பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 25, 2007

அனைத்திற்கும் அன்பே அடிப்படை - கலைஞர் கிறிஸ்துமஸ வாழ்த்து

தீபாவளி வாழ்த்து சொல்லாத கலைஞர் கிறிஸ்துமஸ் வாழ்த்து மட்டும் சொல்லுவார். இந்த வருஷம் சொன்ன கிறிஸ்துமஸ் வாழ்த்து. சாண்டா கிளாஸ் அவருக்கு பை நிறைய ஓட்டு போடுவாராக.


தமிழகம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் என் இதயம் கனிந்த இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

தமிழகத்தில் வாழும் அனைத்துச் சமுதாய மக்களும் இணக்கமுடன்கூடி இன்பவாழ்வு காண இயன்ற அனைத்தையும் நிறைவேற்றிட உறுதிபூண்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிவரும் தமிழக அரசு இந்த ஆண்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுபோலவே, கிறிஸ்தவர்களுக்கும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிச் சிறுபான்மைச் சமுதாயத்தின் சீரிய நண்பனாகத் திகழ்கிறது.

நல்வாழ்த்துக்கள்

"அனைத்திற்கும் அன்பே அடிப்படை'' என்ற ஏசுநாதரின் தொண்டுள்ளம் காரணமாக, "கிறிஸ்தவம்'' என்ற சொல்லில் எளிமை, மன்னிக்கும் குணம், ஈகை, பரோபகாரம் போன்றவை அடங்கியிருப்பதாகக் கூறுவர். அந்த வகையில் ஏசுபெருமான், "அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்களுக்கும் உதவி செய்; உன்னைத் தூற்றுபவர்களையும் போற்று'' என்று கூறி மக்களிடம் சகிப்புத் தன்மையை-அன்பை வளர்க்கிறார்.

ஏசுபெருமான் உரைத்த இந்த நெறிபோற்றி அன்பர்கள், நண்பர்கள் மீது மட்டுமல்லாமல், காழ்ப்புணர்வும், அகங்காரமும் கொண்டு நம்மைக் காய்பவர்கள் மீதும் அன்பைப் பொழிவோம்! சமுதாயத்தில் வேற்றுமைகளைக் களைவோம்! அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்போம்!

ஏழை-எளியோர், இயலாதோர், நலிந்தோர், மெலிந்தோர் என எல்லோரும் ஏற்றம்பெற இடையறாது உழைப்போம்! வளம் காண்போம் என இந்த இனிய கிறிஸ்துமஸ் திருநாளில் சூளுரைத்துச் செயல்படுவோமாக!

16 Comments:

Anonymous said...

The "anbu" of Kalaignar is confined
and restricted to only Muslims and
Christians. He will not greet
people on Deepavali, Ayudha Pooja,
Vinayaka Chathurthi, Ram Naumi and
Krishna Janmashtami, but will give
his benediction to all "peace loving" brothers in Christianity and Islam., drink kanji at Iftar
parties but not eat kozhukattai or drink payasam. His political upbringing is all based on jealousy, hatred, contempt and
ridicule for the religion he was
born in. It is one thing to disown and become an agnostic
without being a hater, but "Kalaignar's" creed has been
only to malign Hindus. Hindus and
Hinduism are his whipping boys. Let him put his preaching first to practice. Let him treat all creeds and religions alike.
Then his sermon will bear semblance
of sincerity. Verum vaarthai jaalangalaal thanadu pulamaiyai vendumaanaal parai chaatrikkollalaam.

STAUNCH HINDU said...

Who ever come to power in Tamilnadu the government is run with hundi collections and other collections from Temples. But whenever DMK comes to power they are always anti-hindus. Next election will teach them a lesson (let it be for Tamil Nadu assembly or Parliament)

கலைஞர் கைத்தடி said...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொன்ன என் தலைவா.. நி வாழ்க, உன் கொற்றம் வாழ்க, உன் குடும்பம் வாழ்க, உன் தமிழ் வாழ்க, உன் கனவு வாழ்க.


எனக்கு அளவில்லா மகிழ்ச்சி அளித்த தலைவா சுப்பர்.

Anonymous said...

thats because no other people celebrate death other than barabric hindus. to begin with no one would want to kill anybody and if it comes to god i dont think he can have an exception and if at all he does that and he wants to mark it with a celebration, i personally feel that there is something wrong with that god and thats y kalaignar does not wish the people on diwali or watever it is called

rina said...

தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லலாம்.. திபாவளிக்கு தேவையில்லாதது..
ஒரு கற்பனை கதாபாத்திரம் ஒர் அரக்கனை கொன்றதற்கு , நாம் ஏன் கொண்டாட வேண்டும்??
அதுவும் ஒரு குறிபிட்ட இனத்தை உயர்த்த சொல்லப்பட்டா கதைக்கு ஒரு பண்டிகை , அதுக்கு ஒரு வாழ்த்து கேடா???

தமிழ் புத்தாண்டுக்கும், பொங்கலுக்கும் வாழ்த்தலாம், தேவையற்ற தீபாவளிக்கும், கிருஷ்ன செயந்திக்கும் எதற்கு???

பினாத்தல் சுரேஷ் said...

Labels: அறிக்கை ஆன்மீகம்?
:-)))

Anonymous said...

//தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லலாம்.. திபாவளிக்கு தேவையில்லாதது..
ஒரு கற்பனை கதாபாத்திரம் ஒர் அரக்கனை கொன்றதற்கு , நாம் ஏன் கொண்டாட வேண்டும்??//

Sounds reasonable. But can you apply the same logic towards Bakrid / Muharram festivals???

May be we have to forget the 'Cross Wars' and 'Satanic Verses' and exchange pleasantries on those occaasions just to keep the harmony. It sounds great.

//ஒரு குறிபிட்ட இனத்தை உயர்த்த சொல்லப்பட்டா கதைக்கு ஒரு பண்டிகை , அதுக்கு ஒரு வாழ்த்து கேடா???//

I dont know whether you are talking about Arabs or Romans or Jews...

Who has the evidence that Jesus Christ born on Dec 25th? Constantine institutionalized the religion to chase away Pagans. The Pagans are totally erased from their native lands. Either they had been converted or killed. So the Mayans, Egyptians etc.

If you dig out the history you cant celeberate any festivals.

Or just celeberate all the festivals with open mind. Its SIMPLE.

தமிழன் said...

தமிழன் தீபாவளி கொண்டாடுவது போல ஒரு அசிங்கம் எதுவும் இல்லை .

ஒரு தமிழனை கொன்றதற்காக வட இந்தியன் கொண்டாடுவதை கலைஞர் கண்டிக்கவேண்டும் .

அருண் said...

நரகாசுரன் தமிழன் என்று நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன் தமிழன் அவர்களே. தகவலுக்கு நன்றி.
Laugh on Loud :)

யோசிப்பவர் said...

//ஒரு கற்பனை கதாபாத்திரம் ஒர் அரக்கனை கொன்றதற்கு , நாம் ஏன் கொண்டாட வேண்டும்??
அதுவும் ஒரு குறிபிட்ட இனத்தை உயர்த்த சொல்லப்பட்டா கதைக்கு ஒரு பண்டிகை , அதுக்கு ஒரு வாழ்த்து கேடா???
//
//தமிழன் தீபாவளி கொண்டாடுவது போல ஒரு அசிங்கம் எதுவும் இல்லை .
//

இன்னுமா இந்த ஊரு இவிங்கள நெம்பிகிட்டிருக்கு?!?!
;-)

அதே தமிழன் said...

ராவணனுக்கு நாங்கள் திருவிழா கொண்டாடினால் , வட இந்தியர்கள் வாழ்த்து சொல்வார்களா?

தைப்பூசத்தை தமிழர்கள் சிறப்பாக கொணடாடவும், அதற்கு அரசு விடுப்பும், வாழ்த்தும் சொல்ல கலைஞர் வழிசெய்யவேண்டும்

Anonymous said...

It will be apt if these so-called "Tamil"ans & actor Karunanidhi start celebrating Ravanan. After all, Ravanan has nurtutred these people's Tamil culture (not my Tamil culture) by grabbing others' wife. These worthies are proving the Tamil proverb "Inam Inathodu Serum".

Anonymous said...

//grabbing others' wife//

Are you alluding to Vijayakumari SS Rajendrans wife and possibly many others?In this sense Manja Thundu would put even Ravan to shame.His spread was far greater perhaps not now but certainly in his younger days,Manja Thundu followed his bearded masters advice to the t..namely treat every woman as yours and yours only..

Chanakyan said...

First, Deepavali is not in favor of Brahmins as "rina" is referring to. Krishna belongs to Yadava community he is not a brahmin and nor the Pandavas or the Gauravas. Does "rina" mean to say that Yadavas are not to be supported or praised? my dear it is against social justice.
Second "anonymous" said Nobody celebrates death other than the barbaric hindus. Well Mr.Bush, who celebrated the death of Saddam is a hindu, all those people who celebrated the death of sadaam in Iraq and America are all Hindus, right? Dont get history wrong anonymous.
Kalaignar says he will extend greetings only on Pongal, the festival of Tamils. I have a doubt, No Christian or Muslim celebrates Pongal then does it mean that Christians and Muslims are not Tamils? Hello Kalaignaree, what is your answer?

swami said...

tamil, tamil yendru pulambum
ivargal,
tamil actor/actress illamal,
vetru mozhi actor/actress naditha
film'ai tamilil edukka koodathu
yena sattam kondu vara vendum.

ithanal, thamilarukku cine field'il
velai vaaipugal athigam kidaikkum.

swami said...

ஐயோ ஐயோ
நல்ல நாளில் இந்த மனுஷனுடைய ஆசிகளை விட
நம் பெற்றோரின் ஆசியை எதிர் பாருங்கள் அது
தீபாவளி கிறிஸ்துமஸ் ரமலான் எந்த பண்டிகையை இருந்தாலும் நமக்கு
நல் ஆசிதான்

பண்டிகை என்பது ஜாதி மதம் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து
நண்பர்களை வாழ்வதற்கே

கலைஞரின் இத்தகைய செயல்கள் கண்டிக்க தக்கதே
ஆனால் பூனைக்கு யாரப்பா மணியை கட்டுவது ?