பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 26, 2007

மீண்டும் "இட்லிவடை" - பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல!!

சம்பவங்கள் நிறைந்த அக்டோபர் 26-- வந்த மெயிலை என் அஜாக்கிரதையால் க்ளிக் செய்து இட்லிவடை அகவுண்ட் பறிபோனது நினைவிருக்கலாம். வலைப்பதிவை மீட்டுவிட்டேன். அது எப்படி முடியும் ? இது நானே செய்த ஒரு செட்டப் என்று சிலர் புழுதியை கிளப்பிவிட்டார்கள். சிலர் ஏன் முடியாது என்று ரிசர்ச் செய்தி பதிவு போட்டார்கள்.

என் மெயில் அகவுண்டை ஹாக் செய்த மகானுபாவர்கள் Secondary email, Secret Question இன்னும் பிற முக்கியமான விஷயங்களை மாற்றிவிட்டார்கள் அல்லது அழித்துவிட்டார்கள்.

கூகிளிடம் கேட்டதற்கு இந்த விஷயம் எல்லாம் இல்லை என்றால் கிடைப்பது கஷ்டம் என்றார்கள். விடவில்லை, எனக்குத் தெரிந்த தகவல்களை - secondary mailல் இருந்த சில ஆதாரங்களுடன்-- அவர்களிடம் சொல்லி திரும்பவும் கேட்டேன். தெரிந்த நண்பர்கள் உதவி செய்தார்கள்.

இன்று, இந்த டிசம்பர் 26ல் அந்தச் சரித்திர முக்கியத்துவமான மெயில் கூகிளிடமிருந்து வந்தது. "இந்தாப்பா உன் மின்னஞ்சல், இனிமேலாவது ஜாக்கிரதையா இரு!" என்று அவர்களிடமிருந்து மெயில் வந்தவுடன், புல்லரித்து, திறந்து, என் தகவல்களை எல்லாம் ஒரு முறை சரிபார்த்துவிட்டு, அதில் ஹாக் செய்தவர் என்ன என்ன வில்லங்கம் செய்திருக்கிறார் என்று பார்த்தேன். புத்திசாலித்தனமாக, தான் என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் ஒரு தடயம் கூட விட்டு வைக்காமல் உடனுக்குடன் அழித்திருக்கிறார்....., ஒரு தடயம் தவிர! :)

அந்தத் தடயத்தை வைத்து யார் என்ற விவரத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். கண்டுபிடிக்கப்பட்ட பெயரைக் கேட்டா.....

....தமிழ் வலைப்பதிவே சும்மா அதிருமில்ல!!!!

23 Comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

அது யார்னு சொல்லமாட்டீங்கன்னு தெரியும்.அதுனால் கேட்க மாட்டோம்!
இன்னைக்கு நிம்மதியா/சந்தோஷமா தூங்குங்க.

PRK said...

யாரு?

Anonymous said...

வர வர தமிழ் பதிவுலகம் திடுக்கிடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்மத் திரைப்படங்களைப் போல ஆகிவிட்டது! இட்லிவடையாருக்கு பதிவுலக ஷெர்லக் ஹோம்ஸ் என்ற பட்டத்தை வழங்குவதில் பெருமையடைகிறோம்!

இப்படிக்கு
முதல்வர்
அனானி பல்கலைகழகம்

Anonymous said...

WARNING: Google’s GMail security failure leaves my business sabotaged -

http://www.davidairey.co.uk/StaticPage.html

பினாத்தல் சுரேஷ் said...

என் காதில மட்டும் சொல்லுங்களேன் ப்ளீஸ்!

கால்கரி சிவா said...

இந்த மாதிரி புல்லுருவிகளை அடையாளம் காட்டவேண்டியது உங்களை மாதிரி மூத்த வலைப்பதிவாளர்களின் கடமை.

அந்த கயவனை அடையாளம் காட்டுங்கள் தயவுசெய்து

Anonymous said...

இட்லி வடை

உங்களுக்கு ஆதாரபூர்வமாக அந்தக் கிரிமினலைத் தெரியும் என்றால் தைரியமாகச் சொல்ல வேண்டும், சும்மா இப்படி அதிருது, கிதிருது என்று சொல்வதெல்லாம் விடலைத்தனமாக இருக்கிறது. தெரியும் என்றால் பெயரைத் தயங்காமல் சொல்லுங்கள். பார் டெண்டர் யார் என்று கண்டுபிடித்த பொழுது அந்தப் பொறுக்கியின் பெயரை வந்தியத் தேவன் துணிந்து அறிவித்தார். அந்த வக்கிரம் பிடித்த அயோக்கியன் இன்னும் யோகியன் மாதிரி எழுதிக் கொண்டு திரிந்தாலும் கூட அந்தத் தமிழ் அசிங்கம் யார் என்று அனைவருக்கும் தெரிய வந்தது. உண்மையைச் சொல்லும் துணிவு இருந்தால் வெளிப்படையாகச் சொல்லவும் அதை விட்டு விட்டு இப்படி அதிருது என்றெல்லாம் எழுதுவது வெட்டி சவடால் தனமாகத் தெரிகிறது. பெயரைச் சொல்லுங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் அதைச் சொல்லத் துணிவு இல்லையென்றால் இப்படி சிறுபிள்ளைத்தனமாக எழுத வேண்டாம்

அன்புடன்
ச.திருமலை

இலவசக்கொத்தனார் said...

ஆஹா! முடியாததை செஞ்சுட்டீங்க போல! இன்னும் கொஞ்சம் க்ளூ குடுங்களேன்....

Srinivasan said...

Dear IDLI VADAI,
Vanakkamunga.
very nice to know the investigation and RECOVERY.
Karthar ummai kakkattum.


Cho has written foreword to Kalaingar Kaaviam by VAALI.

Please find it and up PLEASE.

Thanks and Good wishes for all the PLEASENT TIMES AHEAD.

Salutes to all your EFFORTS.

God Bless,.

affly,

srinivasan
Perth, Australia.

karthik said...

Pakistan's Bhutto killed by bombing

Anonymous said...

adhe kabodhinnu therinju pochhu.. athai velippadaiya sonna enna ?

Anonymous said...

இப்படியெல்லாம் எழுதினால் சில பதிவர்கள் மீது அனாவசியமாக சந்தேகம் வருகிறதே! இருக்கிற குழப்பம் போதாதா?

Seemachu said...

யாருங்க அது? பப்ளிக்கா போட்டு உடைக்க வேண்டியதுதானே...

சீமாச்சு

அருண்மொழி said...

//பார் டெண்டர் யார் என்று கண்டுபிடித்த பொழுது அந்தப் பொறுக்கியின் பெயரை வந்தியத் தேவன் துணிந்து அறிவித்தார். அந்த வக்கிரம் பிடித்த அயோக்கியன் இன்னும் யோகியன் மாதிரி எழுதிக் கொண்டு திரிந்தாலும் கூட அந்தத் தமிழ் அசிங்கம் யார் என்று அனைவருக்கும் தெரிய வந்தது. //

இந்த matterல் IP, Tracking என்று சொன்னார்கள். ஆனால் காமக் கதை எழுதி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட வைதீகஸ்ரீக்களை என்ன சொல்வது. சிறிது கூட வெட்கம் இல்லாமல் உலவும் இந்த வக்கிரம் வழிந்தோடும் அயோக்கியன் முன்னே தமிழ் அசிங்கம் எல்லாம் ஜுஜுபி.

IdlyVadai said...

ரகசியமாக கேட்டவர்களுக்கும் பொதுவில் கேட்டவர்களுக்கும் இந்த பிரச்சனையை வேறு விதமாக அனுக உள்ளேன். இப்படி பொதுவில் சொல்லுவதினால் சில சங்கடங்கள், வேண்டாத விவாதங்கள், திசை திருப்பும் முயற்சிகள் எல்லாம் வரும்.

திருமலைக்கு,

//உங்களுக்கு ஆதாரபூர்வமாக அந்தக் கிரிமினலைத் தெரியும் என்றால் தைரியமாகச் சொல்ல வேண்டும், சும்மா இப்படி அதிருது, கிதிருது என்று சொல்வதெல்லாம் விடலைத்தனமாக இருக்கிறது.//

வேகத்தை காட்டிலும் விவேகம் வேண்டும். தைரியம் கடமை உணர்ச்சி வலைப்பதிவில் கெட்ட வார்த்தைகள். எப்படி என் மெயில் அகவுண்டை மீட்டேனோ அதே போல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செய்வேன்.

//பெயரைச் சொல்லுங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் அதைச் சொல்லத் துணிவு இல்லையென்றால் இப்படி சிறுபிள்ளைத்தனமாக எழுத வேண்டாம்//

இப்போதைக்கு எனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக அடுத்த க்ட்ட நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

துணிவாக நடவடிக்கை எடுத்த பின் இங்கே சொல்லுகிறேன். இட்லிவடை என்றாலே சிறுபிள்ளை தனம் தான் என்று எல்லோருக்கும் தெரியும் :-)

BTW, உங்க கடமை உணர்ச்சிக்கு தலை வணங்குகிறேன். !

சில பின்னூட்டங்கள் அனுமதிக்கவில்லை.

Anonymous said...

IdlyVadai Sir
It is imperative for you to take legal action too against this individual(s) who hacks into others accounts.This is a criminal action and is legally punishable offence.

Please reveal the person at a convinient time so that everyone in thamizmanam is vary of this individual(s)

Raam said...

இட்லி வடை, நல்லது.. ஆனால் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இப்படி செய்தவர்களை அடையாளம் காட்ட வேண்டும். மற்றவர்களை சந்தேகத்தில் இருந்து விடுவிக்கும்..

ராம்ஜி

Nithiya said...

உங்களுக்கு ஆதாரபூர்வமாக அந்தக் கிரிமினலைத் தெரியும் என்றால் தைரியமாகச் சொல்ல வேண்டும்

Anonymous said...

இட்லி வடை

எனது கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்.

உங்களுக்குத் தெரிந்த பின்பும் மறைக்கப் பார்க்கிறீர்களோ என்று நினைத்து விட்டேன். நடவடிக்கை எடுப்பது குறித்து மிகவும் சந்தோஷம். பொதுவில் போட்டு உடைப்பதைக் கடைசியில் செய்து கொள்ளலாம். ஒரு வேளைத் தயங்குகிறீர்களோ என்று நினைத்துக் கடினமாகப் பேசி விட்டேன். உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அவ்வாறே செய்யுங்கள்.

பார் டெண்டர் விஷயத்தில் யாரும் கட்டப் பஞ்சாயத்து செய்யவில்லை, வெளிப்படையாக வந்தியத்தேவனும், பி கே எஸ்ஸும் அறிவித்தனர். எங்கள் மீது கேஸ் போடுங்கள் அல்லது தமிழ் இணையத்தில் உள்ள பெரியவர்கள் முன்பு நிரூபிக்கிறோம் என்று துணிந்து சொன்னார்கள். இது வரை அவனை ஆதரித்தவர்களும் அவனுக்காக வக்காலத்து வாங்கிய எவனும் வாய் திறக்கவில்லை. சசிங்கம் பிடித்த இழி பிறவிகள். இப்பொழுது உங்களுக்கு நடந்துள்ளது கிரிமினல் குற்றம். அதற்காக சட்டப் படி அந்தக் கிரிமினல்கள் உள்ளே தள்ளப் படுவதுதான் முக்கியம். அதற்கு நீங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இதற்காக எனது தரப்பில் இருந்து ஏதேனும் செய்ய வேண்டி இருப்பின் தயங்காமல் தெரிவிக்கவும். ஆனால் நடவடிக்கைகள் எடுத்து முடித்த பிறகு உரிய நேரத்தில் அந்த அயோக்கிய நாயையை இங்கு நீங்கள் பொதுவில் அறிவித்தே ஆக வேண்டும்

அன்புடன்
ச.திருமலை

idlysambarr said...

நான் சமிபத்தில் படிக்கும் முக்கியமான
வலைபதிவுகளில் இட்லிவடை முதலாவது
(நம்பவில்லை என்றால் எனது வலைப்பதிவின் பெயரை சரிபார்க்கவும்.)
நீங்கள் வலைப்பதிவை இழந்தது பெற்றது
எல்லாம் தொடர்க்கதையை ஒரே episode-ல் பார்த்தது போல படித்து முடித்தேன்.(இதை அப்படியே நீங்கள்
copyright போட்டு யாருக்காவது
thiriller நாவலுக்கு விற்கலாம்.)
anyhow நீங்கள் வலைப்பதிவை மீட்டதில்
என(ங்களு)க்கு மிக்க மகிழ்ச்சி.

IdlyVadai said...

திருமலை

//
எனது கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்.
//

அட லூஸுல விடுங்க !

Narayanan said...

i am a regular reader of your blog since i found your blog in a.v. this kind of hijacking is an act of cowards. Of course you can choose the best course of action, however please do something so that they dont dare to do this again.
SankaraNarayanan,
San Francisco.

enRenRum-anbudan.BALA said...

இட்லிவடை,

திருமலைக்கு எப்போதுமே, களவாணிப்பசங்களைப் பத்தி கேள்விப்பட்டா, கோபம் வந்து விடும் :) அதான், கொஞ்சம் காட்டமா எழுதிட்டாருன்னு நெனைக்கிறேன் ! நீங்க தான் கண்டுக்கிடலைன்னு சொல்லிட்டீங்களே !

ஆனா, எப்பவாவது அந்த ஹேக்கர் யாருன்னு அறிவிப்பீங்கன்னு நம்பறேன் ! 'நான் அவனில்லை' என்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்பறேன் :))))))