ஏ.பி.பரதன்

"மற்ற கட்சியினராலும் வாஜ்பாய் மதிக்கப்படுகிறார். ஆனால் அத்வானிக்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு நிலவுகிறது. எனவே, அவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு அரிதாகவே உள்ளது" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொலிட்பீரோ உறுப்பினர் எம்.கே.பாந்தே

"அத்வானிக்கும் எனக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், பிரதமர் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு என்னிடம் எந்த ஆட்சேபனையும் இல்லை" - ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ்

"அத்வானி தேர்வு இயற்கையானது. அவர் தேர்வு செய்யப்பட்டது பா.ஜ.,வின் உட்கட்சி விவகாரம்" பீகார் முதல்வருமான நிதிஷ் குமார்"குஜராத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் முன்பாகவே, மோடிதான் வெற்றி பெறுவார் என்ற முடிவுக்கு பிரதமர் வந்து விட்டார். நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்தாலும் தன்னால் சுயமாக செயல்பட முடியவில்லையே என்ற விரக்தி, அவருடைய கருத்து மூலமாக வெளிப்படுகிறது. கட்சியில் யாரோ ஒருவரின் `ரிமோட் கண்ட்ரோலில்' இயங்குகிறார்" ரவி சங்கர் பிரசாத், பா.ஜனதா செய்தி தொடர்பாளர்.

1 Comment:

வராகி said...

மன்மோகன் சிங்கை வேறு வழியே இல்லாமல் தான் அனைவரம் சகிதுகொண்டிருகிறோம் , இவர் அத்வானியை குறைசொல்கிறார். பாவம் மக்கள்
- வராகி