பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 13, 2007

பிரதமர் சந்தித்த (தர்ம)சங்கடம்

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் தர்மசங்கடமான சூழ்நிலையை சந்திக்க நேரிட்டது.

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ந் தேதி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 போலீசார் உயிர் தியாகம் செய்தனர்.
இத்தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர் நானக் சந்தின் மனைவி விமலா தேவி தங்களுக்கு நஷ்டஈடு அளிப்பது குறித்து அரசு கொடுத்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
(வேணுகோபால் 60 வயதை தொடர்ந்து நீட்டிக்கலாமா என்பதை விடவா இது முக்கியம் ? )

தங்களுக்கு இது போன்ற அஞ்சலி எதுவும் தேவையில்லை என்றும், தங்களது குறைகளை யாருமே செவி மடுப்பதில்லை என்றும் அவர் கூறினார். அவரது இந்த குற்றச்சாட்டு பிரதமருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிஜேபி மூத்த தலைவர் சுஸ்மா சுவராஜ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆண்டுகள் ஆகியும் உரிய நிவாரணம் அளிக்கப்படாமல் உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறினார்.

இது குறித்து உள்துறை அமைச்சருடன் பேசியிருப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள் அனைவருக்கும் நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருப்பதாகவும் கூறினார்.

உயிரிழந்தோரின் குடும்பத்தார், அஞ்சலி நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, அப்சல் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினர். மேலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி அப்சலை தூக்கிலிட வேண்டும் என்றும் கூறினர்.

1 Comment:

Anonymous said...

வேட்க்கக்கேடு!